29 C
Chennai
சனிக்கிழமை, நவம்பர் 28, 2020

பஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...
More

  நிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்

  தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  கமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா?

  சமீபத்தில் அர்ஜூன் தாஸ், பூஜா ராமசந்திரன், வினோத் கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் அந்தகாரம். இப்படம் அமேசன் பிரைமில் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படத்தை...

  மின்னலாய் மின்னலாய்.. மழைநீரில் குதித்து விளையாடும் சாக்‌ஷி…

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மற்றும் மாடல் சாக்‌ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அவை இன்னும் வெளியாகவில்லை.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள்...

  இசைப்பள்ளிக்கு எஸ்பிபி., பெயர்! ஆந்திரா அரசு அளித்த கௌரவம்!

  இப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.

  கமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா?

  சமீபத்தில் அர்ஜூன் தாஸ், பூஜா ராமசந்திரன், வினோத் கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் அந்தகாரம். இப்படம் அமேசன் பிரைமில் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படத்தை...

  மின்னலாய் மின்னலாய்.. மழைநீரில் குதித்து விளையாடும் சாக்‌ஷி…

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மற்றும் மாடல் சாக்‌ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அவை இன்னும் வெளியாகவில்லை.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள்...

  உதயநிதியை சந்தித்த எஸ்.வி.சேகர்: திமுக.,வில் இணைந்ததாக கிளம்பிய பரபரப்பு!

  இன்று அவரது பிறந்தநாள் என்று தெரிந்ததால், அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னோம். அவருடன் நான் ஒரு படமும்

  பக்கா அரசியல் படம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா….

  தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என பேர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.இப்படத்திற்கு பின் சூரிவை வைத்து...

  எடப்பாடியாரே..! அச்சம் கொரோனா மீதா?! பாஜக., மீதா?

  இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். இந்துக்களை இழிவு செய்பவர்களை தட்டிக் கேட்போம் என்றாவது சொல்லுங்கள்.

  rajini-prayer-for-his-fan-darshan

  இந்துவாக பிறப்பது ஒரு வரம்…

  பாஜக நடத்துவதாக அறிவித்த ‘வேல் யாத்திரை’க்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

  கொரோனா பயத்தை புறக்கணித்து பள்ளி, கல்லூரிகளை திறக்க ஆலோசனை செய்து கொண்டிருக்கும் அரசு, இந்த யாத்திரயால் பாதிப்பு வரும் என்று எப்படி நினைக்கிறது?

  அரசியல் கட்சிகள் தாங்கள் நடத்தும் கூட்டங்களையோ, ஆர்பாட்டங்களையோ தவிர்க்க நினைத்தார்களா? விதிக்கப்பட்ட தடையையும் மீறி அவர்கள் ஆர்பாட்டம் நடத்தவில்லையா?

  திரையரங்குகளை திறக்க அனுமதியளித்துள்ளது அரசு. கொரோனா திரையரங்குகளுக்குள் நுழைய மாட்டேன் என்று அரசிடம் உறுதியளித்துள்ளதா?

  அரசியல்வாதிகளின் உலகமே தனி. பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயமும், எதிர்கட்சிக்கு ஒரு நியாயம் இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். அதே போல், நம் அரசியல் கட்சிகள், ஒரு மத நிகழ்விற்கு ஒரு நியாயத்தையும், மற்றொரு மத நிகழ்விற்கு இன்னொரு நியாயத்தயும் கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறோம்.

  ஆனால், முதல் முறையாக, ஒரு கட்சிக்கு எதிராக இருப்பதாக நினைத்துக் கொண்டு, ஒர் மதத்திற்கு எதிராக ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இணைந்திருக்கிறது. கொழுக்கட்டைக்கு திறக்காத வாய் போல.

  அரசியல்வாதிகளின் நியாயமே தனி. கொரோனாவால் இறந்துபோனது குப்பனோ, சுப்பனோ என்றால் பிணத்தை கொடுக்கமாட்டார்கள். அரசியல் தலைவர்கள் மற்றும் புகழ் பெற்றவர்கள் என்றால் பிணம் வீட்டுக்கும் வரும். இன்னும் சிலரின் பிணத்திற்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழும் கொடுக்கப்படும். அப்படிப்பட்டவர்களின் இறுதி ஊர்வலத்தில் கூட்டமாக மக்கள் கலந்துகொள்கிறார்களே! அந்தக் கூட்டத்தில் கொரோனா பரவாதா? தமிழக பொருளாதாரத்தை தன் பிடியில் வைத்திருக்கும் டாஸ்மாக் கடைகளின் மூலமாக கொரோனா பரவுவதில்லையா? அன்றாடம் பஸ்களில் கூட்டமாக மக்கள் பயணிக்கிறார்களே அதில் கொரோனா பரவுவதில்லையா?

  இதிலெல்லாம் பரவாத கொரோனா, ‘வேல் யாத்திரை’யால் பரவும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

  இது ஒரு புறம் இருக்கட்டும்.

  vetrivel
  vetrivel

  கவி காளமேகத்தைப் பற்றி நம்மில் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. ஒரு முறை, ஒரு குசும்புப் புலவர், கவி காளமேகத்திடம் சென்றார்.

  ‘ஐயா! நீங்கள் ஒரு பெரிய புலவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். உங்களால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?’, என்று கேட்டார்.

  ‘முருகன் அருளால் முடியும். “வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?”, என்று கேட்டார் காளமேகம்.

  ‘வேலிலும் வேண்டாம், மயிலிலும் வேண்டாம். “செருப்பில் தொடங்கி, விளக்கமாறில்” முடித்தால் போதும்’, என்று நையாண்டியாகச் சொன்னார் அந்தப் புலவர்.

  புன்சிரிப்போடு பாடலைத் தொடங்கினார் கவி காளமேகம்.

  “செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
  பொருப்புக்கு நாயகனை புல்ல-மருப்புக்குத்
  தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
  வண்டே விளக்கு மாறே!

  “‘செரு’ என்றால் போர்க்களம். ‘செருப்புக்கு’ என்றால் போர்களம் புகும் என்று பொருள்படும். அப்படி போர்க்களத்தில் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம். குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்”, என்பதே இப்பாடலின் பொருள். விளக்குமாறே என்பதற்கு, ‘விளக்கம் சொல்லுமாறு’ என்று அர்த்தமாகிறது.

  ஒருவேளை வில்லியம் ஜோன்ஸ் போன்ற அதிமேதாவிகள் இந்தப் பாடலை படித்திருந்தால், ‘செருப்புக்கு’ என்ற வார்த்தைக்கு, ‘செப்பல்’ என்றும், ‘விளக்கமாறே’ என்ற வார்த்தைக்கு ‘ப்ரூம் ஸ்டிக்’ என்றும் விளக்கம் எழுதியிருப்பார்.

  அதைப் படிக்கும் நம் குதர்க்கவாதிகள் ‘செப்பல்’ என்ற வார்த்தையை ‘பிஞ்ச செருப்பு’ என்றும், ‘ப்ரூம் ஸ்டிக்’ என்பதை ‘தேஞ்சுபோன தொடப்பம்’ என்றும் மீண்டும் தமிழில் மொழி பெயர்த்திருப்பார்கள். பல வருஷம் ஆயிடுச்சில்ல, செருப்பு, பிய்ந்து போகாமல் இருக்குமா? விளக்கமாறு, தேய்ந்து போகாமல் இருக்குமா?

  மேலே படித்த இரண்டு பிரச்னைகள் மட்டுமல்ல. இந்து மதத்தை அசிங்கப்படுத்தும் நிகழ்வுகள் தமிழகத்தில் அன்றாடம் நடக்கிறது. வேறு வழியில்லாமல், நாமும் நம் மதத்தின் அடையாளங்களை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

  kings
  kings

  இந்தப் பதிவு இந்து மதத்தையும், மற்ற மதத்தையும் ஒப்பிட்டு பார்ப்பதற்காக எழுதப்பட்டதல்ல. நம் அரசியல்வாதிகளின் பார்வையில் எப்படி இந்து மதம் மற்ற மதங்களிடமிருந்து வேறுபடுகிறது என்பதை விளக்கவே எழுதப்பட்டது. நம் மதத்தை எப்படி மதிக்கிறோமோ, அப்படியே பிற மதத்தையும் மதிக்க வேண்டும். அதே போல், நம் மதமும் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

  தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை:

  ஒரு கரப்பான் பூச்சி. எந்த நேரமும் உணவைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. வெறுத்துப் போனது. ஒரு நாள் அது சாதுவை சந்தித்தது. பேசியது.

  ‘சாதுவே! எனக்கு ஒரு வரம் தாருங்கள்’, என்று கேட்டது கரப்பான் பூச்சி.

  ‘கேள் தருகிறேன்’, என்றார் சாது.

  ‘சாதுவே! எனக்கு அடிக்கடி பசிக்கிறது. அதனால், எல்லா நேரங்களிலும் உணவைத் தேடி அலைகிறேன். இதிலிருந்து தப்பிக்க ஒரு வரம் தாருங்கள். அதாவது, எனக்கு பசி என்பதே இருக்கக்கூடாது. சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் சத்துக் குறைபாடும், சோர்வு எனக்கு வரக்கூடாது’, என்று வரம் கேட்டது கரப்பான் பூச்சி.

  வரத்தை கொடுத்தார் சாது. அங்கிருந்து கிளம்பினார்.

  அன்றிலிருந்து கரப்பான் பூச்சிக்கு பசி இல்லாமல் போனது. உணவு தேட வேண்டிய அவசியமில்லாமல் போனது. குஷியாக அங்குமிங்கும் ஓடியது. மரத்தடியில் உட்கார்ந்திருந்த சிறுவனின் காலில் ஏறி விளையாடியது. கோபமடைந்த சிறுவன் பக்கத்திலிருந்த ஒரு குச்சியை எடுத்து கரப்பான் பூச்சியை அடித்தான். கரப்பான் பூச்சியின் தலை துண்டாகியது.

  கரப்பான் பூச்சியின் உடலமைப்பில் ஒரு சிறப்பு உண்டு. மற்ற உயிரினங்கள் தலையில்லாமல் ஒரு நொடிகூட உயிர் வாழாது. ஆனால், கரப்பான் பூச்சி தலையில்லாமல் எட்டு நாட்கள்வரை உயிரோடு இருக்கும். அதன் பிறகு உணவு சாப்பிடாததால் மட்டுமே அது உயிர் இழக்கும். சரி மீண்டும் கதைக்கு வருவோம்.

  நம் கதையில் வரும் கரப்பான் பூச்சி பசியில்லா வரம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், சாப்பிடாமல் இருப்பதால் அதற்கு எந்த இழப்பும் இருக்காது என்பது அது பெற்ற வரம். ஆகையால், தலையில்லாத கரப்பான் பூச்சி உயிரிழக்காமல் இருந்தது. யாராவது அதைத் தொட்டால் கால்களை அசைக்கும். அதுதான் அதிகபட்சமான அதன் இயக்கம். தலை இல்லாததால் அது சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டது. வாய் இல்லாததால் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தும் திறனையும் இழந்துவிட்டது. உயிர் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதுவும் கால்கலை அசைக்க மட்டும் உதவியது.

  அந்த வழியே செல்வோரெல்லாம் கரப்பான் பூச்சியை ஒரு குச்சியால் தொடுவார்கள். அது கால்களை அசைக்கும். அது உயிரோடு இருப்பதற்கான ஒரே அடையாளம் அது. ‘இன்னும் சாகவில்லை’, என்று சொல்லிவிட்டு நகர்வார்கள். இப்படியே நாட்கள் நகர்ந்தன

  கரப்பான் பூச்சி பெற்றது வரமா? சாபமா? நிச்சயமாக சாபம்தான். வரமாக பெற்றதை சாபமாக மாற்றியது யார்? இந்த நிலைக்கு யார் காரணம்? உயிரையும் விட முடியாமல், முன்புபோல துள்ளிக் குதித்து எழுந்து ஓடவும் முடியாமல் ஆயுளின் எல்லைக்கு காத்திருக்கிறது கரப்பான் பூச்சி.

  கிட்டத்தட்ட இந்த கரப்பான் பூச்சியின் நிலையில்தான் நம் இந்து மதம் இருக்கிறது. மற்ற மதங்களை ஒப்பிட்டு சொல்லவில்லை. நம்மை பொறுத்தவரை நம் மதம் மிகவும் சிறப்பானது. நம் இதிகாசங்களில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை. உயரிய வாழ்க்கை முறையை கொண்டது நம் மதம்.

  நாம் இந்து மதத்தில் பிறந்தது ஒரு வரம். அந்த வரத்தை ஒரு கரப்பான் பூச்சி போல, அதாவது தலையை இழந்து வெறும் உணர்வற்ற நிலையில் வைத்திருக்கிறோம். சிந்திப்பதில்லை, கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை. இவையெல்லாம் விட, நாம் நிந்திக்கப்படும் போது குரல்கூட எழுப்புவதில்லை.

  நம் அசைவுகள் எல்லாமே கரப்பான் பூச்சியின் கால் அசைவுகளைப் போல பயனில்லாமல் இருக்கிறது. தலையில்லாத கரப்பான் பூச்சியை எந்த கண்ணோட்டத்தில் நோக்கினார்களோ, அப்படித்தான் நம்மையும் இன்று இந்த உலகம் நோக்குகிறது. நாம் கரப்பான் பூச்சியல்ல என்பதை இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் நேரம் வந்துவிட்டது. அஹிம்சா முறையில், நம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

  rss-bharatha-matha
  rss-bharatha-matha

  வேல் யாத்திரையைப் போன்ற நிகழ்வுகள் இன்று அவசியமாகிறது. ஏனென்றால், இந்து மதம் அவமதிக்கப்படும் போது, இது போன்ற நிகழ்வுகள் மட்டுமே நாம் இன்னமும் உணர்வோடு இருக்கிறோம் என்பதை வெளிக்காட்டும். அப்படியில்லையென்றால், நாம் உயிரோடு மட்டுமே இருக்கிறோம் என்பதை ஒரு கரப்பான் பூச்சியைப் போல இந்து மத எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள நேரிடுகிறது.

  வேல் யாத்திரை வேண்டாம் என்று சொல்லும் கட்சிகளே! நாங்கள் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்கிறோம். இந்துக்களை இழிவு செய்பவர்களை தட்டிக் கேட்போம் என்றாவது சொல்லுங்கள். எதையுமே பேசாமல், இந்துக்களின் நம்பிக்கைகளை அசிங்கப்படுத்துவதை வேடிக்கை பார்க்கும் நிலை இனியும் தொடரக்கூடாது.

  இது போன்ற அவலங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்றால் இந்துக்கள் கண்டிப்பாக ஒரு அணியில் திரள வேண்டும். நீங்கள் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும், உறுப்பினராக இருங்கள். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். ஆனால், இந்து என்று ஒற்றைக் குரலில் சொல்லுங்கள். “நான் இந்து. என் மதத்தை அசிங்கப்படுத்துபவர்களை அரசியல் ரீதியாக புறக்கணிப்பேன்’, என்பதை உரக்கச் சொல்லுங்கள். பிறகு பாருங்கள். உங்கள் கட்சித் தலைமை இந்துக்களை மதிக்கக் கற்றுக் கொள்ளும்.

  இறுதியாக, மேலே சொன்ன பாடலில், முருகன் இருக்கும் இடத்தை சொல்லுமாறு “தாமரை மலரில்” அமர்ந்திருக்கும் வண்டை கேட்டார் கவி காளமேகம். நாமும் அப்படியே கேட்போம். முருகன் எங்கள் மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் காப்பாற்றுவான். இந்துவாக பிறப்பது ஒரு வரம். அதை சாபமாக மாற்ற யாராலும் முடியாது.

  அன்புடன்

  • சாது ஸ்ரீராம்
   saadhusriram@gmail.com

  Latest Posts

  பஞ்சாங்கம் நவ.28- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

  இன்றைய பஞ்சாங்கம் - நவ.28ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~06(21.11.2020)ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*கார்த்திகை ~13 (28.11.2020)சனிக்கிழமை**வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ. *மாதம் ~ கார்த்திகை (விருச்சிக மாஸம்)*பக்ஷம்...

  நிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்

  தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி!

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  கமலிடம் வாழ்த்து பெற்ற அட்லீ – எதற்கு தெரியுமா?

  சமீபத்தில் அர்ஜூன் தாஸ், பூஜா ராமசந்திரன், வினோத் கிஷான் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் அந்தகாரம். இப்படம் அமேசன் பிரைமில் கடந்த 24ம் தேதி வெளியானது. இப்படத்தை பார்த்த பலரும் இப்படத்தை...
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,043FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  966FollowersFollow
  17,300SubscribersSubscribe

  நிவர் புயல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர்

  தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. வெற்றி!

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  இசைப்பள்ளிக்கு எஸ்பிபி., பெயர்! ஆந்திரா அரசு அளித்த கௌரவம்!

  இப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.

  சுபாஷிதம்: நாட்டு நலனே முக்கியம்!

  நமக்குப் பிடித்த மனிதர் தீய குணம் உள்ளவனானால் பாம்புக் கடிக்கு ஆளான கைவிரலை துண்டித்துக் கொள்வது போல அவனை

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  தேர் வராத தேரடிவீதியை இதுவரை திருவண்ணாமலை பார்த்ததில்லை . இன்று பார்க்க நேரிட்டது .

  தேர் வாராத தேரடி வீதி! அண்ணாமலையாரே… இனி வேண்டாம் இந்த பீதி!

  பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன்,

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்

  கருணைக்கு மறுபெயர் கசாப்!

  கருணைக்கு மறுபெயர் கசாப்கட்டுரை: பத்மன்2008 நவம்பர் 26இல் 163 பேர் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமான மும்பை தாக்குதலை அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் நிகழ்த்தினர். மற்ற 9 பேரும்...

  தேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்!

  தேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்
  Translate »