Home கட்டுரைகள் அகமது படேல் : விடாது… கர்மா!

அகமது படேல் : விடாது… கர்மா!

ahmedpatel
ahmedpatel

சோனியா காந்தி காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்து முடிப்பவர் அஹம்மது பட்டேல். இருவருக்கும் அப்படி ஒரு புரிந்துணர்வு. இவருடைய ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக 20 வருடங்களாக பிஜேபியே ஆண்டு கொண்டிருந்த குஜராத்தில் அந்த வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பைக் கூட நழுவவிட்டார் சோனியா காந்தி.

ராஜீவ் காந்தி மரணத்தைத் தொடர்ந்து 1991 முதல் 1996 வரை, நேரு பரம்பரை இல்லாத முதல் பிரதமர் தன்னுடைய 5 வருட பதவியை முழுமையாக முடித்தவர் PV நரசிம்ம ராவ். எதனாலோ சோனியாவிற்கு இவரை சுத்தமாக சகித்துக் கொள்ள முடியவில்லை.

அதற்குச் சொல்லப்படும் ஒரு காரணம், இவர் தலைமையில் ராஜீவ் மரண விசாரணையை எடுத்துச் சென்ற விதம் அவருக்குப் பிடிக்கவில்லையாம். ஆகவே, அவரைப் பழிவாங்க.. ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவு கொக்கு காத்துக் கிடந்ததுபோல் காத்துக் கொண்டிருந்தார்.

2004 இல் PV நரசிம்மராவ் மரணமடைந்ததும் அவருக்கு தில்லியில் அரசாங்க மரியாதையோடு இறுதிச் சடங்கு நடத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார் இத்தாலி ராணி. அதனை நரசிம்மராவின் மகனிடம் தெரிவிக்க ஒரு அள்ளக்கை தேவைப்பட்டார். அவர்தான் இந்த அஹம்மது பட்டேல்.

நரசிம்மராவின் பூத உடல் ஆல் இண்டியா காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் காம்பவுண்ட் சுவர் கேட் அருகே அங்கு உள்ளே நுழையத் தயாராகக் காத்திருந்த போது காங்கிரஸ் தலைமையகத்தின் உள்ளே நுழையக் கூட அந்த பூத உடலுக்கு அருகதை இல்லை என்று தடுத்து நிறுத்தப்பட்டது. நிறுத்தியவர் அஹம்மது பட்டேல். நிறுத்தச் சொன்னது சோனியா காந்தி.

இந்திரா காந்தியின் மகன் என்ற ஒரே ஒரு தகுதியைத் தவிர வேறு எந்த பதவியையும் வகிக்காத சஞ்சய் காந்திக்கு அரசு மரியாதையோடு இறுதி ஊர்வலம். தில்லியில் சமாதி. ஆனால் பிரதமராக 5 முழு வருடங்கள் ஆண்டவருடைய பூத உடல் கூட தில்லியில் எரியூட்டப்படக் கூடாது என்றும் அவரை ஒரு காங்கிரஸ் தலைவராகக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோமென்றும் முடிவெடுக்கப்பட்டது. அந்த அளவு இத்தாலி அன்னையின் ஈகோவும் அதிகாரமும் காங்கிரஸில் கொடிகட்டிப் பறந்தது.

அக்டோபர் 1 அன்று கோவிட் பாஸிடிவ் என்று தெரிந்த பிறகு இன்று 25/11/2020 அன்று எல்லா உறுப்புகளும் செயலிழந்து மரணமடைந்தார் அஹம்மது பட்டேல்.

கர்மா விடாது துரத்தும்.

  • Source: OpIndia
  • தமிழில்: பிரேமா.எஸ்

Ahmed Patel, who stopped the funeral of former PM PV Narasimha Rao at Delhi and forced the then PM MMS to shift the body to Hyderabad and not even allow the body to be brought to AICC HQ, is having a silent burial amidst the COVID protocol of body disposal. No one is allowed to attend his funeral ! Karma does come back! 😷

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version