May 14, 2021, 2:34 am Friday
More

  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்!” எப்டிங்க ஸ்டாலின்..?!

  சிபில் உள்ளிட்ட பல்வேறு நிதி மதிப்பீட்டு நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தாத மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதனால்

  stalin-in-coimbatore
  stalin-in-coimbatore

  ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்’ என்று கூறும் ஸ்டாலின் அவர்களே…

  கல்வி கடன் என்பது வங்கிகளால் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லாத ஒரு விவகாரத்தில், இயலாத வாக்குறுதியை அளிப்பது மக்களை ஏமாற்றும் செயலே. ஆனால், உண்மையிலேயே அக்கறை இருந்தால், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுவோம், கல்வி உதவி தொகையை அதிகரிப்போம்” என்ற செயல்படுத்த முடிகிற வாக்குறுதிகளை அளிக்கலாம்.

  ஆனால், கல்வியை தமிழக அரசியல்வாதிகள் வியாபாரமாக்கிய காரணத்தால் அந்த வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே, மக்களின் சேமிப்பை தள்ளுபடியாக அறிவிப்போம் என்று சொல்வது நியாயமா? மேலும், தள்ளுபடி என்கிற பரபரப்பு அறிவிப்பால் மாணவர்கள் கடனை செலுத்துவதில் தயக்கம் காட்டுவது அவர்களுக்கே பிரச்சினையாக அமைகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிபில் உள்ளிட்ட பல்வேறு நிதி மதிப்பீட்டு நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தாத மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதனால், எதிர்காலத்தில் அவர்களின் மேற்படிப்பு, வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவைகளை வங்கிகள் அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இதனால் மாணவர்களின் எதிர்காலம்,வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனபதை அறிந்து கொள்ளுங்கள்.

  படிப்புக்கேற்ற வேலை என்ற பசப்பு வார்த்தைகளை கூறி, தமிழக அரசியல்வாதிகள் பொறியியல் கல்லூரிகளை துவக்கி கோடி கோடியாக சேர்த்தனர். ஆனால், இருக்கும் வேலைக்கேற்ற கல்வியை பயிலாமல், படித்த படிப்புக்கேற்ற வேலையில்லாமல் மாணவர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். கல்வி கடன்களில், இந்தியாவின் வாராக்கடன்களில் 40 விழுக்காடு தமிழகத்தினுடையது என்பதை தாங்கள் அறிவீர்களா? இதற்கு காரணம், வேலைவாய்ப்புக்கேற்ற கல்வியை கொடுக்காதது, தரமான கல்வியை அளிக்காதது, கல்வி துறையில் முறைகேடுகள் போன்றவைகளே என்பது தங்களுக்கு தெரியுமா?
  தேவைக்கேற்ற (Demand) உற்பத்தி (Supply) என்பது பொருளாதார கோட்பாட்டின் ஆதாரம். அதே போல் தான் கட்டமைப்பில் உள்ள பணிகளுக்கேற்ற கல்வி என்பது ஆதாரம். ஆனால் கடந்த சில தசாப்தங்களாக தமிழக அரசியல்வாதிகளின் சுயநலத்தால், தமிழகத்தில் வேலைக்கேற்ற கல்வி இல்லாமல் போனதே வேலைவாய்ப்பின்மைக்கு, படித்திருந்தாலும் குறைந்த ஊதியத்தை பெறுவதற்கான காரணம்.

  ஆகவே, ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே மாணவ சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை செழிக்க வைக்க முடியும் எனபதை உணருங்கள். தேவைக்கேற்ற கல்வியை கொடுப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைக்க முடியும். அதை தான் புதிய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. ஓட்டுக்காக, பதவிக்காக, அரசியல் அதிகாரத்திற்காக மாணவர்களின் வாழ்வில் தேவையற்ற குழப்பத்தை முயலவேண்டாம். தரமான, திறனான, தேவையான கல்வியை கொடுப்போம் என கூற முயற்சியுங்கள்.

  கடன் தள்ளுபடி என்ற பெயரில் மாணவர்களை பின்னுக்கு தள்ளி கடனாளியாக்காதீர்கள்.

  • நாராயணன் திருப்பதி,
   செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,242FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,185FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »