Home உரத்த சிந்தனை பொது குடிமையியல் சட்டம் குறித்து… அம்பேத்கர் சொன்னது என்ன?!

பொது குடிமையியல் சட்டம் குறித்து… அம்பேத்கர் சொன்னது என்ன?!

ambedkar e1534995913530
ambedkar e1534995913530

பொது குடிமையியல் சட்டம் குறித்து பேசும் முற்போக்குகளே, நடுநிலையாளர்களே, ‘மத சார்பற்ற’ அரசியல்வாதிகளே டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நவம்பர் மாதம் 23ம் தேதி 1948ம் வருடம் பாராளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் குறித்து பேசியதை படியுங்கள். படித்து விட்டு அம்பேத்கருக்கு எதிராக பேசுவீர்களா?

“என் நண்பர் ஹுசைன் இமாம் அவர்கள் இந்த நாட்டில் பொது குடிமையியல் சட்டத்தை கொண்டு வர முடியுமா என்று கேட்டார். இந்தியா போன்ற மிக பெரிய நாட்டில் பொது சிவில் சட்டம் சாத்தியமா, தேவையா என்ற வாதங்கள் குறித்து வியப்படைந்தேன்.

இந்த நாட்டில் தான் மனித உறவுகள் குறித்த அனைத்து அம்சங்களுக்கும் பொதுவான சட்டங்கள் உள்ளது. நமது நாட்டில் தான் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டங்களில் மூலம் பொதுவான, நிறைவான குற்றவியல் சட்டங்கள் உள்ளன. சொத்துக்கள் பரிமாற்றம் குறித்த சட்டங்கள் நாடு முழுவதும் பொதுவாக தான் உள்ளன. செலாவணி முறிச் சட்டம் அனைவருக்கும் பொதுவாக உள்ளது.

இது போன்ற பல சட்டங்கள், அதன் தன்மை, இந்த நாட்டில் இருக்கும் அனைவருக்கும் பொதுவாக, ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கிறது என்பதை என்னால் சுட்டி காட்ட முடியும். குடிமையியல் சட்டமானது இல்லாத ஒரு இடம் உள்ளது என்றால், அது திருமணம் மற்றும் வாரிசு உரிமையில் தான். இந்த ஒரு சிறு இடத்தில் தான் எங்களால் நுழைய முடியவில்லை. சட்டம் 35 ல் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. ஆகையால், இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டுமா என்ற வாதத்தை செய்பவர்கள் தவறாக சொல்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்.

உண்மையில், நம் நாடு முழுவதும், நாம் அனைத்து துறைகளிலும் பொது குடிமையியல் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். ஆகையால், பொது குடிமையியல் சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்ய முடியுமா என்பதை விட கொண்டு வந்து விட்டோம் என்பதே உண்மை.

உறுப்பினர்கள் கொண்டு வந்த இரு திருத்தங்களில் என் பார்வையை இந்த அவை அறிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம்கள் சட்டமானது மாற்ற முடியாதது என்றும் நாடு முழுவதும் உள்ளது என்றும் சொல்லப்பட்ட வாதங்களுக்கு சவால் விடுகிறேன். இந்த விவாதத்தில் பேசிய பலர் 1935ம் ஆண்டு வரையில் வட-மேற்கு மாகாணத்தில் ஷரியத் சட்டம் இல்லை என்பதை மறந்து விட்டார்கள்.

வாரிசு மற்றும் இதர விவகாரங்களில் ஹிந்து சட்டத்தையே பின்பற்றி வந்துள்ளார்கள் என்பதையும் 1939ல் மத்திய சட்டமன்றத்தின் மூலமே இஸ்லாமியர்களுக்கு ஹிந்து சட்டத்தை மாற்றி இஸ்லாமிய சட்டத்தை அளித்தது என்பதை அறியவும். அது மட்டுமல்ல, மரியாதைக்குரிய எனது நண்பர்கள் மேலும் ஒரு விஷயத்தை மறந்து விட்டனர்.

வட-மேற்கு மாகாணத்தையடுத்து, மத்திய மாகாணங்கள், மும்பை போன்ற இடங்களில் கூட 1937 ம் ஆண்டு வரை, வாரிசு குறித்த சட்டங்களில் ஹிந்து சட்டங்களையே கடைபிடித்திருந்தனர். அவர்களோடு மற்ற இஸ்லாமியர்களை ஒரே தளத்தில் கொண்டு வர சட்டமியற்றும் துறை 1937ம் ஆண்டு ஷரியத் சட்டத்தை அரங்கேற்றியது.

மேலும், வட மலபாரில் இஸ்லாமியர்கள் மற்றும் ஹிந்துக்களும், மருமக்காத்யம் என்ற சட்டமே அமலில் இருந்தது என்பதையும் அறிதல் நலம்.மருமக்காத்யம் சட்டம் என்பது தாய் வழி சட்டம் என்பதும் தந்தை வழி சட்டம் என்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகவே, இஸ்லாமிய சட்டமானது மாற்ற முடியாதது என்ற வாதத்தை வைப்பதும், காலம் காலமாக இந்த சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் தவறே. ஷரியத் சட்டமானது இந்தியாவின் பலபகுதிகளில் பின்பற்றப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாகவே கடைபிடிக்கப்படுகிறது என்பதே உண்மை.

ஆகவே, ஒரே பொது குடிமையியல் சட்டத்தை அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டும் என்பதும், பொது சட்டங்களில் சில, ஹிந்து சட்டங்களிலிருந்து தொகுக்கப்பட்டாலும் அவை எல்லாருக்கும் பொருந்தக்கூடிய அளவில் இருந்த காரணத்தினால், புதிய சட்ட விதி 35 ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக சொல்ல முடியாது.”

நடுநிலையாளர்களே(?), முற்போக்குகளே, போலி மதசார்பற்ற சமூக ஆர்வலர்களே டாக்டர் அண்ணல் அம்பேத்கர் வழி நடப்பீர்களா? நீங்கள் நடப்பீர்களா?

  • நாராயணன் திருப்பதி (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version