October 24, 2021, 2:13 am
More

  ARTICLE - SECTIONS

  இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு! மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில்… விபரீதமே!

  உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியார் களையும், சிஸ்டர்களையும் கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற

  periyasamy marumagal speech - 1

  ‘உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியார் களையும், சிஸ்டர்களையும் கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்’ என அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், திமுக எம்.எல்.ஏ., செந்தில்குமாரின் மனைவியுமான மெர்ஸி செந்தில்குமார் கூறிய சர்ச்சைக் கருத்து சமூகத் தளங்களில் பெரிதும் பகிரப் பட்டும், விமர்சிக்கப் பட்டும் வருகிறது.

  பாதிரியார் ஸ்டேன் சாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மெர்ஸி செந்தில்குமார் பேசியபோது…

  பாதிரியார் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு குரல் கொடுப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு பாதிரியார் இறந்து விட்டார். அவருக்கு இப்போது குரல் கொடுக்கிறார்கள். நாளையும் எங்கோ ஓரிடத்தில், பாதிரியாரோ, சிஸ்டரோ போராடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

  பாதிரியார்கள், சிஸ்டர்கள் வந்த பிறகே நமக்கு கல்வியும், பகுத்தறிவும் கிடைத்தது. உலகில் உள்ள பாதிரியார்களையும், சிஸ்டர்களையும், ஹீரோ, ஹீரோயின்களைப் போல பார்க்க வேண்டியது அவசியமானது. இந்த உலகில் எவனாக இருந்தாலும், பாதிரியாரையும், சிஸ்டரையும் கைது செய்ய வேண்டும் என்றால், வாடிகனில் உள்ள போப்பிடம் அனுமதி பெற வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.. என்றார்.

  அவரது இந்த சர்ச்சைப் பேச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் இரண்டு…


  பாதிரியார்களை கைது செய்ய போப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம்,ஆத்தூர் பெரியசாமி அமைச்சரோட மருமகளும் செந்தில்குமார் MLAவின் கிறிஸ்தவ மனைவியுமான மெர்ஷி பேச்சு.PTR பழனிவேல் தியாகராஜன் பொன்டாட்டியும் கிறிஸ்தவர்,இனியும் எத்தனை அமைச்சர்களோட குடும்பத்துக்குள்ள ஊடுறுவியிருப்பாங்களோ அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

  ஏற்கனவே சபாநாயகர் பதவியில் அப்பாவு, கீதாஜீவன், மனோதங்கராஜ்னு முழுநேர அமைச்சர்களுடன் லியோனி பாடநூல் கழகத்திலும், ராஜ் மரியசூசை பாதிரியார் தேர்வானைய குழுவிலும்,பீட்டர் அல்போன்ஷ் சிறுபான்மை ஆனைய தலைவராகவும், பத்தாதற்கு பாதிரியார் இனிக்கோ இருதயராஜை திருச்சி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளே நுழைத்துள்ளது மதமாற்ற கிறிஷ்தவ கும்பல்.

  இது மட்டுமல்ல தேவர் புலிப்படையின் சார்பாக MLAவாக இருந்த கருனாஷின் மனைவி, விசிக வின் வன்னியரசுவின் மனைவி இப்படி சிறுசிறு அளவில் ஆங்காங்கே ஊடுறுவியிருக்கிறார்கள், நமது ஆட்சி வந்துவிட்டது இனி நெனச்சது கிடைக்கும்னு திமுக வுல இருக்கிற ஹிந்து நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும்,கவனமாக இருக்க வேண்டியது திமுகவுல மட்டுமல்ல மற்ற அனைத்து கட்சியில இருக்கிற ஹிந்துக்களும் தான்.


  ‘உலகில் எந்த மூலையில் எவனாக இருந்தாலும், பாதிரியார்களையும், சிஸ்டர்களையும் கைது செய்ய, போப்பிடம் அனுமதி பெற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்’ என அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், திமுக எம்.எல்.ஏ., செந்தில்குமாரின் மனைவியுமான மெர்ஸி செந்தில்குமார், சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்

  இப்படி ஒரு செய்தி பரவிகொண்டிருக்கின்றது
  போப்பாண்டவரின் ஆதிக்கமெல்லாம் முடிந்து கிட்டதட்ட 300 ஆண்டுகாலம் ஆகிவிட்ட நிலையில் இப்படி ஒரு சட்டம் சாத்தியமே இல்லை என்பதுதான் அம்மணிக்கு புரியவில்லை

  குழந்தைகள் மேலான பாலியல் புகார் , கேரள கன்னியாஸ்திரி கொலை முதல் கனடாவில் பழங்குடி குழந்தைகள் கொல்லபட்டு புதைக்கபட்டதுவரை வாடிகனை சூழ்ந்திருக்கும் சிக்கல்கள் ஏராளம், உலகளாவில் கத்தோலிக்க குருமார்கள் மேல் பெரும் சர்ச்சை சூழும் நேரமிது, பழைய போப் ஆதிக்கமெல்லாம் இனி எடுபடாது

  இந்தியாவில் மட்டுமல்ல உலகளாவில் கூட கத்தோலிக்க குருமார்களுக்கு உள்ள விதி அவர்கள் எந்த மதத்தையும் எந்த தேசத்தையும் வெறுக்க கூடாது, ஒருதலைபட்சம் கூடாது, தன் மேல் தாக்குதல் நடந்தால் கூட காவல் நிலையமோ நீதிமன்றமோ நாடாமல் இறைவனிடம் பிரார்த்திவிட்டு பணியினை தொடரவேண்டும், யாரையும் தீர்ப்பிடக் கூடாது, தீர்ப்புக்கு காரணமாக இருத்தலும் கூடாது என்பது அந்த விதிகளை கிறிஸ்தவ துறவிகளை பின்பற்ற அம்மணி வலியுறுத்தினால் நல்லது

  மாறாக கிறிஸ்தவ பாதிரிகள் கேரள மாடல் இன்னும் ஜார்ஜ் பொன்னையா மாடல்களில் செய்யும் அட்டகாசத்திற்கெல்லாம் போப்பிடம் அனுமதி வாங்கி கைது செய்யவேண்டும் என கனவு காண்பதெல்லாம் இந்தியா என்பது இறையாண்மை கொண்ட‌ தனி குடியரசு நாடா இல்லை போப்பின் அடிமை நாடா எனும் கேள்விக்கு வழி செய்யும்

  அம்மணி பேசியிருப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சு, இந்திய இறையாண்மையினை வாடிகனிடம் அடகு வைக்கும் ஆலோசனை

  • ஸ்டான்லி ராஜன்

  இவ்வகையில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவே இவர் பேசியிருக்கிறார் என்றும், பேசியிருப்பவர் சாதாரண பெண்மணி அல்ல, தமிழக அமைச்சரின் குடும்ப உறுப்பினர், ஒரு எம்.எல்.ஏ.,வின் மனைவி என்பதும் கவனிக்க வேண்டியது என்பதால், இவர்கள் மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், எடுத்தால் மட்டுமே பின்னாளில் ஏற்படப் போகும் பல்வேறு விபரீதங்களுக்கு ஒரு நிறுத்தல் புள்ளி கிடைக்கும்! குறைந்த பட்சம் வேறு மாநிலங்களில் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  39FollowersFollow
  74FollowersFollow
  1,585FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-