spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஜெயேந்திரர் கைதின் பின்னணியில் சோனியா மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகளின் ‘கை’ !

ஜெயேந்திரர் கைதின் பின்னணியில் சோனியா மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகளின் ‘கை’ !

- Advertisement -

புது தில்லி:

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் கிறிஸ்துவ மதமாற்றுக் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் தற்போது பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.

இந்திய குடியரசின் முன்னாள் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்த 2017 ஆம் ஆண்டு ‘கொலிசன் இயர்ஸ்’ என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருந்தார். 1996 முதல் 2012 வரையிலான நிகழ்வுகளைச் சொல்லும் அந்தப் புத்தகத்தில் அப்போதே, தன்னைப் பிரதமர் ஆக்காமல், மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிய விவகாரம் குறித்தும், அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் செயல்பாடு குறித்தும் கருத்துகளை தெரிவித்திருந்தார் பிரணாப்.

மேலும், காஞ்சி ஜெயேந்திரர் கைது குறித்த விவக்காரத்தையும் குறிப்பிட்டு, 2004ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசத்தில் வைத்து காஞ்சி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்த போது, அந்தக் கூட்டத்தில், “இஸ்லாமிய அறிஞர் ஒருவரை இஸ்லாமியர் பண்டிகையான ஈத் நடக்கும் போது அதற்கு முன்னர் கைது செய்ய நம் நாட்டின் மதசார்பின்மை ஒப்புக் கொள்ளுமா? அதே போன்றுதான் ஒரு இந்து துறவியான, காஞ்சி சங்கராசார்யரையும் கருத வேண்டும்.” என்று அவரை அப்போது பாதுகாப்பதற்கான வழியைத் தாம் யோசித்ததாகவும் அவர் அந்த புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புத்தகம் குறித்து ஆய்வு செய்தவர்கள் பலர், இந்த விவகாரத்தையும் சற்றே தங்கள் நூல் மதிப்புரைகளிலும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், காஞ்சி சங்கராசார்யரின் கைது விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தலையீடு இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

இப்போது இந்தப் புத்தகத்தின் தகவல்கள் மறுபடியும் காரசாரமாக விவாதிக்கப் பட்டு வருகிறது. இணையதளங்களிலும், சமூகத் தளங்களிலும் இந்த விவாதம் இப்போது மேலும் கிளப்பப் பட்டு வருகிறது. ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு ஓய்ந்து போன விவாதம் மீண்டும் கிளம்பியிருப்பதன் காரணம், அண்மைக் காலத்தில் மீண்டும் காஞ்சி சங்கர மடத்தின் மீது ஊடகங்கள், கிறிஸ்துவ மிஷனரிகளின் பின்னணியில் செயல்படும் திராவிட தேசம் மற்றும் தமிழ் பெயரைச் சொல்லி பிரிவினை பேசும் இயக்கங்களின் பிரசாரம்தான்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்திருந்து மரியாதை செலுத்தவில்லை என்ற விவகாரத்தை விவாதித்து, பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன கிறிஸ்துவ மிஷனரிகளின் பின்னணியில் இயங்கும் தி.மு.க., மற்றும் திராவிடர் கழகம், தமிழ் அமைப்புகள் எனும் போர்வையில் செயல்படும் பிரிவினைவாத இயக்கங்கள். இந்நிலையில், காஞ்சி மடத்தின் மீது மட்டும் இவ்வாறான தாக்குதல்களை ஏன் தொடுக்கிறார்கள் என்பதை முன்வைத்து, இணையதளங்களில், பிரணாப் முகர்ஜி எழுதிய இந்தப் புத்தகம் குறித்து மீண்டும் தகவல்கள் முன்வைக்கப் படுகின்றன.

வலைதளங்களில் முன்வைக்கப்படும் விவாதங்கள்…

சோனியா மூலம் இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்ப முயற்சிகள் நடந்ததாகவும், மேலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் என்ற கிராமமே முஸ்லீமாக மாறிய போது கோயில் ஒன்றை கட்டிய காஞ்சி சங்கராச்சாரியார், தலித் மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனில் கோயில் அவர்களை தேடி செல்லும் என கூறியிருந்தார்.

அவரது இச்செயலுக்கு பின் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கிறிஸ்வ மதம் மாற்றும் கும்பலுக்கு கண் இருந்ததாகவும், இவர் கிறிஸ்வத மத மாற்றத்திற்கு தடையாக இருப்பார் என அவர்கள் கருதியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சங்கராச்சரியார் மீது நிலம் தொடர்பாக வந்த வழக்கை பயன்படுத்தி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளனர். மேலும் அந்த நேரத்தில் சோனியாவிற்கும், ஜெயலலிதாவிற்கும் சசிகலா மூலம் நெருங்கிய உறவு இருந்துள்ளது. இதை பயன்படுத்தி காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்ய வைத்துள்ளனர். அவரை கைது செய்ததன் மூலம் ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கும். இதன் மூலம் கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு இருக்கும் ஒரு முக்கியமான தடையை அவர்களால் உடைக்க முடியும் என இதை செய்துள்ளனர்.

ஆந்திராவில் வைத்தே காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அப்போது ஆந்திராவில் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சியே இருந்தது.

இந்த செயலை மனதில் வைத்தே அந்த புத்தகத்தில் சங்கராச்சாரியாரின் கைதுக்கு பின்ணணியில் சோனியா இருந்ததாக பிரணாப் குறிப்பிட்டுள்ளதாக பேசப்படுகிறது. மேலும் அந்த புத்தகத்தில் அவர் மன்மோகன் சிங்கை சோனியா பிரதமராக்கியது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகுரியவை குறித்து எழுதியுள்ளார்.

சோனியா குறித்து பிரணாப் கூறியதற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe