காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்

விஜயதாரணியின் நடவடிக்கைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் முறையிடப் போவதாகவும் கூறினார்.

சென்னை:

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுத்த முடிவை மீறி நேற்று நடந்த ஜெயலலிதா படத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பிறகு சபாநாயகரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜயதாரிணி. அதன் பின் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க ராகுல்காந்தி வந்தது குறித்து விமர்சனம் செய்தார்.

விஜயதாரிணியின் இந்தச் செயல்கள் குறித்து கண்டனம் தெரிவித்த திருநாவுக்கரசர், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது,  விஜயதாரணியின் நடவடிக்கைகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் முறையிடப் போவதாகவும் கூறினார்.