― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எத்தர்களான... ஈனர்களான புத்த பிக்குகளைக் களையெடுக்குக! இலங்கை சிவசேனை கோரிக்கை!

எத்தர்களான… ஈனர்களான புத்த பிக்குகளைக் களையெடுக்குக! இலங்கை சிவசேனை கோரிக்கை!

- Advertisement -

எத்தர்களான ஈனர்களான புத்த பிக்குகளைக் களையெடுக்குக

-மறவன்புலவு க. சச்சிதானந்தன் –
சிவ சேனை

உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள அருள் தொடர்பு. அந்த அருள் தொடர்பைத் தொடங்குவதும் நீடிப்பதும் உயிரை மேம்படுத்துவதும் வழிபாடு.

வழிபடச் செல்லும் ஒருவரைத் தடுத்து நிறுத்துபவர் துறவியா? உயிரை மேம்படுத்தும் உணர்வைத் தடுப்பவர் துறவியா?

திருகோணமலை மாவட்டம் மூதூர்ப் பிரதேச செயலகப் பிரிவில் 64ஆம் கட்டையில் இராசவந்தான் குன்று. குன்றுகள் தோறும் குமரனை வழிபட்டவர் சைவர்.

அடிவாரத்தில் மாணிக்கப் பிள்ளையார் கோயில் உச்சியிலே சைவத் திருக்கோயில்.

புத்தர் இலங்கைக்கு வரும்பொழுதே, 2590 ஆண்டுகளுக்கு முன்பே, இராசவந்தான் குன்றில் சைவத் திருக்கோயில் இருந்தது. சைவர்கள் வழிபட்டு வந்தார்கள்.

புத்தர் வந்த பின் நாடக பாணியில் புனைதுகிலாகத் துவராடை அணியத் தொடங்கியவர்கள் அதற்கு முன்பிருந்தே நீடித்த சைவ வழிபாட்டைத் தடுக்கிறார்கள்.

வழிபடச் செல்பவர்கள் இவ்வாறு துன்பத்துக்கு உள்ளாகலாம் என்பதால்தாலேயே இலங்கையின் அரசியலமைப்பில் வழிபாடு அடிப்படை உரிமை என்றாகிறது.

கதிர்காமத்தில் புத்த பிக்குகள் வரிசையாக நின்று வழிபடுவார்கள் யாரும் தடுப்பதில்லை கதிர்காமம் குன்றுதோறாடும் குமரனின் திருக்கோயில்.

செல்லக் கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக் கரையில் பிள்ளையார் கோயிலுக்கு மாலை நேரத்தில் புத்த சமயத்தவர் வருவார்கள், வழிபடுவார்கள்.

அவர்களுக்கு சிங்களத்தில் அச்சிட்ட பிள்ளையார் போற்றிகளைக் கொடுப்பார்கள்.சைவக் குருக்கள் சொல்லச் சொல்ல புத்தர்களும் போற்றி சொல்லி வழிபடுவர். யாரும் தடுப்பதில்லை.

சைவர்கள் புத்தர்கள் யாவரும் மடுமாதாவைப் பத்தினித் தெய்வமாக மனதில் கருதி கத்தோலிக்கருடன் சேர்ந்து வரிசையில் நின்று வழிபடுவார்கள். யாரும் தடுப்பதில்லை.

மூதூரில் இராசவந்தானில் சைவர்களின் வழிபாட்டுப் பயணத்தத் தடுக்க முயன்ற புத்தபிக்கு, புத்தரே அல்லர். புத்தநெறி தெரியாதவர்.

அரசியலமைப்புக்கு முரணாக
குற்றவியல் தண்டனைக்கோவை விதிகளுக்கு முரணாக நடந்த
புத்த பிக்குவின் செயலைக் கண்டும் காணாமல் விட்ட காவலரும் சார்ந்தவர்களும் இந்த நாட்டில் வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைப் பேண வேண்டியவர்கள் சட்டமீறலுக்குத் துணை நிற்கிறார்கள்.

வெடுக்கு நாறிக் குன்றில்
குருந்தக் குன்றில்
நாயாற்றில்
கொக்கிளாயில்
முருங்கனில் கிளிநொச்சி கனகாம்பிகையில்
எனப் பல்வேறு இடங்களில் சைவத் திருக்கோயில்களுக்குச் செல்லும் சைவ அடியவர்களைத் தடுக்கும் புத்தராய்ப் புனை துகில் அணிபவர், இலங்கையில் வன்முறையை தூண்டுவர்.

வெறுப்புணர்வை வளர்த்து மதக்கலவரத்தைத் தூண்டும் புத்த பிக்குகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தரின் இறப்பைக் கொண்டாடிய வச்சிர பிக்குகள் போல

இராசகிரியாராவில் இரண்டாம் புத்த சங்கத்தைக் கூட்டுவதற்கு காரணமான கொடுமைப் புத்தபிக்குளை அடையாளம் கண்ட அரசன் அசாதசத்துரு போல

பாடலிபுரத்தில் கொடுமை புரிந்த புத்தபிக்குகளைக் கட்டுக்குள் கொண்டுவர முகலிப்புத்திர தீசரை அழைத்து மூன்றாம் சங்கத்தைக் கூட்டிய அசோகனைப் போல

உள்ளோரை எத்தர்கள் ஈனர்கள் என்று இக்கொடுமைப் புத்த பிக்குகளை அடையாளம் காட்டினார் திருக்கேதீச்சர தேவாரப் பதிகத்தில் திருஞானசம்பந்தர்.

இலங்கையில் வாழும் எத்தர்கள் ஆன ஈனர்கள் ஆன புத்த பிக்குகளை அடக்குக. புத்த சங்கத்தைக் கூட்டுக. புத்த சமய நெறியைக் கைக்கொள்ளாதோரை நீக்குக.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் சான்றோர்கள்
காசியப்ப தேரர் வழியில்
ஆனந்த தேரர் வழியில்
அசாதசத்துரு வழியில்
அசோகன் வழியில்
எத்தரான ஈனரான புத்த பிக்குகளைக் களை எடுக்காவிட்டால் புத்த சமயம் என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு காடையர் கூட்டம் பன்சாலைகளை விகாரைகளைத் தன் பொறுப்பில் விரைவில் எடுத்துக் கொள்ளும்.

திருகோணமலை மாவட்டம் மூதூர் 64 கட்டை இராசவந்தான் குன்று வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடக்கமே சைவ வழிபாட்டு இடம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வழியாக வழிபடும் சைவர்களை அடியார்களை தொண்டர்களை தடுக்க முயலும் எவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version