Homeஅரசியல்கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள் இபிஎஸ் க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்..

கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள் இபிஎஸ் க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்..

829601 head - Dhinasari Tamil

கசப்புகளை மறந்து விட்டு அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று அழைப்பு விடுத்தார்.

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனு மீது நேற்றைய தினம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது. ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கட்சி இனி எப்படி செயல்பட போகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தொண்டர்களின் ஆதரவோடும் தமிழக மக்களின் அரவணைப்போடும் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்றார். எடப்பாடியோடு சேர்ந்து பணியாற்ற தயாரா என்ற கேள்விக்கு ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்னர் யார் எல்லாம் கட்சியில் பொறுப்பில் இருந்தார்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற தயார் என்றார்.

அது போல் இனி அவர் தரப்பு, இவர் தரப்பு என்றெல்லாம் இல்லை ஒருங்கிணைந்த அதிமுகதான் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று நிருபர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- “மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதது தான் எங்கள் நிலைப்பாடு. கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவியாக இருக்கட்டும். அ.திமு.க ஒன்று பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. கசப்புகளை மறந்து விட்டு அ.தி.மு.க ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள். இரட்டை தலைமை என்பதேல்லாம் பிரச்சினை இல்லை. கூட்டு தலைமையாக செயல்படுவோம். இதற்கு முன் ஏற்பட்ட அனைத்து கசப்புகளையும் மறந்து விடலாம், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்; ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டால் அதிமுகவை வெல்ல முடியாது. அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம், இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது; இன்றைக்கு அசாதாரண சூழல் அதிமுகவில் ஏற்பட்டுள்ளது, அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம்.

நானும், எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கட்சி பணியாற்றினோம், கூட்டுத்தலைமை தான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது டிடிவி தினகரனும், சின்னாம்மாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார். பேட்டியின் போது எடப்பாடி பழனிசாமி குறித்து குறிப்பிடும் போது அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,077FansLike
380FollowersFollow
77FollowersFollow
74FollowersFollow
4,119FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 19 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

காலங்களில் அவள் வசந்தம் -திரைப்படம் ஒரு பார்வை..

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கியுள்ள படம்காலங்களில் அவள் வசந்தம். படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார்....

சர்தார் -விமர்சனம்..

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். முதல் படத்தில் வங்கி மற்றும்...

பிரின்ஸ் –தீபாவளி ரேஸ் சில் வெற்றி பெருமா.. திரைவிமர்சனம்..

பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும்...

தமிழகத்தில் ரூ.200 கோடி வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’..

தமிழகத்தில் ரூ.200 கோடியை வசூலித்த முதல் தமிழ்த் திரைப்படம் என்னும் சாதனையை 'பொன்னியின் செல்வன்'...

Latest News : Read Now...

Translate »
Exit mobile version