இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்க வேண்டும்,மழைநீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை சாகுபடியை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குறுவை நெல் சாகுபடி செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதுபோலவே, தமிழகத்தில் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகப்படியான விலை கொடுத்து வாங்கிய உரம் மற்றும் அதிகரித்த சாகுபடி செலவு, கூலி உள்ளிட்ட உற்பத்தி செலவுகளுடன் விவசாயிகள் தங்களது உழைப்பைக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டு பயிரிட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதைப் பார்த்து மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர். தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 35,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
போதுமான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் விளம்பரம் செய்த நிலையில், திமுக அரசு முதற்கட்டமாக நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மட்டும் திறக்க வேண்டும் என்றும், முடிந்த அளவு நெல் கொள்முதலை குறைத்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒருசில நேர்மையான அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்தாக மிகுந்த மனவேதனையுடன் விவசாயிகள் செய்தியாளர்களிடம் இந்த அரசை குறை கூறியுள்ளனர்.
இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.