― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்குஜராத்: சரித்திர வெற்றி பெற்ற பாஜக! எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்!

குஜராத்: சரித்திர வெற்றி பெற்ற பாஜக! எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்!

- Advertisement -
gujarat modi

குஜராத் சட்டமன்றத்திற்கு தொடர்ந்து 7-ஆவது முறை வெற்றி பெற்று பாஜக புதிய வரலாறு படைத்துள்ளது. முந்தைய சாதனைகளை எல்லாம் விஞ்சி இப்போது மகத்தான வெற்றி பெற்றுள்ளது, ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குஜராத்தில் பா.ஜ.க. பெற்ற வெற்றிக்கு மூலகாரணமாக உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்தும், பாராட்டும் குவிந்து வருகின்றன. பா.ஜ.க.158 தொகுதிகளை கைப்பற்றி, காங்கிரஸ் கட்சியை எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத அளவுக்கு வீழ்த்திவிட்டது.

ஆம் ஆத்மி ஒற்றை இலக்கத்தில் சுருண்டுவிட்டது.27 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் இப்போதைய தேர்தலில் அபார வெற்றி பெற்றதன்மூலம் இந்திய வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.

மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடை பெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ஆம் தேதியும் 2-ஆம்கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. குஜராத்தில் 37 மையங்களில்வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 182 வாக்கு எண்ணிக்கை பார்வை யாளர்களும்,182 தேர்தல் அதிகாரிகளும் வாக்கு எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். குஜராத்தில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது. மொத்த முள்ள 182 தொகுதிகளில் பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ‘ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் போட்டியிட்டது. காங்கிரஸ்179 தொகுதிகளில் போட்டியிட்டது.அதன்கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களில் போட்டியிட்டது.

குஜராத்தைப் பொறுத்தவரை பாஜக தனது சொந்த வரலாற்று சாதனையை உடைத்தது மட்டுமல்லாமல், புதிய வரலாற்றையும் படைத்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றியது. 100-க்கும் கீழான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாஜக. கடந்த முறை வாக்குகள் சிதறக் காரணமாக இருந்த ஹர்திக் படேல் இந்த முறை பாஜக வேட்பாளர். அந்த அளவுக்கு தேர்தல் உத்திகளை சிறப்பாக வகுத்து சொன்னபடியே வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது.

இதுவரை குஜராத் அரசியல் வரலாற்றில் பாஜகவின் கோல்டன் பீரியட் என்றால், அது 2002-ல் அக்கட்சி 127 இடங்களைப் பிடித்ததுதான் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 182 தொகுதிகளில் 158 தொகுதிகளை வசப்படுத்தி வரலாற்றுச் சாதனையை பாஜக கண்டுள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னதாக காங்கிரஸ் 1985-ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக பேசப்பட்டு வந்தது.

1995-ல் பா.ஜ.க. 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1998-ல் 117 தொகுதிகளில் தாமரை மலர்ந்தது. 2002-ல் 127 தொகுதிகளிலும், 2007-ல் 117 தொகுதிகளிலும், 2012- ல் 115 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. 2007- ல் 99 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 49சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 41 சத வீதவாக்குகளும் பதிவாகின. 5-ஆம் தேதி இரவு எக் சிட்போல் முடிவுகள் வெளி யிடப்பட்டன. எல்லா எக் சிட்போல் முடிவுகளும் குஜராத்தில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும் என்று கூறியது . கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விஞ்சும் வகையில் இப்போது பா.ஜ.க. இமாலய வெற்றி பெறும் என்பதை கருத்துக் கணிப்புகள் துல்லியமாகப் புலப்படுத்தின.

குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக பலகட்டப் பிரச்சாரங்கள், பேரணிகள், ரோட் ஷோக்கள் என்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்த நாள் அதற்கான வெற்றிப் பேரணியை மோடி குஜராத்தில்தான் நடத்தினார்.

உண்மையில் அவர் அப்போதே குஜராத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கான பலன் இன்று கிடைத்துள்ளது. ‘நான் உருவாக்கிய குஜராத்’ என்று அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி மோடி அலை மங்கவில்லை என்பதை இந்த தேர்தல் வெற்றிகள் நிரூபித்துவிட்டது.இது வெற்றிகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் குஜராத் மக்களுக்கு நன்றியினை கூறி பதிவிட்டுள்ளதாவது; குஜராத் மக்கள் சக்தியை நான் தலை வணங்குகிறேன். இந்த ஹிமாலய வெற்றியை பாஜகவிற்கு அளித்து, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது தேர்தல் முடிவுகள். தேர்தல் முடிவுகளின் மூலம் வளமான, முன்னேற்றமான அரசியலையும், இந்த வளர்ச்சி தொடரவும் மக்கள் விரும்புகிறார்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவருடைய மற்றொரு பதிவில் ” இந்த மாபெரும் வெற்றி குஜராத் கார்யகர்த்தாக்களால் சாத்தியமானது. அவர்களின் கடின உழைப்பின்றி இந்த வெற்றி நமக்கு கிடைத்திருக்க்கது. அவர்கள் ஒவ்வொருவரும் பாஜகவின் சாம்பியன்” என மனதார பாராட்டியுள்ளார்.

நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: –

கடந்த 27 ஆண்டுகளாக மக்கள் ஆசியுடன் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசாங்கத்தினை போலியான தேர்தல் வாக்குறுதிகளும், நம்பகத்தன்மையற்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளும் எதிர்த்து நிற்கமுடியாமல் தவிடுபொடி ஆகியுள்ளது . இந்த வரலாற்று வெற்றி குஜராத் மக்கள் மோடி மாடலுக்கு வழங்கிய வெகுமதியாகும். குஜராத் மக்களுக்கும், குறிப்பிடத்தகுந்த வெற்றியையும், தனது சாதனையை தானே தகர்த்தெறிந்துள்ள முதல்வர் பூபேந்திர படேலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

1.92 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முதல்வர் பூபேந்திர படேல் காட்லோடியா தொகுதியை தக்க வைத்துள்ளார். 2012 ல் 47.09 % இருந்த பாஜக வாக்கு விகிதம், 2017 ல் 50 % உயர்ந்திருந்தது. தற்போது 52.06% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் மணி நகர் வேட்பாளருக்கு 75 % மக்கள் வாக்களித்துள்ளனர். அங்கு கணிசமாக தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது புலம்பெயர்ந்தோர் நம் பிரதமர் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத பாசத்தை நிரூபிக்கின்றது. குஜராத்தில் கணிசமாக சிறுபான்மை மக்கள் தொகை கொண்ட 14 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும் குஜராத்தில் உள்ள 40 பட்டியலின தொகுதிகளில் 37 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையை எட்டியுள்ளது.

45 இடங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் வாக்கு வித்தியாசம் இரட்டை மடங்காக சென்ற தேர்தலைவிட அதிகரித்துள்ளது. குஜராத்தின் ஹிமாலய வெற்றி நிச்சயம் 2024 தேர்தலிலும் எதிரொலிக்கும். கம்யூனிஸ்ட்கள் வெறும் 0.06 % வாக்கு அடைந்துள்ளார். தேர்தல் கருத்துக்கணிப்புகளை ஆம் ஆத்மி அலசி ஆராயட்டும்,ராகுல் தான்என்னவிதமான சன்க்ளாஸ் அணியலாம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடட்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இமாசலப் பிரதேசத்தில் எப்போதுமே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாற்றி மாற்றி காங்கிரஸ் அல்லது பாஜகவை வெற்றி பெறச் செய்வது வழக்கமாகி விட்டது.

இந்த முறையும் அதுதான் நடந்தது.கருத்துக் கணிப்புகளும் தேர்தல் முடிவுகள் இழுபறியாகவே இருக்கும் என்றே கூறின. பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றியை தக்க வைத்து. ஒட்டு எண்ணிக்கை தொடங்கியபோது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மாறி மாறி ஒரு சீட், இரண்டு சீட் வித்தியாசம் இருந்து கொண்டே இருந்தது.பிறகு நேரம் செல்லச் செல்ல காங்கிரசின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து ஒரு கட்டத்தில் காங்கிரஸ் 11 சீட்கள் அதிக எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது.

ஆப்பிள் விவசாயிகளின் பிரச்னைகள், அக்னி வீரர் திட்டம் பற்றிய பொய்ப் பிரச்சாரம், காங்கிரஸ் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த உறுதி அளித்தது, பாஜகவின் உள்கட்சிப் பிரச்னைகள் ஆகியவை பாஜகவின் வெற்றி எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் காங்கிரசை விட 0.9% வாக்குகள் மட்டுமே பாஜக குறைவாகப் பெற்றுள்ளது. இமாச்சலின் ஒவ்வொரு வாக்காளருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக கிட்டத்தட்ட 1% குறைவான வாக்குகளைப் பெற்றிருக்கலாம் ஆனால் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் 100% பாடுபடுவோம்.’ என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version