
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் இன்று மணல் குவாரி அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயலாளர் ஹச்.ராஜா பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹச்.ராஜா
நான் மணல் கொள்ளைக்கு எதிரானவன்என தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
இருக்கன்குடியில் மணல் குவாரி துவங்குவதாக தகவல் வெளியானபோதே எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளேன.அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஆட்சியாளர்கள் மணல் ஏஜெண்டாக இருந்தார்கள.கரூரில் சில அமைச்சர்கள் மணல் கொள்ளையில் வரும் மாமூல் பணத்தை எண்ணுவதற்கு மிஷன் வாங்கியுள்ளனர்
இருக்கன்குடியில் மணல் குவாரி அமைந்தால் மணல் அரிப்பு ஏற்பட்டு பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் இடிந்து ஆற்றில் அடித்து செல்லப்படும் நிலை ஏற்படும்.இருக்கன்குடியில் மணல் குவாரி அமைந்தால் பாஜக தொடர் போராட்டம் நடத்தும்.கோவிலை அழிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் மணல் குவாரி அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் பொன் மாணிக்கவேல் சிலைகள் காப்பகங்களில் உள்ள பெரும்பாலான சிலைகள் போலி என கூறியுள்ளது இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது.சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையக்கப்படுத்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் சேகர் பாபு கூறியிருப்பது ஆடு நனையுது என நரி கவலைப்பட்ட கதையாக உள்ளது.ஹிந்து கோவில்களில் தங்கமே இருக்க கூடாது என்ற நோக்கில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு செயல்பட்டு வருகிறார்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பணத்தை வைத்து குளத்தூரில் கல்லூரி கட்டி வருவது நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது.கோவில் நிதியை ஆன்மீகம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.பொங்கலூர் பழனிச்சாமி கல்லூரி வளாகத்திற்குள் சிதம்பரம் கோவில் வில்வ பூஜைக்காக எழுதி வைக்கப்பட்ட 9 ஏக்கர் நிலம் ஏன் இன்னும் மீட்கப்படவில்லை.தான் ஜெயிலுக்கு போவதை மறைக்க வேண்டும் என்பதற்காக ரபேல் வாட்ச் பற்றி செந்தில் பாலாஜி பேசி வருகிறார்
தனிப்பட்ட குறைகள் இருந்தால் காயத்ரி ரகுராம் தற்பொழுதும் தலைவரை அணுகலாம் இல்லையென்றால் மேலிடத்தில் அணுகலாம்.கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசமாட்டேன்.544 தொகுதியிலும் நிற்க தகுதி வாய்ந்தவர் பிரதமர் மோடி மட்டுமே.அவர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.பிரதமர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து மத்திய தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை
மனிதனாக இருக்கவே தகுதி இல்லாத எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை பற்றி பேச தகுதி இல்லை.திமுக தலைவராக இருக்க மு.க.ஸ்டாலினுக்கு தகுதி உள்ளதா என்பதை பற்றி எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விவாதிக்க வேண்டும்.சுய மரியாதை இல்லாதவர்கள் உள்ள கட்சி திமுக.மதுரை டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, குரங்கு மரம் மரமாக தண்டினால் நான் எப்படி விளக்கம் கொடுக்க முடியும் என்றார்.