More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeஅடடே... அப்படியா?ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: மனுத் தாக்கல் முன்பே தேர்தல் பணிகள் மும்முரம்!.
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: மனுத் தாக்கல் முன்பே தேர்தல் பணிகள் மும்முரம்!.

    ஈரோடு கிழக்கு தொகுதி
    இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி  27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல்
    பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.238 வாக்குச்சாவடிகளிலும் மொத்தமாக 882 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ஈரோட்டில் பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் பின்னர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து பாஜக கருத்து தெரிவிக்காத நிலையில் தனித்து களம் காண்பதாக அதிமுக முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    ஆனால் இதுவரை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அறிவிக்காமல் பாஜக மவுனம் காத்து வருகிறது.கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்தார். அதிமுக பிரிந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள், 98.5% பேர் ஒரே அணியில்தான் இருக்கிறோம். இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாட்களுக்குள் முடிவு தெரியும் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.

    டி.டி.வி தினகரனும் தன்பங்குக்கு வேட்பாளரை அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தனது வேட்பாளராக நடிகர் பாக்யராஜை அறிவிக்கலாம் என தெரியவந்துள்ளது.மநீமை நடிகர் கமல்ஹாசன் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கரம்‌நீட்டிவிட்டார்.பாமக,சமக மற்றும் உதிரி கட்சிகள் களம் காணாமல் ஒதுங்கி கொண்டது.
    இன்று வரை தொகுதியில் காங்கிரஸ் அசுரபலத்துடன் இருக்கிறது.


    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். மொத்தம் 238 வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்த சுமார் 1408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
    தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.

    வாக்கு இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம்  கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 286 கட்டுப்பட்டு இயந்திரங்கள், 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.பிப்ரவரி 27-ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 238 வாக்குச்சாவடிகளிலும் மொத்தமாக 882 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மகன் மறைவால் களத்தில் ஈவிகேஎஸ்இ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    16 − 9 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version