
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ். தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியான நிலையில் இன்று ஈரோடு மணல்மேட்டில் தனது முதல் பிரசாரத்தை இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு தொடங்கியுள்ளார்.
இன்று முன்னாள் அமைச்சர்கள் கேஎஸ் செங்கோட்டையன், கேவி ராமலிங்கம் தலைமையில் வேட்பாளர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஈரோடு மணல்மேட்டில் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார்.
முன்னதாக அந்த பகுதியில் உள்ள முருகன், எல்லை மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு அதிமுகவினர் பிரசாரத்தை தொடங்கினர்.
வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
மற்ற அரசியல் கட்சியினர் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் இன்று முதல் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.