அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் 110 விதியின்கீழ் அறிவித்த பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விழுப்புரத்தில் போதை ஆசாமிகளால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கஞ்சா சாதாரணமாக கிடைக்கிறது. அம்மா உணவகத்தில் தரமில்லாத உணவு வழங்கப்படுகிறது.
அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.