- Ads -
Home அரசியல் யுஜிசி விவகாரம்; நீதிமன்றம் செல்வதே சரி என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

யுஜிசி விவகாரம்; நீதிமன்றம் செல்வதே சரி என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. நீதிமன்றம் செல்வது தான் இதற்கு சரியான முடிவாக இருக்கும் என்று

யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. நீதிமன்றம் செல்வது தான் இதற்கு சரியான முடிவாக இருக்கும் என்று, அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேமுதிக மாவட்ட செயலாளர் செய்யது காஜா செரிப் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தேமுதிக போது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் வருகை புரிந்தனர். முன்னதாக அருப்புக்கோட்டை அருகே விஜயகாந்த் பிறந்த ஊரான ராமானுஜபுரத்தில் தேமுதிக கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் இணைந்து தேமுதிக கட்சி கொடி ஏற்றி வைத்தனர்.

ALSO READ:  திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

அருப்புக்கோட்டை அருகே ராமராஜபுரத்தில் உள்ள இந்த இடம் விஜயகாந்த் பெயரிலேயே உள்ளது தற்போது இங்கு விஜய பிரபாகரன் கையால் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த மக்களுக்கு கல்யாண மண்டபம் கட்டித் தருவோம் என இந்த மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம் கல்யாண மண்டபம் கட்டித் தந்து இந்த இடத்தை முன்னேற்றாவோம். எங்களுடைய பூர்வீக இடத்திற்கு வந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என பேசினார்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் பல்கலைக்கழகங்கள் உள்ளது ஆளுநர் அவருடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கிறார். இது அவருடைய சுயநலத்தை காட்டுகிறது என மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆளும் அரசும் ஆளுநரும் இணைந்து தான் செயல்படுத்துகின்றனர்.‌ இவர்களுக்குள் இருக்கக்கூடிய ஈகோ காரணமாக ஆளுநருக்கு எந்த உரிமை இல்லை என ஆளுங்கட்சி சொல்வதும் ஆளுநர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என அவர்கள் சொல்வதும் தொடர்ந்து மூன்று வருடமாக நடைபெற்று வருகிறது.‌ சட்டப்படி அங்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடந்தால் அனைவருக்கும் நல்லது. இருவரும் ஈகோவுடன் இருப்பதால் யாருக்கும் எந்த பலனும் கிடையாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால் இந்த நாட்டுக்கு நல்லது என பேசினார்

ALSO READ:  யோகி அரசின் மஹாகும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பு; பாதுகாப்பாக உணர்கிறோம்: வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! 

பெரியார் குறித்து சீமான் கூறிய கருத்து பற்றி கேட்டதற்கு,

அதைப்பற்றி கருத்து கூற விரும்பவில்லை ஒருவர் கூறிய கருத்தை பற்றி என்னிடம் நீங்கள் கேள்வி கேட்கக்கூடாது.‌ அதற்கான பதிலை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என பேசினார்

பல்கலைக்கழக யுஜிசி விதிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

ஒற்றுமையுடன் செயல்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. தொடர்ந்து மூன்று வருடமாக ஆளும் கட்சிக்கும் ஆளுநருக்குமிடையே முரண்பாடாண விஷயங்கள் நடைபெற்று வருகிறது.‌ ஆளுநர் சட்டப்பேரவைக்கு வருவதும் வெளிநடப்பு செய்வதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயம் என்கிறார்கள்.‌ நீதிமன்றம் செல்வது தான் இதற்கு சரியான முடிவாக இருக்கும் என பேசினார்.‌

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் தேமுதிக அதிக வாக்குகள் பெற்றுள்ளது மீண்டும் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிடுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டியிடும். யார் வேட்பாளர் யாருக்கு எந்த தொகுதி என்பதை தற்போது கூற முடியாது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அது குறித்து தெரிய வரும் என பேசினார்

ALSO READ:  IND Vs ENG T20: தொடரை வென்ற இந்திய அணி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version