- Ads -
Home அரசியல் “நீங்கள் ஒரு மோசடிப் பேர்வழி”: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

“நீங்கள் ஒரு மோசடிப் பேர்வழி”: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!

தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உங்கள் முயற்சிகள் அம்பலமாகி விட்டதை நீங்கள் உணரவில்லை என்பது துரதிஷ்டவசமானது.

அண்ணாமலை – ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி

“தங்கள் வாக்கு வங்கிகளைத் திருப்திப்படுத்த பிரிவினைவாதம் பேசுகிறார்கள் சிலர்” என்று யோகி ஜி சொன்னது தன்னைத் தான் என்று புரிந்து கொண்ட திமுக., தலைவரும் தமிழக மாநில முதல் அமைச்சருமான மு.க. ஸ்டாலின், “எங்கள் இருமொழிக் கொள்கையைக் கண்டு பாஜக பயந்து விட்டது” என்று பதிவிட்டார். பதிலுக்கு அந்தப் பதிவை கோட் செய்த தமிழக பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை, நீங்கள் உண்மையில் ஒரு மோசடிப் பேர்வழி என்று பதில் கொடுத்துள்ளார். 

“தங்கள் வாக்கு வங்கி ஆபத்தில் இருப்பதாக உணரும்போது, மொழி குறித்த பிளவுகளை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்திருந்தார். 

ALSO READ:  IPL 2025: பெங்களூர், மும்பை அணிகளின் கம்பேக் வெற்றிகள்!

யோகி ஆதித்யநாத் தன்னைத்தான் விமர்சிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட ஸ்டாலின், அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், ‘மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா?’ என்று நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு பதில் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், தமிழக மாநில முதல் அமைச்சர் ஸ்டாலினின்  இந்தக் கருத்துக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

ALSO READ:  தமிழக அரசே, போதைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இளைஞர் நலனை உறுதி செய்க!

அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பின் பாதுகாவலர் என்ற போர்வையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு மோசடியாளராகத் திகழ்கிறார். பொதுவாக மோசடி செய்பவர்கள் பணக்காரர்களைக் குறிவைத்துதான் ஏமாற்றுவார்கள். ஆனால் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பணக்காரர்களையும் ஏழைகளையும் சேர்த்து திமுக., ஏமாற்றுகிறது.

தமிழக முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் 3 மொழிகள் கற்பிக்கப்படுவதும், ஆனால் அதனை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒட்டுமொத்த நாட்டுக்கே தெரியும். எனவேதான் உங்களை கபட நாடகம் ஆடுபவர் என்று அழைக்கிறார்கள்.

அங்கங்கே தனது கட்சிக்காரர்கள் நடத்தும் நாடகங்களை தமிழக மக்களின் குரல் என்று முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். தேவையற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உங்கள் முயற்சிகள் அம்பலமாகி விட்டதை நீங்கள் உணரவில்லை என்பது துரதிஷ்டவசமானது.

அறியாமை என்னும் பேரின்ப உலகில் நீங்கள் வாழுங்கள்; நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version