- Ads -
Home அரசியல் இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துகளை சட்ட விரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க துணைபோகும் திமுக., அரசு!

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லிம்களின் ஓட்டிற்காக தமிழர்களின் அடிப்படை உரிமையை மறுக்க துணை போகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று, இந்து முன்னணி எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

இன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்வதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் வக்ஃப் வாரியத்திற்கு வானளாவிய அதிகாரத்தை வழங்கி அநியாயம் செய்தது. இதன் மூலம் முறைகேடாக எந்த ஆதாரமும் இல்லாமல் அரசின் சொத்துக்களை, இந்துக்களின் பாரம்பரிய சொத்துக்களை வக்ஃப் சொத்து என்று ஆக்கிரமிக்கும் போக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ALSO READ:  கச்சத்தீவு நாடகம் நடத்துவது யார் என்பது மக்களுக்குத் தெரியும்!

இந்நிலையில் தான் மத்திய அரசு, வக்ஃப் வாரியம் திருத்த சட்டம் குறித்து மக்களின் கருத்தை கேட்டு ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்த்ததால் மத்திய அரசு பாராளுமன்ற கூட்டுக்குழுவை ஏற்படுத்தியது. பாராளுமன்ற கூட்டுக்குழு நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது.

இந்நிலையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யவுள்ளது.
வக்ஃப் வாரிய சொத்து பிரச்சினை தமிழகத்தில் இல்லையா? அரசுக்கு அதைப்பற்றி தெரியாதா? பாதிக்கப்பட்டவர்கள் கதறல் காதில் விழவில்லையா?

எவ்வித ஆவணமும், ஆதாரமும் இல்லாமல் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்து என குறிப்பிட்டு பல பேர்களின் தலையில் மன்ன அள்ளிப் போட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது தமிழ்நாடு வக்ஃப் வாரியம்.

உதாரணமாக திருச்சி மாவட்டம் திருச்செந்துறையில் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்பட சுமார் 375 ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரிய சொத்து என்று கூறியது. அங்குள்ள இந்துக்கள் தங்கள் சொத்துக்களை விற்பதற்கு வக்ஃப் வாரியத்திடம் தடையில்லாத சான்றிதழ் (NOC) வாங்கி வரும்படி பதிவாளர் கூறினார். அப்போதுதான் தமிழர்களுக்கு வக்ஃப் வாரியத்தின் முறைகேடாக சொத்து அபகரிப்பு பித்தலாட்டம் தெரியவந்தது.

ALSO READ:  அப்பாவிகளைக் கைது செய்ய பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு, வேலையில் கோட்டை விடும் திமுக., போலீஸ்!

அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, பவானி பகுதி, திண்டுக்கல் மாவட்டம் பழனி, பாலசமுத்திரம், நெல்லை மாவட்டம் பழைய பேட்டை, ராணிப்பேட்டை வேப்பூர், சென்னை திருவல்லிக்கேணி என பல பகுதிகளில் இந்துக்களின் சொத்துக்களை வக்ஃப் வாரிய சொத்து என்று எந்த ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் உரிமை கொண்டாடியது வக்ஃப் வாரியம்.

மக்களின் எதிர்ப்பின் காரணமாக நயவஞ்சகமாக ஒரு சதியை தமிழக அரசு செய்தது. அது தற்காலிகமாக வக்ஃப் வாரிய தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பத்திர பதிவை செய்ய மாவட்ட ஆட்சியர் அதிகாரத்தை பயன்படுத்த வைத்தது.

தங்கள் சொத்துக்களை வக்ஃப் வாரியம் சட்டவிரோதமாக அபகரிக்க திமுக உள்பட அரசியல் கட்சிகள் துணைபோகின்றன என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி பணத்தை கொடுத்து சட்டப்படி வாங்கி பதிவு செய்த சொத்துக்களை கள்ளத்தனமாக வக்ஃப் வாரிய சொத்து என்று அபகரிப்பது குறித்து பாஜக தவிர மற்ற அரசியல் கட்சிகள் வாயை திறக்கவில்லை.

ALSO READ:  அரிதாரம் கலைகிறது; அசிங்கம் தெரிகிறது!

இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து தமிழக முதல்வர் கொண்டு வரும் மசோதா தமிழக மக்களுக்கு விரோதமானது.

மத்திய அரசு கொண்டு வரும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மாநில அரசு கொண்டு வரும் மசோதாவின் உள்நோக்கத்தை தமிழக மக்கள் உணர வேண்டும்.

திருத்த மசோதாவை தமிழக மக்கள் பகிரங்கமாக ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் பாரம்பரியமான நமது சொத்துக்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

இந்துக்களின் சொத்துக்களை சட்டவிரோதமாக வக்ஃப் வாரியம் அபகரிக்க தமிழக அரசு துணை போவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version