November 28, 2021, 7:42 am
More

  கர்நாடக அரசியலில்… பாஜக.,வின் வெற்றி முகமாக நிற்கிறார் ஸ்ரீராமுலு!

  இனி எடியூரப்பாவை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டி எதாவது ஒரு மாநில கவர்னராக்கி கோ ஸ்டி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து ஸ்ரீராமுலு மாதிரி ஒரு இளைய தலைவர் கைகளில் ஆட்சியை கொடுத்தால் அவர் இன்னொரு மோடி சிவராஜ்சிங் சவுகான.ராமன்சிங் மாதிரி கர்நாடகாவிலும் ஆட்சி யை தொடர்ந்து தக்க வைத்து கொள்வார் என்று அமி த்ஷா நினைப்பதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

  karnataka bjp1 - 1

  கர்நாடக அரசியலில் அடுத்த தலைவர் ஸ்ரீராமுலு- கர்நாடக சட்டமன்ற தேர்தல் களைகட்டிவருகிறது.

  நாளுக்கு நாள் பிஜேபிக்கு ஆதரவு அதிகரித்து கொண் டே வருகிறது.சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. சிஎஸ் டி எஸ் என்கிற நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எடுத்த கருத்துகணிப்பின் படி காங்கிரஸ் கட்சி 47 சதவீத வாக்குகளின் படி முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது அதே சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு என்ன சொல்கிறது என்றால் காங்கிரஸ்க்கு 37 சத வீத வாக்குகள் தான் கிடைக்கும் என்பதோடு பிஜேபி தனிப்பெரும் கட்சியாக வரும் என்கிறது.

  கொஞ்சம் யோசித்து பாருங்கள்..ஒரே நிறுவனம் அறிவித்த கருத்துக்கணிப்பில் மூன்றே மாதங்களில் காங்கிரஸ் 10 சதவீத வாக்குகளை இழக்கும் சூழ்நி லை கர்நாடகாவில் இருக்கிறது என்றால் தேர்தலு க்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் காங்கிரசி ன் வாக்குகள் குறைந்து கொண்டே வரும் எனபது நிச்சயம்.

  காங்கிரஸ் கட்சிக்கும் பிஜேபிக்கும் இடையில் ஒரு 4 சதவீத வாக்கு வித்தியாசம் இருந்தாலே அதாவது பிஜேபி 4 சதவீத வாக்குகள் மட்டும் காங்கிரசை விட அதிகமாக பெற்று விட்டாலே போதும் பிஜேபி வரலா று காணாத வெற்றியை பெற்றுவிடும்.அதே நேரத்தி ல் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும்.
  .
  என்னுடைய ஆசைப்படி கர்நாடக தேர்தல் முடிவுகள் இதை நோக்கியே சென்று கொண்டு இருக்கின்றது. என்று நான் நம்புகிறேன். பிஜேபி வேட்பாளர் தேர்வி ல் சில தொகுதிகளில் தவறு செய்து இருந்தாலும் ஓட்டு மொத்தமாக காங்கிரஸ்கட்சிக்கு எதிராக வீசும் அலையில் இந்த தவறுகள் எல்லாம் காணாமல் போ ய் விடும்.

  எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கடந்த தேர்தலி ல் சீதாராமையா நின்று வென்ற தொகுதியான வரு ணாவில் சீதாராமையாவின் மகன் யதிந்திராவை எதிர்த்து போட்டியிட ஆசைப்பட்டு மாசக்கணக்கில் வருணா வில் வீடு பிடித்து தங்கி பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.

  ஆனால் அமித்ஷா எடியூரப்பா மகனுக்கு சீட் கிடை யாது என்றவுடன் அமித்சாவின் கொடும்பாவியை கொளுத்திய சில பிஜேபி தொண்டர்கள் வருணாவில் இருக்கும் பிஜேபி ஆபீஸையும் அடித்து நொறுக்கிவி ட்டார் கள்.அது மட்டுமல்லாது 2 பிஜேபி தொண்டர் கள் எடியூரப்பா மகனுக்கு சீட் கிடைக்க வில்லை. அதனால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோ ம் என்று கூறி தற்கொலை செய்து கொண்ட கோமா ளித்தனமெல்லாம் நடந்தது.

  உடனே காங்கிரஸ்கார பக்கிகள் ஹைய்யா ஜெயிச் சாச்சு என்று வெடி போட் டு கொண்டாடினார்கள் அந்தமுட்டாள் காங்கிரஸ் தற்குறிகளுக்கு சொல்லி கொள்கிறேன்..லிங்காயத்துகளை தனி மதமாக்கிய தால் இனி லிங்காயத்துக்கள் பிஜேபி பக்கம் கிடை யாது காங்கிரஸ் பக்கம் வந்துவிட்டார்கள் என்று அ ள்ளி விட்ட சீதாராமையாவின் முகத்தில் கரியை பூசும் வண்ணம் கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டு இருக்கிறது.

  லிங்காயத்து பிரச்சனையையே ஒன்றுமில்லாமல் புஸ்வாணமாக்கிய அமித்ஷாவுக்கு எடியூரப்பா மக னெல்லாம் சப்பை மேட்டர்.எடியூரப்ப்பா மகன் மூல மாக இன்னொரு ஜெகன் மோகன் ரெட்டி கர்நாடகா அரசியலில் உருவாகி விடக்கூடாது என்பதற்க்காக வே அமித்ஷா திட்டமிட்டு வருணா தொகுதியை எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு இல்லை என்று விட்டார்.

  இந்த தேர்தலோடு எடியூரப்பா கர்நாடகா பிஜேபியில் இருந்து நிச்சயமாக ஓரங்கட்ட படுவார்.இப்பொழுது கூட அமித்ஷா எடியூரப்பாவை விட கர்நாடகாவில் பிஜேபியை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னு டை ய பொறுப்பு என்கிற அளவில் அவர் தான் கடு மையாக வேலை செய்து வருகிறார்

  இப்போதைக்கு லிங்காயத்து தனி மதம் பஞ்சாயத்து இருப்பதால் கர்நாடக அரசியலில் நிஜலிங்கப்பாவுக் கு பிறகு லிங்காயத்து மக்களின் ஆதரவு பெற்ற தலைவர் எடியூரப்பா என்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே பிஜேபி அவரை முதல்வர் வேட்பாளராக்கி யது. இனி தேர்தல்முடிந்து எடியூராப்பாவை முதல்வ ராக்கி பாராளுமன்ற தேர்தல் வரை மட்டுமே வைத் திருக்க வாய்ப்புள்ளது.

  75 வயதுக்குமேல் உள்ள பிஜேபி தலைவர்களை மோ டியும் அமித்ஷாவும் இந்த வயசில் உங்களுக்கு கட்சி யை பற்றிய கவலை எதற்கு? அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீங்கள் வீட்டில் நிம்மதியாக ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று வீட்டுக்கு அனுப்பியது போல  எடியூரப்பாவையும் விரைவில் அமிதஷா வீட்டுக்கு அனுப்பி விடுவார்.ஏனென்றால் எட்டிக்கு வயது 75 முடிந்து விட்டது.

  அதனால் எடியூரப்பாவை ஓரங்கட்டிவிட்டு ஸ்ரீராமு லு வை வளர்த்து விடுகிறார் அமித்ஷா.முதல்வர் வேட்பாளரின் மகனுக்கு சீட் இல்லை என்று கூறி வி ட்டு எம்பியாக இருக்கும் ஸ்ரீராமுலுவை பதாமி மற் றும் மொலகால் முரு என இரு தொகுதிகளில் போட் டியிட வைத்ததன் மூலமாக கர்நாடகாவில் இனி பிஜேபி யின் அரசியல் ஸ்ரீராமுலுவை சுற்றியே இரு க்கும் என்று தெளிவாக கூறிவிட்டார்.அமித்ஷா

  அடுத்து வரும் பிஜேபி ஆட்சியில் ஸ்ரீராமுலு தான் துணை முதல்வர் என்று சூடம் அடித்து சொல்கிறார் கள் வால்மீகி நாயக் என்கிற பழங்குடி மக்கள். கரநா ட க மக்கள் தொகையில் சுமார் 7 சதவீதம் இருக்கும் வால்மீகி நாயக் மக்களின் நாயகன் ஸ்ரீராமுலு தான் இவருக்கு பெல்லாரி வட்டாரத்தில் என்ன பெயர் தெ ரியுமா? ராபின்ஹூட் என்றே ஸ்ரீராமுலுவை பெல் லாரி மக்கள் அழைக்கிறார்கள்.

  கர்நாடகாவில் இருக்கும் 25 சதவீத தலித்களின் ஒட் டுமொத்த பிரதிநிதியாக ஸ்ரீராமுலுவை முன்னிறுத் தி பிஜேபி லிங்காயத்துகளின் கட்சி என்கிற அடையா ளத்தை களைய விரும்புகிறது.இதற்கு தான் எடியூரப் பா மகன் விஜயேந்திரா மற்றும் எட்டியின் நண்பி ஷோபா என்று நிறைய எட்டியின் ஆதரவாளர்களுக் கு சீட் கிடைக்காமல் போய்விட்டது.

  அது மட்டுமல்லாது பிஜேபியை விட்டு ஓரங்கட்டப் பட்ட ரெட்டி பிரதர்ஸ்களில் ஜனார்த்தன ரெட்டியை தவிர அவருடைய அண்ணன் கருணாகர ரெட்டிக்கும் தம்பி சோமசேகர ரெட்டிக்கும் இந்தக தேர்தலில் போ ட்டியிட சீட் கொடுக்கப் பட்டுள்ளது.இந்த ரெட்டி பிரத ர்ஸில் ஜனார்த்தன ரெட்டி தான் சுரங்க ஊழல்குற்றச்
  சாட்டில் ஜெயிலுக்கு சென்றவர்..அதனால் அவருக்கு மட்டும் சீட்டு நஹி.

  இந்த ரெட்டி பிரதர்ஸ்க்கு சீட் கொடுக்கப்பட்டதன் முக்கிய காரணம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்காததால் கர்நாடகாவில் ஆந்திராவுக்கு அரு கில் இருக்கும் மாவட்டங்களில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களிடம் பிஜேபி மீது கோபம் இருக்கிறது. இதை தணிக்க தான் பெல்லாரி பிரதர்ஸ் என்று சொல்லப்படும் மூவரில் இருவர்க்கு சீட் கொடுக்கப் பட்டுள்ளது.

  இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் 2008 சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை ஜெயிக்க வைக்கவும் ஆட்சியில் அமர்த்தவும் ரெட்டி பிரதர்ஸ் நிறைய வேலை செய்துள்ளார்கள்.ஆப்பரேசன் கமல் என்கிற ஒரு திட்டத்தையே தயாரித்து அதன்படி  செயல்பட்டு கர்நாடகாவில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்தது இந்த ரெட்டி பிரதர்ஸ் தான்.

  அதனால் தான் அவர்களில் படா கேடியான ஜனார்த் தன ரெட்டிக்கு சீட் இல்லை என்ற அமித்ஷா அவரு டைய சோட்டா கேடி அண்ணன் கருணாகர ரெட்டி க்கு பெல்லாரி மாவட்டத்தில் ஹரப்பனஹள்ளி தொ குதியிலும் இன்னொரு சோட்டா கேடி தம்பி சோம சேகர ரெட்டி க்கு பெல்லாரி தொகுதியி லும் சீட் கொடு த்துள்ளார்.அமித்ஷா.

  இதனால் ஆந்திர கர்நாடக எல்லையில் இருக்கும் மூன்று மாவட்டகளில் இருக்கும் சட்டமன்ற தொகு திகளில் பிஜேபி வெற்றி பெறும் வாயப்பு அதிகரித்துள்ளது. இன்னொரு விஷயம் இந்த ரெட்டி பிரதர்ஸ்க ளின் வலதுகரம் யார் தெரியுமா?நம்ம ஸ்ரீராமுலு தா ன் பாருங்கள் கடந்த பிஜேபி ஆட்சியில் எடியூரப்பா வோடு யாரெல்லாம மல்லுக்கு நின்றார்களோ அவர் களை எல்லாம் தேடிப்பிடித்து அமிதஷா சீட் கொடுத்துள்ளார்.

  இதிலிருந்து எடியூராப்பாவுக்கு அமித்ஷா இனி கட்சி உங்களை நம்பி இல்லை என்று கிளியர் மெசேஜ் கொடுத்து விட்டார்.இந்தியாவிலே பிஜேபி ஆளும் மற்றும் ஆண்ட மாநிலங்களில் அதிகளவு கோஸ்டி பூசல்கள் உடைய ஒரே மாநிலம் கர்நாடகா தான்,
  இனி கர்நாடகாவில் கோஸ்டி அரசியல் தலைஎடுக்க கூடாது என்றால் அதற்கு முதலில் வாரிசு அரசிய லை ஒழிக்க வேண்டும்.இதற்க்காகவே எடியூரப்பா மகனுக்கு சீட் கிடைக்காமல் போய்விட்டது.

  இனி எடியூரப்பாவை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டி எதாவது ஒரு மாநில கவர்னராக்கி கோ ஸ்டி அரசியலுக்கு முற்றுபுள்ளி வைத்து ஸ்ரீராமுலு மாதிரி ஒரு இளைய தலைவர் கைகளில் ஆட்சியை கொடுத்தால் அவர் இன்னொரு மோடி சிவராஜ்சிங் சவுகான.ராமன்சிங் மாதிரி கர்நாடகாவிலும் ஆட்சி யை தொடர்ந்து தக்க வைத்து கொள்வார் என்று அமி த்ஷா நினைப்பதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.

  – விஜயகுமார் அருணகிரி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,746FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-