வணிகர் தினக் கூட்ட மேடையில் ஸ்டாலினுடன் ராமதாஸ் பங்கேற்பு: கிங் மேக்கரா? கேங் ஜோக்கரா?

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

சென்னை: சென்னை வேலப்பன் சாவடி அருகே இன்று காலை நடைபெற்ற வணிகர் தின மாநாட்டின் மேடையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பாமக நிறுவனர் ராமதாஸும் பங்கேற்று இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

மே 5ஆம் தேதி வணிகர் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, சென்னை வேலப்பன்சாவடியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மாநாடு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய மாநாட்டில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் மேடையில், மு.க.ஸ்டாலினும், ராமதாஸும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

முன்னதாக, பாமக., குறித்து திமுக., ஒரு தகவலைப் பரப்பி விட்டது. கூட்டணி குறித்த பேச்சுக்கள் தலை எடுத்தன. காவிரி விவகாரத்தில் திமுக., சார்பில் சாய்ந்தது பாமக., இரு தரப்பும் தனித்தனியே போராட்டங்களை நடத்தினாலும், ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்டு போராட்டங்களில் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதாக பரவலாகப் பேசப்பட்டது.

இதை அடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கிங் மேக்கராக மாறுகிறது; கூட்டணிக்கு தயாராகிறது என்பதெல்லாம் திமுகவால் பரப்பப்படும் வதந்திகள். அவற்றை நம்ப வேண்டாம். கவனம் சிதறாமல் இலக்கை நோக்கி பயணிப்போம்! – என்று ராமதாஸ் டிவிட்டர் அறிக்கை விட்டார். காரணம், அன்புமணியை மையமாக வைத்து அடுத்த தலைமுறை அரசியலை மேற்கொள்ள ராமதாஸ் திட்டமிடுவதுதான்!

இதுவரையிலும், பாமக., இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து மத்தியில் பலன் பெற்றது என்றாலும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையாமல், இரு திராவிடக் கட்சிகளின் முழு ஆதிக்க ஆட்சியே அமைந்து வந்தது. இதனால் தங்கள் செல்வாக்கு வளராமல் ஆட்சியில் பங்கு கிடைக்காமல் போவதை உணர்ந்து ராமதாஸ், இனி இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

 

இப்போதும் அப்படி ஒரு நிலைப்பாட்டைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றாலும், திமுக.,வுக்கு முட்டுக் கொடுக்கும் அவரது போக்கு, பாமக.,வினரிடையே திமுக.,வுடன் கட்சித் தலைமை சாய்கிறது என்ற எண்ணத்தையே ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு ஏற்றார்ப் போல், இன்னொரு டிவிட்டர் பதிவில், திமுக.,வுக்கு வக்காலத்து வாங்கியும் அதிமுக.,வை விமர்சனம் செய்தும் பதிவிட்டிருந்தார்.

ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி – உண்மை தான். பினாமிகளின் செயல்பாடுகளால் அந்த அளவுக்கு அருவருக்கத்தக்கதாக அதிமுக மாறிவிட்டது!- என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று திமுக.,செயல் தலைவர் ஸ்டாலினுடன் அருகருகே அமர்ந்து கொண்டு, ஒரு செய்தியை கட்சியினருக்கு காட்டியுள்ளார். எனவே தாம் ஒரு கிங் மேக்கராக மாறி வருவதாகக் கூறிக் கொண்டாலும், அது கேங் ஜோக்கராகத்தான் வெளிப்பட்டு வருகிறது!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...