இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி -மய்யத்தலைவர் கமல்ஹாசன்

இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது. செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து மக்கள் நீதி மய்யம் குறித்தும் அதன் செயலி குறித்தும் பேசிவருகிறார் அதோடு மட்டுமின்றி கிராமங்களை தத்தெடுப்பது,மக்களின் குறைகளை கேட்டறிந்து அதனை களைவது குறித்து பேசிவருகிறார் இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் பயணம் செய்துவரும் இன்று பாவூர்சத்திரம் வருகை தந்தார்  பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கமலஹாசன் மக்களிடையே பேசியதாவது

நீங்கள் நாளையை பற்றி யோசித்து கொண்டு  இருக்கீன்றீர்கள். இன்றைய பற்றி யோசித்தால் தான் நாளை நமதாகும். உங்களிடத்தில் செல்போன் இருக்கிறது அதில் மய்யம் செயலி இருக்கிறது. மய்யத்தின் செயலியை நல்ல படி பயன்படுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு செய்தி அனுப்புங்கள். இது போன்ற தொடர்புள்ள அழுத்தமான கட்சி ஏதும் இல்லை. கட்சிக்கு 2 மாதம் தான் வயசு. ஆனால் இது நல்ல யுத்தி. நமக்கே உரித்தான யுக்தி. நம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே இது போன்ற செயலி இருக்கிறது.
செயலி என்பது மக்கள் நலன் கருதி, நாட்டை செதுக்க வல்ல நல்ல உளியாக இது இருக்கும் என நம்புகிறேன். அதனை மேலும் சிறப்பாக வைத்திருக்க வேண்டியது உங்கள் கடமை. மக்கள் நீதி மய்யத்தையும் இவ்வாறு நீங்கள் பாதுகாக்க வேண்டும் இது உங்கள் மையம்  இவ்வாறு அவர் மக்கள் மத்தியில் பேசினார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்  தலைமையில் கமலஹாசனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கமலஹாசன் தன்னை கட்சித்தலைவராக நினைக்கிறார் ஆனால் அவரோடு வரும் ஜிம் பாய்ஸ் அவரை ஒரு நடிகராகத்தான் பார்கிறார்கள் போல ,அவர் கார் அருகே கூட நெருங்க விடவில்லை ,வழக்கமாக ஒரு கட்சி நிகழ்ச்சி என்றால் உள்ளூர் கார்கள் ஒருங்கிணைப்பர்கள் ,இங்கே நேர் எதிர் அவரோடு வரும் ஜீன்ஸ் இளைஞர்கள் கமலை யாரும் நெருங்கி விடக்கூடாது என்கிற எண்ணத்தில் கட்டும் கெடுபிடிகளை மக்கள் ரசிக்கவில்லை ,செயலியை மையப்படுத்தி கமல் பேசுவதாலோ என்னமோ தெரியல பலரும் அவரின் பேச்சை கேட்பதை விட அவரை படம் எடுக்கவும் ரோட்டில் இருந்து செல்பி எடுக்கவும் ஆர்வம் கட்டிக்கொண்டிருந்தனர்