2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும்..! போட்டுடைத்த நடிகர் விஷால் !

விஷாலின் இந்தக் கருத்து, தேர்தல் அரசியலுக்காகத்தான் ஸ்டெர்லைட் போராட்டமே பனிமயமாதா சர்ச்சில் இருந்து பாதிரிகளால் தூண்டிவிட்டு நடத்தப் படுகிறது என்ற சிலரின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பது போல் அமைந்திருக்கிறது.

வரும் 2019ஐக் குறிவைத்தே ஸ்டெர்லைட் போராட்டமும் நடைபெறுகிறது என்று, தேர்தல் அரசியலைத் திணித்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷால்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட டிவிட்டர் அறிக்கையில்,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்கள் மிருகத்தனமாக கொல்லப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள விஷால், மரியாதைக்குரிய பிரதமர் கண்டிப்பாக தன் அமைதியான மனநிலையைக் கலைக்க வேண்டிய நேரம் இது. போராட்டம் ஜனநாயகத்தில் ஒன்று. அதில் ஏன் மக்கள் ஈடுபடக் கூடாது. அரசாங்கம் மக்களுக்காகத் தான், வேறு யாருக்கும் அல்ல.

2019 பற்றி கவனமாக யோசிக்க வேண்டும் மக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் விஷால்.