தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்

தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமிஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகம்தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 28.05.2018திங்கட்கிழமை,காலை 10.00 மணிக்குதமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்டமாக ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகளும், கழக தொண்டர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என அறிக்கையில் தெரிவிக்ப்பட்டுள்ளது