திமுக ஆட்சி காலத்தில் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

மதுரை விமான நிலையத்தில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் uயங்கரவாதிற்கு அனுமதி இல்லை .ஒரு போதும் அ னுமதிக்க மாட்டோம்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுபாடு வாரியம் நோட்டிஸ்க்கு விளக்கம் அளிக்காததால் மின் சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

துப்பாக்கி சூடு நடத்தியது துரதிஸ்டவசமானது, கவலையளிக்கிறது, வேதனையளிக்கிறது. இதனை நியாயப்படுத்த வில்லை. நாளை நானும் துணை முதல்வரும் தூத்துக்குடி சென்று நேரிடையாக பார்வையிட உள்ளோம்.

இணைய சேவையை பிரச்சினைக்காக முடக்கியது வட மாநிலங்களில் உள்ள நடை முறை
தற்பொழுது இயல்பு நிலை திரும்புகிறது. இணைய வசதிகள் செயல்படுகின்றன.

திமுக ஆட்சிக் காலத்தில் 1970, 74, 89, 91, 2006, 2011 ஆண்டுகளில்துப்பாக்கி சூடுகளில் 60 பேர் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கி சூடு குறித்து ஸ்டாவின் பேச்சு எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாது , அதனை அரசு அனுமதிக்காது என்றார்.