சேலம் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்கியுள்ளனர் : முதல்வர் எடப்பாடி

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு பல்வேறு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளனர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் தாமாக நிலங்களை வழங்கியுள்ளனர்.

100க்கு நான்கைந்து விவசாயிகள் மட்டுமே நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றனர். முன்பை விட தற்போது வாகனங்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்றவாறு சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அரசின் கடமை.

இதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசு உதவி செய்கிறது. முன்பை விட தற்போது அதிகளவு இழப்பீடு வழங்கப்டுகிறது. திமுக ஆட்சியில் அவ்வாறு வழங்கப்படவில்லை.

வீடு, கட்டடத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளதால், விமான நிலைய விரிவாக்கம் தேவைப்படுகிறது… என்று தெளிவாக்கினார்.