திமுக.,வினர் கைது; ஆளுநர் ஆய்வு குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி?

சேலம்: ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை மாநில அரசு தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் குறித்து கவர்னர் ஆய்வு செய்வதை தடுக்க முடியாது.

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வதாலேயே கைது செய்யப்படுகின்றனர். நாமக்கல்லில், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததால் தான், திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

சேலம் இரும்பாலை தனியார் மயம் ஆவதை தலையிட்டு நிறுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேசியுள்ளோம்.

நீதிமன்றம் பொதுவானது. அதனை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அது குறித்து பேச வேண்டாம்… என்று கூறினார் முதல்வர்.