அதிமுக., அமைச்சர்கள் போடும் ஆசனங்களைப் பட்டியலிடும் ராமதாஸ்

அதிமுக., அமைச்சர்கள் போடும் யோக ஆசனங்களைக் குறித்து பட்டியலிட்டுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இது குறித்து குறிப்பிட்டுள்ளது...

சர்வதேச யோகா தினம் இரு தினங்களுக்கு முன்னர் கொண்டாடப் பட்டது. இதனால் நாடு முழுவதும் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் யோகா குறித்த, ஆசனங்கள் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. அது, தமிழகத்திலும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது என்பது, டாக்டர் ராமதாஸின் வார்த்தைகளில் இருந்து தெரியவருகிறது.

அதிமுக., அமைச்சர்கள் போடும் யோக ஆசனங்களைக் குறித்து பட்டியலிட்டுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இது குறித்து குறிப்பிட்டுள்ளது…

செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் சர்வதேச யோகா மையம் அமைக்கப்படும்: எடப்பாடி பழனிச்சாமி – அதில் அதிமுக அமைச்சர்களே பயிற்றுனர்களாக அமர்த்தப்படுவர். டயர் கும்பிடு ஆசனம், ஹெலிகாப்டர் வணங்கல் ஆசனம் போன்ற புதிய பயிற்சிகள் அளிக்கப்படும் என்பதை அறிவித்து விடுங்கள்!