மதிமுக.,வில் இருந்து வைகோ விலக்கப்படும் நாள் வரும்!

ஸ்டாலினை விமர்சிப்பவர்கள் மதிமுகவுக்கு எதிரானவர்கள். ஸ்டாலினை விமர்சித்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் – வைகோ!

ஸ்டாலினை எதிர்த்துப் பேசியதற்காகக் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். தன் மகனை எதிர்ப்பவர்களைத் தன் கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதியாவது பரவாயில்லை.

அடுத்த கட்சித் தலைவரை விமர்சித்தால், தன் கட்சியை விட்டுத் தூக்கிவிடுவேன் என்று மிரட்டும் அளவிற்கு கேவலமாகப் போய்விட்டது மதிமுக நிலைமை!

சுயமரியாதையை முன்னிருத்திப் பேசும் மதிமுக தொண்டர்களுக்குச் சொந்தக் கட்சியில் கூட சுயசிந்தனையை வெளிப்படுத்த அனுமதியில்லை. வீட்டிற்குள் வரும் ஆளைப் பார்த்து குரைக்கும் நாய்-ஐ எஜமானன் ஏய் ஜிம்மி ச்சுப்ப்ப் என்றால் அமைதியாயிடனும், பிடிக்காத ஆள் வந்தால் தூண்டி விட்டுக் குரைக்கச் சொல்வதும் வளர்ப்பு நாய்களுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். சுயமரியாதையுடைய மனிதனுக்குக் கொஞ்சமும் அழகல்ல!

என்ன செய்ய? மதிமுகவின் வரலாறும் அப்படி தான் இருக்கு…

ஸ்டாலினுக்கு எதிராகப் பேசித் தீக்குளித்து தங்கள் உயிர்களை விட்ட ஜஹாங்கீர், இடிமழை உதயன், வீரப்பன், கோயம்புத்தூர் பாலன், தண்டபாணி ஆகியோர் குடும்பங்கள் கவனித்துக் கொண்டு தானே இருக்கும் இன்றைய வைகோவின் நிலைப்பாட்டினை?

கட்சியிலிருக்கும் அந்த பத்துப் பதினைஞ்சு பேரும் கடைசி வரை சுயமரியாதைக்கு அர்த்தம் தெரியாமலேயே இருந்துட்டுப் போனால் தான் உண்டு!