தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி திமுக: பொன் ராதாகிருஷ்ணன் காட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதப் பிரதமர் மோடியின் நான்கு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது,

இதில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்
காமராஜர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மட்டுமே இன்றும் தமிழகம் பயன் பெற்று வருகிறதே தவிர 50 ஆண்டுகளால் ஆண்ட கழகங்களால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை

அணைகள் , தொழிற்சாலைகள் , பள்ளிகள் ஆகியவை காமராஜர் காலத்தில் கட்ட மைக்கப்பட்டன. தமிழகத்தில் கேள்வி கேட்க அருகதை அற்ற கட்சி ஒன்று உண்டென்றால் அது திமுக தான்

ஏழைகளுக்காக வங்கிகள் செயல்படவேண்டும் என்பதற்காக ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் அனைத்து மக்களும் வங்கி கணக்கு துவங்க வழி வகைகள் செய்து தரப்படும் என தெரிவித்தார்

பணம் இல்லாவிட்டாலும் வங்கி கணக்கை துவங்குங்கள் என சொன்னவர் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி.

ஏழைகளின் நலனுக்காக 125 கோடி மக்களுக்கும் அறிமுகப்படுத்த நபர் இல்லா விட்டாலும் வங்கி கணக்கு துவங்க வழிவகைகள் செய்தார். இதனால் நாட்டில் 4 வருடத்தில் 32 கோடி வங்கி கணக்குகள் 62 ஆயிரம் கோடி பணம் வங்கியில் இதன் மூலம் போடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஏழை எளியவர் பணம் அவர்களுக்கே என வழிவகை செய்தார் பிரதமர் மோடி…  என்று பேசினார் பொன்.ராதாகிருஷ்ணன்.