முன்னர் முட்டாள்; இப்போது ஹிட்லர்: கேஜ்ரிவாலை சித்திரித்து சுவரொட்டிகள்!

aravind-kejriwal-hitler புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை ஹிட்லராக சித்திரித்து மத்திய தில்லியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏப்.1 ஆம் நாள் அன்று, முட்டாள் தினத்தை கேஜ்ரிவால் தினம் என்று சித்திரித்து சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. முன்னர் ஒட்டப் பட்டதைப் போலவே ப்தற்போது ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை “பகத் சிங் கிராந்தி சேனா’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளதாக சுவரொட்டியில் அச்சிடப்பட்டுள்ளது. தில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவற்றில் “அரவிந்த் கேஜ்ரிவாலுடன் நெருக்கமாக இருந்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கியப் பொறுப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டு யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண், லோக்பால் குழுவில் இருந்து நீக்கப்பட்ட ராம்தாஸ், அஜித் ஜா, ராகேஷ் சின்ஹா, பேராசிரியர் ஆனந்த் குமார் வரையில் இன்னும் பலர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது தில்லியில் பிரசாரத்தில் கடந்த ஆண்டு அரவிந்த் கேஜரிவால் ஈடுபட்ட போது அவர் மீது காலணி எறியவும், மை வீசவும் “பகத்சிங் கிராந்தி சேனா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் முயன்றனர்.