24/09/2020 5:11 PM

வைகோ கைதால் பரபரப்பு! ஆளுநர் மாளிகை வரை அரக்க பரக்க… ஓட விட்டு…!

பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவும் ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது!

சற்றுமுன்...

அக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு!

சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அவரை பார்த்தா.. ராஜசேகர ரெட்டி ஞாபகம் வருது: சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்!

அவரைப் பார்த்தால் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஞாபகம் வந்தார்…. சிலுக்கூரு டாக்டர் எம்வி சௌந்தரராஜன்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளைப் பார்வையிட்ட எம்.எல்.ஏ., தியாகராஜன்!

மாசி வீதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்திட மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.

வட இந்தியாவில் விழாக்காலம்! மதுரையில் நல்ல விலைக்கு தேங்காய் ஏலம்!

மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

விளையாடிக் கொண்டிருந்த போது… வீராங்கனை தலையில் வந்தமர்ந்த பஞ்சவர்ணக் கிளி!

அந்த பஞ்சவர்ணக் கிளியை அங்கிருந்து கவனமாக வெளியேற்றினார். அது அவ்வாறு பறந்துபோய் கோல் போஸ்ட் தாண்டி சென்று

nakkeeran gopal

சென்னை: நக்கீரன் கோபாலை விடுதலை செய்ய வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ கைது செய்யப் பட்டார். இந்த விவகாரம் ஆளுநர் மாளிகை அரை அரக்க பரக்க விவாதிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தாம் வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை பார்க்க முற்பட்டதாகவும், தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறி, அதனைக் கண்டித்து சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தின் முன்பு வைகோ தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரை வழக்கறிஞர் சந்திக்க அனுமதி மறுக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஒன்று என்பதை வைகோ கூற, அதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே போலீசார் மதிக்கவில்லை என்றும், இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாம் என்றும் வைகோ விவாதித்தார். தொடர்ந்து வைகோ அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அதேநேரம், பத்திரிக்கையாளர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நக்கீரன் கோபால் கைதை கண்டித்து முழக்கங்களும் எழுப்பினர். வைகோவை போலீசார் சமாதானப்படுத்த முயன்றபோதும், நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்ததால், போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.இதனால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அருகே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ஆளுநர்  மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுனரின் பணியில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு குறுக்கிட முடியும்? நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை. அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறித்து நக்கீரன் இதழ்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது தான் கைதுக்கு காரணம் என்று ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.

இது உண்மை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமான தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. ஒருவேளை ஆளுனர் குறித்து எழுதப் பட்ட தகவல்கள் தவறானதாக இருக்குமானால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மாறாக ஊடக ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடிய, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கக்கூடிய செயலாகவே அமையும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்… என்று வேண்டுகோள் விடுத்தார்.

பாமக., நிறுவனர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன், திமுக., அதிமுக., காங்கிரஸ் என அனைத்து அரசியல்வாதிகளுமே அவரவர் அரசியல் பிரசாரத்துக்காகவும், அடுத்தவர் மீது அவதூறு பரப்பவும், அரசியல் காழ்ப்பு உணர்வை மக்களிடையே விதைக்கவுமே ஊடகங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது!

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

இந்த கல்யாண வேலைல… இப்ப சமந்தா ரொம்ப பிஸி!

ரகசியமாக அகில் திருமணம். நிச்சயம் செய்த அக்கினேனி ஃபேமிலி. திருமண விஷயத்தில் சுறுசுறுப்பாக சமந்தா.

Source: Vellithirai News

என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள்:  நடிகர் அஜித் எச்சரிக்கை!

தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Vellithirai News

சூரரைப் போற்று … நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு!

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Vellithirai News

நீட் சூர்யாவிடம்… கேள்விகளை நீட்டாக நீட்டிய மாணவர்கள்! பதில் சொல்லுங்க சார்..!

சூர்யா அவர்கள், பல்வேறு வினாவை “நீட் தேர்வு” சம்பந்தமாக எழுப்பியுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதில்கள்... அடுத்து மாணவர்கள் கேட்கும் சில கேள்விகள்!  Source: Vellithirai News

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

செய்திகள்... மேலும் ...

Translate »