spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபடேலை கௌரவப் படுத்த சிலை வைத்தார் மோடி! தமிழை அவமானப்படுத்தி மீம்ஸ் போட்டது ‘திராவிடம்’!

படேலை கௌரவப் படுத்த சிலை வைத்தார் மோடி! தமிழை அவமானப்படுத்தி மீம்ஸ் போட்டது ‘திராவிடம்’!

- Advertisement -

patelstatue

திராவிட இயக்கம் என்பது தமிழை அழிக்கவும், தமிழை இழிவுபடுத்தவுமே தோற்றுவிக்கப் பட்டது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அக்.31 – சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தில், சிறு சிறு சுதேச சமஸ்தானங்களை இந்திய நாட்டுடன் இணைத்து, ஒரே நாடாக மாற்றிக் காட்டிய, தனது மாநிலத்தைச் சேர்ந்த வல்லபபாய் படேலுக்கு உலகின் மிகப் பெரும் கௌரவத்தை அளிக்க, உலகின் மிகப் பெரும் சிலையை அமைத்தார் குஜராத் மாநில முதல்வராக இருந்து சிலைக்கு அடிக்கல் நாட்டி, இந்திய நாட்டின் பிரதமராக இருந்து சிலையைத் திறந்து வைத்த நரேந்திர மோடி!

அது போல், பண்டைத் தமிழரின் கௌரவத்தை உலக நாடுகள் எங்கும் பரப்பிய ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் தமிழரின் அடையாளமாக இங்குள்ளவர்களுக்குத் தெரியவில்லை! இந்தியாவில் பெரும்பகுதி நிலப்பரப்பை தன்னகத்தே இணைத்து வைத்திருந்தான் ராஜராஜ சோழன். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் தன் ஆளுகைக்குள் வைத்த பராக்கிரமன். அவனது சிலையை தமிழகத்தில் பரவலாக வைத்திருக்க வேண்டும். தமிழரின் அடையாளமாக திருக்குறள் தந்த திருவள்ளுவர், ஔவையார், கம்பர், சிலம்பு தந்த இளங்கோ என வரிசையாக இலக்கியம் படைத்தவர்கள் பலர். ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்களோ பலப் பலர்.

அண்மைக் காலத்து சுதந்திரப் போர் தியாகிகள் மற்றும் வீரர்கள் என்றால், தமிழகத்தில் மிக மிக அதிகம் பேர் இருந்திருக்கிறார்கள்! ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய காமராஜர், தீரர் சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன், வஉசி., வவேசு., தமிழகத்தை ஒருங்கிணைத்த ம.பொ.சி., என எத்தனையோ பேர் இங்கே இருந்திருக்கிறார்கள். ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிதான் வேண்டும் என்றும், ஆங்கிலேயர் நாட்டை விட்டு சென்றுவிடக் கூடாது என்றும் அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் சொல்படி செயல்பட்ட ஈ.வே.ராமசாமி நாயக்கர், ஆங்கிலேயர் தூண்டுதலில் உருவான திராவிட இயக்கத்தை வெறுப்பு வார்த்தைகளால் தூக்கிச் சுமந்த அண்ணாதுரை என ஊருக்கு ஊர் சிலை வைத்து, தமிழகத்தையே அசிங்கப்படுத்தி, அவமரியாதை செய்து வருகிறது திராவிட இயக்க ஆட்சிகள்!

staue of unity1இப்போது, அதே திராவிட இயக்கங்களின் அடிவருடிகள்தான், தமிழை அவமரியாதைப் படுத்தும் விதத்தில், வைக்காத கல்வெட்டை கற்பனையில் உருவாக்கி, தமிழை கேவலப் படுத்தும் விதத்தில் ஒரு தாளில் அச்சு எடுத்து, அதனை குஜராத் மாநிலம் சர்தார் சரோவரில் நேற்று திறக்கப்பட்ட படேல் சிலையின் கீழ் வைத்திருக்கிறார்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பி, தங்கள் திராவிட இயக்கத்தின் தமிழ் அழிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள்!

போலி புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட போலி #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி ஹேஷ்டேக் மூலம், மூக்குடைக்கப்பட்ட போலி திராவிட போராளிகள் குறித்து கூறப்படுவதாவது…

சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு அருகில் இருக்கும் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக இருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இது கடும் விமர்சனத்தை சந்தித்தது. தற்போது இது போலி செய்தி என்று தெரியவந்துள்ளது. முதலில் இது பெயர்ப் பலகையே இல்லை என்றும், வெள்ளை காகிதத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இந்த போலி புகைப்படத்தை அடிப்படையாக வைத்து இணையத்தில் #ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் வைரலாக்கினர். இந்த ஹேஷ்டேக்கை மெனக்கெட்டு முழுநேரம் பயன்படுத்தியவர்கள் பெரும்பாலும் மோடி வெறுப்பு ஏற்றப்பட்ட திராவிட இயக்க கைக்குலிகள். இந்த பெயர்ப் பலகையில் பிரெஞ்சு, ஸ்பேனிஷ், சீனம், ரஷ்யா, இந்தி உள்ளிட்ட மொழிகளில் எல்லாம் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இது குறித்து சிலையை நிறுவிய சர்தார் சரோவர் நர்மதா நிகம் உயர்அதிகாரி கூறுகையில், “தமிழ் மொழிபெயர்ப்பு இருக்கும் பெயர்ப் பலகை கொண்ட புகைப்படம் போலியானது; அத்தகைய பெயர்ப் பலகை சிலை வளாகத்தில் எந்த இடத்திலும் இல்லை” என்று கூறியுள்ளார்.

நிர்வாகத்தால் வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகை எனில், இந்திய அரசின் திட்டம் என்று எழுதப்பட்டு, இந்திய அரசின் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும்! இவ்வாறு இருக்கும் பலகைகளே நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பலகைகள்! பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டும் பழக்கம் அரசுக்கு இல்லை! இது விஷமிகளால் பரப்பப்பட்ட போலி செய்தி என்று தெளிவு படுத்தப் பட்டுள்ளது.

1 COMMENT

  1. தமிழகத்தில் நிறுவப்படவேண்டியது ராஜராஜசோழன், திருவள்ளுவர், கம்பர், இளங்கோ மற்றும் சுதந்திர போராளிகள். ஒழிக்கப்படவேண்டிய சிலைகள் ஈ.வீ. ரா. மற்றும் அண்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe