பணப் பேராசையை வளர்த்து விட்ட அரசியல்வாதிகளே படுகொலைக்குக் காரணம்’: பொங்கலூர் இரா.மணிகண்டன்

இலங்கையில் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தமிழர்களின் நெஞ்சை கிளித்தது போல் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர காவல் துறையினர் ஈவு இரக்கமின்றி காட்டில் சிங்கம் புலிகளை சுடும் கொடிய வேட்டைக்காரர்களை போன்று ஆந்திர காவல் துறையினர் சுட்டுக் கொன்றது தமிழகம் மட்டுமில்லாமல் உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., ”அரசியல் கொள்ளையர்களை விட ஆபத்தானவர்கள் இந்த நாட்டில் வேறு யாருமில்லை.அதிகார வர்க்கம் அதனினும் கொடியது.இந்திய நாட்டில் முன்னர் யாராவது அதிகாரத்தை பயன்படுத்தி 100.00 ரூபாய் பெற்று விட்டால் ”கொள்ளை அடித்த பணம் -பாவப்பணம்” என்று மிகவும் தவறாக கருத்தை வைத்து இருந்ததோடு அத்தகைய செயலைச் செய்தவரை கொடிய குற்றவாளியாகக் கருதியதுண்டு..எனவே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் வாதிகளும் ,அதிகாரிகளும் முடிந்த வரை நேர்மையாக இருந்தார்கள்.கிராம நிர்வாக அதிகாரி முதல் ஆளுநர் வரை வார்டு உறுப்பினர் முதல் பாரதப் பிரதமர் வரை கொஞ்சம் சேவை நோக்கம் இருந்தது. பொதுவாழ்வு என்றால் சேவை அல்ல வியாபாரம் என்ற நிலையை எட்டிய பிறகு ஒரு வேலைச் சாப்பாட்டுக்கு வழியின்றிக் கிடந்தவர் ஓரடி அரசியலில் எடுத்து வைத்தவுடன் கோடியில் தொடங்கி கோட்டையைக் கட்டி மக்களை எட்டி உதைக்கிறார்.ஆனால் மக்களோ கொள்ளை அடித்து கோட்டை கட்டியவனை பார்த்து பிரமித்து நல்லா சம்பாதிக்கிறார் என்று ”கொள்ளையை” சம்பாத்தியம் என்று வியந்து தனக்குத் தானே மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறார். விளைவு நாட்டில் வறுமை ,பஞ்சம்,பட்டினி ,ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடு பணம் இருப்பவன் நல்ல மனம் உள்ளவனை உதறித்தள்ளி விடுகிறான். பணம் இருந்தால் தான் மரியாதை என்று மனித உருவத்தை பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கருதியதன் விளைவு செம்மரக் கட்டையை வெட்டிவா நாள் ஒன்றுக்கு 3000 சம்பளம் என்றால் யாருக்குதான் ஆசை வராது. பாவம் இப்போது இருபது குடும்பங்கள் ”பாவத்தின் சம்பளம் மரணம்”என்ற பைபிளின் வேதவாக்கை உறுதியாக்கி விட்டது.ஆனால் மரம் வெட்டும் கூலிகளே அவர்கள்,முதலைகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை. மக்கள் தவறு செய்தால் குற்றம் அதுவும் ஒருவரைக் கொன்றுவிட்டால் கொலைகாரப்பட்டத்துடன் தண்டனை அளிக்கும் அரசே சட்டத்தின் கருவிகளைக் கொண்டே கொலை செய்தால் மட்டும் நீதியா? ”குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில் குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயமே” என்ற தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் வாக்குப் படி தப்பியுள்ள குற்றவாளிகள் யார்? என்று கண்டுணர்ந்து பேராசைக்கு மக்கள் வெறியாகிப் போனதற்கு காரணமான அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். மாறாக தமிழன்,தெலு இலங்கையில் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தமிழர்களின் நெஞ்சை கிளித்தது போல் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர காவல் துறையினர் ஈவு இரக்கமின்றி காட்டில் சிங்கம் புலிகளை சுடும் கொடிய வேட்டைக்காரர்களை போன்று ஆந்திர காவல் துறையினர் சுட்டுக் கொன்றது தமிழகம் மட்டுமில்லாமல் உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., ”அரசியல் கொள்ளையர்களை விட ஆபத்தானவர்கள் இந்த நாட்டில் வேறு யாருமில்லை.அதிகார வர்க்கம் அதனினும் கொடியது.இந்திய நாட்டில் முன்னர் யாராவது அதிகாரத்தை பயன்படுத்தி 100.00 ரூபாய் பெற்று விட்டால் ”கொள்ளை அடித்த பணம் -பாவப்பணம்” என்று மிகவும் தவறாக கருத்தை வைத்து இருந்ததோடு அத்தகைய செயலைச் செய்தவரை கொடிய குற்றவாளியாகக் கருதியதுண்டு..எனவே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் வாதிகளும் ,அதிகாரிகளும் முடிந்த வரை நேர்மையாக இருந்தார்கள்.கிராம நிர்வாக அதிகாரி முதல் ஆளுநர் வரை வார்டு உறுப்பினர் முதல் பாரதப் பிரதமர் வரை கொஞ்சம் சேவை நோக்கம் இருந்தது. பொதுவாழ்வு என்றால் சேவை அல்ல வியாபாரம் என்ற நிலையை எட்டிய பிறகு ஒரு வேலைச் சாப்பாட்டுக்கு வழியின்றிக் கிடந்தவர் ஓரடி அரசியலில் எடுத்து வைத்தவுடன் கோடியில் தொடங்கி கோட்டையைக் கட்டி மக்களை எட்டி உதைக்கிறார்.ஆனால் மக்களோ கொள்ளை அடித்து கோட்டை கட்டியவனை பார்த்து பிரமித்து நல்லா சம்பாதிக்கிறார் என்று ”கொள்ளையை” சம்பாத்தியம் என்று வியந்து தனக்குத் தானே மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறார். விளைவு நாட்டில் வறுமை ,பஞ்சம்,பட்டினி ,ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடு பணம் இருப்பவன் நல்ல மனம் உள்ளவனை உதறித்தள்ளி விடுகிறான். பணம் இருந்தால் தான் மரியாதை என்று மனித உருவத்தை பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கருதியதன் விளைவு செம்மரக் கட்டையை வெட்டிவா நாள் ஒன்றுக்கு 3000 சம்பளம் என்றால் யாருக்குதான் ஆசை வராது. பாவம் இப்போது இருபது குடும்பங்கள் ”பாவத்தின் சம்பளம் மரணம்”என்ற பைபிளின் வேதவாக்கை உறுதியாக்கி விட்டது.ஆனால் மரம் வெட்டும் கூலிகளே அவர்கள்,முதலைகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை. மக்கள் தவறு செய்தால் குற்றம் அதுவும் ஒருவரைக் கொன்றுவிட்டால் கொலைகாரப்பட்டத்துடன் தண்டனை அளிக்கும் அரசே சட்டத்தின் கருவிகளைக் கொண்டே கொலை செய்தால் மட்டும் நீதியா? ”குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில் குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயமே” என்ற தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் வாக்குப் படி தப்பியுள்ள குற்றவாளிகள் யார்? என்று கண்டுணர்ந்து பேராசைக்கு மக்கள் வெறியாகிப் போனதற்கு காரணமான அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். மாறாக தமிழன்,தெலுங்கன் ,கன்னடன்,என்ற வேறுபாடுகள் கொண்டு இந்த வெறிச் செயல் நிகழ்ந்திருப்பின் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அத்தகைய மாநில மொழி வாரியான,இன வாரியான பிரிவினை வேண்டாம் என்பது மட்டுமல்ல மிகக் கொடும் காரியத்தைச் செய்த,செய்யத் தூண்டிய மிருகங்களைக் கண்டிப்பதோடு கடும் நடவடிக்கை மூலம் மத்திய -மாநில அரசுகள் இது போன்ற மிருகச் செயல்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இயற்கையின் பேரழிவில் இருந்து நாம் எல்லோரும் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். மறைந்தவர்களுக்கு இயற்கை மன்னிப்புடன் இரண்டறக் கலந்து கொள்ளச் செய்யட்டும். மற்றவர்களுக்கு? நாம் என்ன செய்வது. வருத்துகிறேன், வேதனைபடுகிறேன், கண்டிக்கிறேன் எனவும் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தெரிவித்துள்ளார். ங்கன் ,கன்னடன்,என்ற வேறுபாடுகள் கொண்டு இந்த வெறிச் செயல் நிகழ்ந்திருப்பின் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அத்தகைய மால மொழி வாரியான,இன வாரியான பிரிவினை வேண்டாம் என்பது மட்டுமல்ல மிகக் கொடும் காரியத்தைச் செய்த,செய்யத் தூண்டிய மிருகங்களைக் கண்டிப்பதோடு கடும் நடவடிக்கை மூலம் மத்திய -மாநில அரசுகள் இது போன்ற மிருகச் செயல்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இயற்கையின் பேரழிவில் இருந்து நாம் எல்லோரும் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். மறைந்தவர்களுக்கு இயற்கை மன்னிப்புடன் இரண்டறக் கலந்து கொள்ளச் செய்யட்டும். மற்றவர்களுக்கு? நாம் என்ன செய்வது. வருத்துகிறேன், வேதனைபடுகிறேன், கண்டிக்கிறேன் எனவும் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.