ராகுல் குரலை எதிரொலிக்கும் இம்ரான் கான்!மோடியை எதிர்த்து பாகிஸ்தானில் பிரசாரம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இந்திய பொதுத்தேர்தலில் உதவுவதற்காக பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான். அதன் ஒரு பகுதியாக பாஜக ., முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான செயல்பாடுகளைக் கொண்ட  கட்சி என்று கூறி வருகிறார். இது பாகிஸ்தானின் வழக்கமான பிரசாரம் தானே என்று ஒதுக்கித் தள்ளும் போது, கூடவே அடுத்த இந்தியப் பொதுத் தேர்தல் முடிந்ததும் பேச்சு வார்த்தைகள் சூடு பிடிக்கும்… என்று சூசகமாகப் பேசியுள்ளது, ராகுல் பாகிஸ்தானின் குரலைப் பேசுவதையும் இம்ரான், ராகுலின் குரலை எதிரொலிப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள்.

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தற்போதும் பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது பாகிஸ்தான் எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயுள்ளன

 இந்தியா இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக உறுதியாக ஒன்றை பாகிஸ்தானுக்கு புரிய வைத்திருக்கிறது.

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் ஒரே திசையில் செல்லாது என்பதை பாகிஸ்தானுக்கு புரிய வைத்திருக்கிறது .. ஆனால் பாகிஸ்தானோ மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை என்று உலக நாடுகளை நம்ப வைக்க எத்தனையோ வழிகளை கையாண்டு வருகிறது … பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் கானின் அதே துறைசார்ந்த கிரிக்கெட் வீரர் அப்ரிடி காஷ்மீரை விட்டு விட்டு இந்தியாவுடன்  நட்புறவு பேண வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார் … ஆனால் இம்ரான் கானோ முந்தைய ஆட்சியாளர்களை விட படு மோசமான வார்த்தை பிரயோகங்களை பொதுவெளியில் உதிர்த்து வருகிறார்.

எனவேதான் பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா அண்மைக்காலமாக நிராகரித்து வருகிறது.

 சொல்லப்போனால் பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்புறவு பேண மோடி அதிக நடவடிக்கை மேற்கொண்டார் .பாகிஸ்தானுக்கு திடீரென விஜயம் செய்தார். திரும்பும் வழியில் விமான நிலையத்தில் இறங்கி அந்நாட்டு பிரதமருடன் கை குலுக்கி பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார் … பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் தாயாருக்கு பரிசுப் பொருள்களைக் கொண்டு கொடுத்தார்.   ஆனால் அவையெல்லாம் விரைவிலேயே காணாமல் போய்விட்டன..

 பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் ஆளும் கட்சியான பாஜக., இஸ்லாம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்தலுக்கு பிறகு இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கும் என்றார்.

அவரது இந்த கருத்து தான் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஏன் தேர்தல் குறித்து பேச வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? தற்போது உள்ள அரசு பேச்சுவார்த்தைக்கு வராமல் முரண்டு பிடிக்கிறது என்றும் இதே அரசு மீண்டும் வந்தால் இதே போன்ற நிலை வரும் என்றும் மறைமுகமாக கருத்துதிணிப்பை சர்வதேச தளத்தில் மேற்கொண்டு வருகிறார் அவர் என்பதையே காட்டுகிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.