மத்தியில் இனி ஈழத் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் ஆட்சியே! வைகோ விருப்பம்!

11 July30 Vaiko
11 July30 Vaiko
11 July30 Vaiko - 1

ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில கட்சிகளின் கூட்டமைபும் காங்ரஸ்ஸும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சிசெய்யும் என்று கூறியுள்ளார் 

பாசிச மனப்பான்மையுடன் அதிகாரம் செலுத்துகிறவர்கள் எல்லா தவறான வழிகளையும் பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முறையில் ஈடுபடுவார்கள். அதே வழியில் தான் மத்திய  பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள மோடி, அமிட்சா சகல வழிகளிலும் பணத்தை வெள்ளமாக பாயவிட்டும் , அதிகாரத்தால் மிரட்டியும் பார்த்தார்கள், ஆனால் இராஜஸ்தானிலே படு தோல்வி அடைந்து விட்டார்கள், மத்திய பிரதேசங்களே முன்னும் பின்னுமாக சென்று கொண்டுள்ளது, அதிலும் அவர்களுக்கு தோல்வி தான். சத்திஸ்கரில் படு தோல்வி அடைந்துவிட்டது.

தெலுங்கானாவில் வெற்றி என்றால் அது அந்த மாநிலத்தை உருவாக்க பாடுபட்ட டிஆர்எஸ் என்பதால் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது…. என்று கூறியுள்ளார் வைகோ.

வரப்போகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் 100 இடங்கள் அல்லது அதிக பட்சம் 110 இடங்களை பாஜக தாண்டாது இன்று ஆருடம் கூறியுள்ளார் வைகோ.

மாநில கட்சிகளின் கூட்டமையும் காங்கிரசும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சி செய்யும்….2019 இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஜனநாயகத்தை பாதுகாக்கக கூடிய நிலை வரும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் அனேகமாக இந்த 18 தொகுதிகளுக்கோ அல்லது 20  தொகுதிகளுக்கோ இடைதேர்தல் வரலாம் அதில் திமுக தலைமையில் ஆன வெற்றி அணி தான் வெற்றி பெறும்..


தமிழகத்திலும் , புதுவையிலும் 2004 போலவே 40 தொகுதிகளிலும் வெற்றி திமுக தலைமையில் ஆனா அணி வெற்றி பெறும்.

இந்த சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும் திமுவ வெற்றி பெறும் போது அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்காமலே திமுக இங்கு ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது… என்றார் வைகோ

- Advertisement -