சிலை அரசியல்… கனிமொழி, ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு ஹெச்.ராஜா போட்ட டிவிட்டு… செம ஹிட்டு!

சென்னை: நாளை முன்னாள் முதல்வரும் திமுக., தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படும் நிலையில் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா போட்ட டிவிட் ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள திமுக., முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் உள்ளிட்ட அண்டை மாநில தலைவர்கள், நடிகர்கள் கமலஹாசன், ரஜினி காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

சிலைத் திறப்புக்குப் பின்னர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கூட்டணிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுலை ஸ்டாலின் அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், இந்த சிலைத் திறப்பு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா ட்விட்டரில் ஒரு பதிவினை இட்டுள்ளார். அது சமூக ஊடகங்களில் வழக்கம் போல் சர்ச்சை ஆக்கப் பட்டுள்ளது.

ஹெச்.ராஜா அந்த டிவிட்டர் பதிவில், “உயிரற்ற படேலுக்கு சிலையா என்று நேற்று கேள்வி எழுப்பினார்கள் நாளை?” என கேள்வி எழுப்பி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் டிவிட்டர் பெயர்களையும் டேக் செய்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலை அரசியல் நிலை கொள்ளாமல் போயுள்ள நிலையில், திமுக., டிவிட்டரிஸ்டுகள் வழக்கம் போல் கருணாநிதி வளர்த்தெடுத்த அரசியல் நாகரிகத்தின் கௌரவமான சொற்களால் பதில் கொடுத்து வருகின்றனர்.

முன்னர் சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி செலவில் குஜராத் அரசு சிலை அமைத்தது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், படேல் சிலைக்கு திமுக.,வினர் முன்வைத்த தரம் மிகுந்த நாகரிகமான விமர்சனங்களைக் குறிப்பிட்டு, ஹெச்.ராஜா டிவீட் போட்டுள்ளார்.

அவரது பதிவுக்குக் கீழே திமுக.,வினர் மிகவும் கண்ணியமான வகையில் தரம் மிகுந்த சொற்களால் பதில் கொடுத்து வருகின்றனர். தமிழக அரசியலில் 50 ஆண்டு காலம் கோலோச்சி தமிழர்கள் மிகச் சிறந்த அறிவாளிகளாகவும், பொருளாதார வலிமையும் சமூக மேம்பாடும் கொண்டவர்களாகவும் திகழ மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நேர்மையாளர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விவகாரத்தில், படேல் சிலைக்கு திமுக.,வினர் எந்த வகையில் நாகரீகமாகவும் கௌரவமாகவும் கண்ணியத்துடனும் கருத்துகளை முவைத்தார்களோ அதே போன்ற நாகரிகத்தை பாஜக.,வினர் பின்பற்ற வேண்டும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.