ஈழத் தமிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackSonia #StatueOfCorruption

திமுக., தலைவராக இருந்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப் படுகிறது. இதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா சென்னைக்கு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுலும் வருகிறார்.

இந்நிலையில், ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சியான திமுக., ஆகியவற்றை எதிர்த்து, தமிழ் மண்ணில் சோனியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் உண்மைத் தமிழர்கள் #GoBackSonia என்று ஹேஷ் டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த டிவிட்டர் ட்ரெண்டாக இது திகழ்கிறது.

மேலும், #StatueOfUnity என வல்லபபாய் படேல் சிலைத் திறப்பின் போது உயிரற்ற நபருக்கு எதற்கு சிலை என்று கேள்வி எழுப்பிய திமுக.,வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், #StatueOfCorruption என்ற ஹேஷ்டேக்கில் விஞ்ஞான ஊழல் ஸ்பெஷலிஸ்ட் கருணாநிதியின் சிலைத் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர் வலைத்தளவாசிகள்.

இவற்றில் சில குறிப்பிடத்தக்க டிவிட்கள்…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...