செந்தில்பாலாஜிக்கு கனிமொழி சர்டிபிகேட்! கொள்ளையர் கூடாரத்தில் ஒருவர் கூடுதல்…! அவ்வளவே!

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியை எதிர்த்து கனிமொழி பேசிய பேச்சுகள் தான் இவை..!

2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் கனிமொழி செந்தில்பாலாஜியை விமர்சித்து பேசியவை

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்திலேயே போக்குவரத்து துறையில் மிகப் பெரும் அளவுக்கு முறைகேடுகளும் பெருகி இருந்தது செந்தில்பாலாஜியின் கைவண்ணத்தில்! அன்பு நாதன் வீட்டில் நடந்த வருமான வரித்துறையின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத பல கோடி ரூபாய்! ரூ.570 கோடி கண்டெய்னர் லாரி பிடிபட்டது…

இப்படி பல்வேறு சம்பவங்களில் செந்தில்பாலாஜியின் பெயர் வெகுவாக அடிபட்டது! அதன் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை பிடுங்கினார் ஜெயலலிதா! இப்படிப்பட்ட செந்தில் பாலாஜிக்குதான் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கிறார் ஸ்டாலின்!

இந்த செந்தில் பாலாஜியைத்தான் கனிமொழியும் இப்படி யெல்லாம் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்! இப்பொழுது அவரது கட்சியிலேயே செந்தில்பாலாஜி உடன் அமர்ந்திருக்கிறார்! இப்போது என்ன சொல்வாரோ கனிமொழி?

வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் சேர்பவர்களுக்கு பதவியையும் பொறுப்பையும் வாரி அளிப்பது ஸ்டாலினின் வழக்கம் என்கிறார்கள் திமுகவின் வெகுகாலம் இருந்த நிர்வாகிகளும் தொண்டர்களும்! 

செந்தில் பாலாஜிக்கு அதே கரூர் தொகுதியில் அல்லது கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் வாய்ப்பு வழங்கி அதே போக்குவரத்து துறையை மீண்டும் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்! இது திமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்! அதில் இப்போது கழகத்தில் இருக்கும் மாவட்ட செயலாளர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ இல்லையோ அதைப் பற்றி கவலைப்படாமல் அதிமுகவில் உள்ள பெருந்தலைகள் இடம் விசுவாசமாக இருங்கள்; யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்! இதெல்லாம் தெரியாமல் கழகம் கொள்கை கருப்பு சிகப்பு இப்படியெல்லாம் பேசிக்கொண்டே இருந்தால் நீங்கள் கடைசிவரையில் கிறுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகளை போட்டிருக்கிறார்கள்

மேலும் நாளை கழகத்தின் மாவட்டம் மந்திரி வட்டம் எல்லாம் மேயர் எம்எல்ஏ எல்லாம் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களாக தான் இருக்கப் போகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். பல காலமாக உழைத்தவர்களுக்கு வெறும் ஐஸ்குச்சி தான் என்று குமுறுகிறார்கள் கழகத் தொண்டர்கள்!

ஏற்கெனவே கொள்ளையரின் கூடாரமாக இருந்த திமுக இப்பொழுது முழு கொள்ளையர்களின் முழுக் கூடாரமாக மாறி விட்டது என்று கருத்திடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...