ஒவ்வொருவரும் கூகுள் தேடலில் எதை எதையெல்லாமோ தேடுகிறார்கள். சிலர் தங்கள் பெயர் டாப் லிஸ்டில் வரவேண்டும் என்று தேடுவார்கள் அதற்காகவே பலரும் பாடுபடுவார்கள்

தற்போது எல்லாவற்றிற்கும் தேடலுக்கான தளமாக அமைந்து விட்டது கூகுள்! தற்போதைய அரசியல் சூழ்நிலையை பொறுத்து ஒவ்வொரு நடவடிக்கைகளும் வித்தியாசமாக அமைகின்றன

மோடி, ராகுல் என்றெல்லாம் தலைவர்கள் குறித்து பலரும் கூகுளில் தேட அவரவர் வார்த்தையை உள்ளிட்டு தேடுவார்கள். ஆனால், Bad Chief Minister in the World என உலகின் மோசமான முதலமச்சர் என்ற வார்த்தையை விட்டு தேடினால் அது கேரள முதல்வர் விஜயனின் பெயரைத்தான் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது! அத்துடன் விக்கிபீடியா பக்கத்தில் இருந்தும் சிறிய விவரத்தையும் தருகிறது

கேரள முதல்வர் விஜயன் தற்போது பலரது தாக்குதலுக்கும் இலக்காகி வருகிறார். சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை கட்டாயம் முன்னிறுத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் பிணராயி விஜயனுக்கு எதிராக கேரளத்தில் இந்து அமைப்புகள் பாஜக உள்ளிட்ட கட்சிகள் பெருமளவு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன

பிணராயி விஜயன் நடவடிக்கைகள், மக்கள் மனங்களைப் புண்படுத்துவதாக அமையும் என்பதுடன், மாநிலத்தின் பன்முகத் தன்மைக்கு விடப்பட்ட சவால் என்று கருதுகின்றனர்.

சபரிமலை மரபுகளை மீறுவதாக அமையும் நடவடிக்கையை எடுத்து, பன்முகத் தன்மையைக் குலைத்துவிட்டார் என்றும், அவர் முதல்வராக நாற்காலியில் அமரும் போது கொடுத்த சத்தியப் பிரமாணத்தை மீறிவிட்டார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் தாம் நடைமுறைப் படுத்துவதாக பினராயி விஜயன் சொன்னாலும் அதில் உள்ள உள்நோக்கங்களையும் தெளிவாக எடுத்தியம்புகின்றனர் பலர்.

பிரவம் சர்ச் விவகாரத்தில் நடந்து கொண்டதையும்ம் சர்ச் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்ததையும் யாரும் மறக்கவில்லை

மேலும் சபரிமலைக்கு அருகே உள்ள வாபர் மசூதியில் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சொன்ன போது அதற்கு எதிராக எந்த குரலும் எழுப்பவில்லை விஜயன்.

எனவே, மகளிர் பாலின சமத்துவம் என்பது சபரிமலைக்கு மட்டுமே ஆனது என்று செயல்பட்டது, மாநிலத்தில் பலருக்கும் பிடிக்கவில்லை! எனவே பிணராயி விஜயனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் இங்கே நன்றாக தெரிகிறது!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...