spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஉ.பி.,யில் பாஜக.,வுக்கு வெற்றிக் கனியைப் பரிசளிக்கிறார் மாயாவதி!

உ.பி.,யில் பாஜக.,வுக்கு வெற்றிக் கனியைப் பரிசளிக்கிறார் மாயாவதி!

- Advertisement -

உத்தர பிரதேசத்தில் பிஜேபிக்கு மாபெரும் வெற்றியை அளிக்கிறார் மாயாவதி-

வருகின்ற லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பிஜேபி யை வீழ்த்த அகிலேஷ் யாதவும் மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளார்கள். இதில்
சந்தோசமான விசயம் என்னவெனில் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும்தான் கூட்டணி என்கிற பெயரில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில் தலா 38 தொகுதிகளை பிரித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் சோனியாவுக்கு அமேதி ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளை பிச்சை போட்டுள்ளார்கள்.

எஞ்சிய 2 தொகுதிகள் யாருக்கு என்று உத்தர பிரதேசத்தில் பெரிய பட்டி மன்றமே நடைபெற்று வருகிறது.

இந்த 2 தொகுதிகளை ஏற்றுக் கொண்டு இடைத்தேர்தல்களில் சமாஜ்வாடி கட்சியின் வெற்றிக்கு துணை நின்ற ஜாட் மக்களின் ஆதரவை பெற்ற அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் மெகாகூட்டணியில் இணையுமா? இல்லை இந்த 2 தொகுதிகளை பெற்றுக்கொள்ளாமல் அஜித் சிங் பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் வீழ்ச்சியை துவக்கி வைத்த நிஷாத் பார்ட்டியோடு காங்கிரஸ் உருவாக்கும் மெகா கூட்டணியில் ஐக்கிய மாவாரா?

இல்லை 2017 சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைய காரணமாக இருந்த முஸ்லிம் கட்சியான பீஸ் பார்ட்டி
க்கு அந்த 2 லோக்சபா தொகுதிகளும் கிடைக்குமா என்று மிகப் பெரிய பட்டிமன்றமே நடைபெற்று வருகிறது.

ஏனென்றால் கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பிஜேபி யை வீழ்த்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ராஷ்டிரிய லோக் தளம், நிஷாத் பார்ட்டி, பீஸ் பார்ட்டி என பல கட்சிகள் அணி திரண்டு பிஜேபி யை எதிர்த்து கை கோர்த்து நின்றதாலே இடைத் தேர்தலில் பிஜேபி யை தோற்கடிக்க முடிந்தது.

ஆனால் இப்பொழுது பிஜேபிக்கு எதிராக மாயாவதி உருவாக்கியுள்ள கூட்டணியோ சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை கணக்கில் கொண்டு உருவாக்கியுள்ள கூட்டணியாகும். அதாவது உத்தர பிரதேசத்தில் 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த 43 சதவீத வாக்குகளுக்கு இணையாக சமாஜ்வாடி-22%+ பகுஜன் சமாஜ்-20%+ ராஷ்டிரிய லோக்தளம்-1% = 43 என்கிற வாக்கு சதவீத அடிப்படையில் உருவாக்கப் பட்டுள்ளது இந்த கூட்டணி.

இந்தக் கணக்கு 2014 லோக்சபா தேர்தலில் வீசிய மோடி சுனாமியால் உருவான பிஜேபி யின் எழுச்சி இப்பொழுது வருகின்ற தேர்தலில் இருக்காது.

பிஜேபி குறைந்தது 5 சதவீத வாக்குகளை இழக்கும் என்கிற அடிப்படையில் உருவான கூட்டணி. அதாவது பிஜேபிக்கு 38 சதவீத வாக்குகளும் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் ராஷ்டிரிய லோக்தளம் இணைந்த கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்கிற அடிப்படையில் உருவான கூட்டணி.

ஆனால் இந்தக் கூட்டணிக்கு பிஜேபியை வீழ்த்த உதவும் வகையில் வாக்குகள் கிடைக்குமா என்பது
தான் இப்போதைய முக்கியமான கேள்வி. ஏனெனில் பிஜேபி யை வீழ்த்த உத்தரபிரதேச அரசியலில் மாபெரும் கட்சிகளாக இருக்கும் சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் 25 வருடங்களுக்கு முன்பாக 1993 சட்ட மன்ற தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டும் தோற்கடிக்க முடியவில்லை என்பதில் இருந்து சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்த கூட்டணியால் மட்டும் பிஜேபி யை தோற்கடிக்க முடியாது என்பது தெரியவரும்…

1993 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை வீழ்த்த கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கட்சிகளால் பிஜேபியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க முடிந்ததே தவிர தனிப் பெரும் கட்சியாக 177 தொகுதிகளில் வெற்றிபெற்று வந்த பிஜேபியை கட்டுப் படுத்த முடியவில்லை.

அதனால் தான் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கூட்டணி யால் பிஜேபி யின் வெற்றி சதவீதத்தை குறைக்க முடியுமே தவிர முழு அளவில் பிஜேபியை வீழ்த்த முடியாது. உதாரணமாக கடந்த 2014 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 71 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜேபிக்கு சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கூட்டணியால் அதிகபட்சமாக
20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பறிக்க முடியும்.

ஆனால் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கட்சிகளோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து இருந்தால் பிஜேபிக்கு அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே கஷ்டமாக இருந்து இருக்கும். அந்த வகையில் பிஜேபிக்கு மாயாவதி நன்மையே செய்துள்ளார் என்றே நினைக்கிறேன்.

உத்தர பிரதேச த்தில் நான்காவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 8 சதவீத வாக்குகள் இருக்கிறது. அதனால் காங்கிரஸ் சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கூட்டணி உருவாகி இருந்தால் பிஜேபிக்கு நிச்சயமாக பலத்த தோல்வி கிடைத்து விடும்.

ஆனால் இப்பொழுது உருவாகியுள்ள கூட்டணியினால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் கிடைக்காது என்பதே உண்மையாகும்.

காரணம் என்னவென்றால் தலித் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள மாயாவதி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்ததன் மூலமாக சமாஜ்வாடியின் ஆதரவு வாக்கு தளமான யாதவ வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கையில் கூட்டணி வைத்துள்ளார்.

ஆனால் 1993 ல் சமாஜ்வாடியோடு பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்ட பொழுதே யாதவர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டு போட வில்லை. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு தளமான தலித் மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு ஓட்டு போட்டார்கள். இப்பொழுது வரை இதுவே தொடர்கிறது.

இது மாயாவதிக்கும் நன்றாக தெரியும். அதனால்தான் கடந்த ஆண்டு நடைபெற்ற கோரக்பூர் பூல்பூர் மற்றும் கைரானா லோக்சபா இடைத் தேர்தல்களில் ஒரு தொகுதியை கூட பகுஜன் சமாஜ் கட்சிக்கு கேட்டு பெறாமல் சமாஜ்வாடி கட்சிக்கும் ராஷ்டிரிய லோக் தளத்திற்கும் விட்டுக் கொடுத்தார்.

இதில் காமெடி என்னவென்றால் 2014 லோக்சபா தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற கோரக்பூர் பூல்பூர் மற்றும் கைரானா லோக்சபா தொகுதிகளில் 2009 பாராளுமன்ற தேர்தலில் பூல்பூர் மற்றும் கைரானாவில் பகுஜன் சமாஜ் கட்சி தான் வெற்றி பெற்று இருந்தது. யோகியின் கோரக்பூர் தொகுதியில் யோகி யை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி தான் 2 ம் இடத்தில் இருந்தது.

இப்படி 2009 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளில் பகுஜன் சமாஜ் போட்டியிடாமல் பின் வாங்கி கொண்டு இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு தாரை வார்த்தன் காரணமே மாயாவதிக்கு யாதவர்கள் வாக்கு கிடைக்காமல் தோல்வி அடைவது உறுதி என்பதோடு இதை முன்வைத்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதியை இழந்து அகிலேஷ் யாதவிடம் சரண்டராகி விடுவோமோ என்கிற பயத்தினால் தான் கோரக்பூர் பூல்பூர் கைரானா இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை..

சாதி மத அரசியல் உச்சத்தில் இருக்கும் உத்தரபிர தேசத்தில் 44% ஓபிசிக்களும் 21% தலித் மக்களும் 16% உயர் சாதியினரும் 19% முஸ்லிம் களும் இருக்கிறார்கள்.இதில் 21% தலித் மக்களின் பெரும்பான்மையான ஒட்டுக்களை பெற்று வந்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு இனி தலித் மக்களின் வாக்குகள் கிடைக்காது.

உத்தர பிரதேசத்தில் உள்ள 21% தலித் மக்களில் ஜாடவ் இன தலித் மக்கள் தான் அதிகளவில் இருக்கிறார்கள். அதாவது உத்தரபிரதேசத்தில் உள்ள சுமார் 4 கோடி தலித் மக்களில் சுமார் 2 கோடியே40 லட்சம் மக்கள் ஜாடவ் இன தலித் மக்கள் இவர்கள் மட்டும் தான் இப்பொழுது மாயாவதிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஜாடவ் மக்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் சுமார் 70 லட்சம் பாசி இன தலித் மக்களும் அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் சுமார் 27 லட்சம் டோபி இன மக்களும் 25 லட்சம் கோரி இன தலித் மக்களும் சுமார் 15 லட்சம் வால்மீகி இன தலித் மக்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்கும் நிலையில் இல்லை.

உத்தரபிரதேச த்தில் உள்ள தலித் மக்களில் 2 ம் இடத்தில் இருக்கும் பாசி இன மக்கள் பிஜேபி பக்கம் வந்து விட்டார்கள். இவர்களின் ஆதரவை
தக்க வைக்கும் வகையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட பாசி இனத்தை சேர்ந்த தலித் வீராங்கனை உடா தேவிக்கு லக்னோவில் மிகப் பெரிய சிலையை அமைத்து வருகிறது பிஜேபி அரசு.

இந்த உடாதேவி மாபெரும் வீராங்கணை. கணவர் இறந்த பிறகும் மனம் கலங்காது நின்று 32 ஆங்கிலேய வீர்ர்களை சுட்டு வீழ்த்திய வீராங்கணை.. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா

அயோத்தி நவாப் களைப் பற்றி கேள்வி பட்டு இருப்போம். டெல்லியில் வாள் முனையில் இஸ்லாம் வளர்ந்தது என்றால் அயோத்தியில் மட்டும் யாழ் முனையில் இஸ்லாம் வளர்ந்தது. வளர்த்தவர்கள் பாரசீகத்தில் இருந்து டெல்லி சுல்தான்களால் அழைத்து வரப்பட்ட ஷியா முஸ்லிம்கள்.

இவர்கள் உருவாக்கி ய ராஜ்ஜியம் தான் அயோத்தி ராஜ்ஜியம். இவர்களால் பரப்பப் .பட்ட சூபியிசம் தான் ராமபிரான் அவதரித்த பூமியில் இஸ்லாம் வளர வழி வகுத்தது. இந்த அயோத்தி ராஜ்ஜியத்தை ஆண்டவர்கள் தான் அயோத்தி நவாப்கள்.12 நவாப்கள் ராமபிரான் அவதரித்த பூமியை ஆண்டுள்ளார்கள். இவர்களில் 12 வது நவாப்பான வாஜித் அலிஷாவை அவருடைய இரண்டாம் மனைவி யான பேகம் ஹசரத் மஹல் துரத்தி விட்டுவிட்டு தன்னுடைய மகனை வைத்து அயோத்தி ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தார்.

இவருடைய காலத்தில் தான் 1857 ல் முதல் இந்திய சுதந்திரப் போர் உருவானது. அப்பொழுது இருந்த சிற்றரசுகள் எல்லாம் இந்தியாவை சேரந்த மன்னர்களால் ஆளப்பட்டு வந்தாலும் அந்த அரசுகளின் பாதுகாப்பு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வந்தது.

இந்திய கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் எழுப்பிய உரிமைக்குரல் தான் சிப்பாய் கலகமாக வட இந்தியா முழுவதும் உருவமானது.அயோத்தி ராஜ்ஜியத்திலும் ராணுவத்தை கட்டுப் பாட்டில் வைத்து இருந்த பிரிட்டிஷ் வீரர் களுக்கும் அடிமை யாக இருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே உருவானது தான் சிக்கந்தர் பக் போர்.

இந்த சிக்கந்தர் பக் போரில் தான் அயோத்தி அரசின் சிக்கந்தர் பக் கோட்டையை கைப்பற்ற முனைந்த பிரிட்டிஷ் படையை எதிர்த்து போராடிய அயோத்தி ராஜ்ஜியத்தின் 2000 வீரர் களை கொன்று குவித்த கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்திற்கு பதிலடி அளிக்கவும் போரில் பிரிட்டிஷ் படையால் கொல்லப் பட்ட தன்னுடைய கணவர் மக்கா பாசியின் மரணத்திற்கு பழி தீர்க்கவும் துப்பாக்கி ஏந்திய உடா தேவி 32 பிரிட்டிஷ் வீரர்களை கொன்று குவித்து விட்டு வீரமரணம் அடைந்தார்.

உடா தேவியின் தியாகத்தை வீரத்தை காலம் மறந்துவிட்டபோதிலும் பிஜேபி அரசு மறந்து விட வில்லை.அவருக்கு லக்னௌவில் மிகப்பெரிய சிலையை உருவாக்கி வருகிறது. 2014 லோக்சபா மற்றும் 2017சட்டமன்ற தேர்தல்களில் பாசிக்கள் பிஜேபி பக்கம் வந்து விட்டதால் மாயாவதியின் தலித் ஓட்டு வங்கி உடைந்து விட்டது.

ஒரு காலத்தில் சமாஜ்வாடிக்கு எதிராகவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாகவும் இருந்த உத்தரபிர தேசத்தில் உள்ள 8% பிராமணர்களும் பிஜேபி பக்கம் வந்து விட்டதால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஜாடவ் இன தலித் மக்களை தவிர வேறு பெரிய அளவில் ஆதரவு இல்லை.

இதனால் மாயாவதி சமாஜ்வாடி கட்சியின் ஓட்டு க்களை நம்பியே இருக்கிறார். ஆனால் சமாஜ்வாடி
கட்சியில் இருந்து பிரிந்த முலாயம் சிங்கின் தம்பி சிவ்பால் யாதவ் உருவாக்கியுள்ள பிரகடிஷீல் சமாஜ்வாடி பார்ட்டி சமாஜ்வாடி கட்சியின் ஓட்டு வங்கியான யாதவ ஓட்டுக்களை பிரிப்பதோடு சமாஜ்வாடி போட்டியிடாத தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முழு அளவிலான யாதவ ஓட்டுக்களை பெற்று பகுஜன் சமாஜ் கட்சியை படு தோல்வியடைய வைக்கும்.

அதுமட்டுமன்றி மெகா கூட்டணி யில் இடம் கிடைக்கும் என்று எலவு காத்த கிளிகளாக காத்து நின்ற சஞ்சய் நிசாத்தின் நிசாத் பார்ட்டியும் டாக்டர் முகமது அயூப்பின் பீஸ்பார்ட்டியும் மாயாவதியின் அதிரடியான கூட்டணி முடிவினால் காங்கிரஸ் கூட்டணியிலோ அல்லது தனித்தோ போட்டியிட இருக்கிறார்கள்.

இந்த பீஸ் பார்ட்டி நிசாத் பார்ட்டி கூட்டணி யினால் தான் சமாஜ் வாடிக்கு செல்ல இருந்த முஸ்லிம் ஓட்டுக்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு செல்ல இருந்த நிசாத் இன மக்களின் ஓட்டுக்களும்
பிரிந்து 2017 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. இந்த நிசாத் இன மக்கள் வேறு யாரும் அல்ல. ராமருக்கு படகோட்டிய குகன் வழியில் வந்தவர்கள் தான்.

ஏற்கனவே முழு பலமில்லாத சமாஜ்வாடி பகுஜன் சமாஜ் கூட்டணி யை நிசாத் பார்ட்டி பீஸ் பார்ட்டி கூட்டணி மேலும் பலவீனமாக்கும் என்பதுடன் இந்த இரு கட்சிகளும் ராஷ்டிரிய லோக்தளம் காங்கிரஸ் கூட்டணி யோடு சேர்ந்தால் பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து உத்தர பிரதேசத்தில் பிஜேபிக்கு 60 தொகுதிகள் உறுதியாகி விடும்
.
அதனால் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பல கட்சிகளை இணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க வாய்ப்புகள் இருந்தும் மாயாவதி அதனை ஒதுக்கி விட்டு சமாஜ்வாடியுடன் மட்டும் கூட்டணி அமைத்ததன் மூலமாக உத்தர பிரதேசத் தில் பிஜேபி வெற்றி க்கு துணை புரிகிறார் என்றே நினைக்க தோன்றுகிறது.

  • கட்டுரை: விஜயகுமார் அருணகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe