குவாலியர்: நாட்டின் 70வது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் அமைச்சராக இருக்கும் இமர்த்தி தேவி குவாலியர் நகரில் குடியரசு தின உரையை வாசித்து கொண்டிருந்தார். திடீரென தனது உரையை நிறுத்திய அவர் மீதமுள்ளவற்றை வாசிக்கும்படி மாவட்ட ஆட்சியரை அழைத்துள்ளார். இதனையடுத்து ஆட்சியர் தொடர்ந்து உரையை வாசித்து உள்ளார்.

மத்திய பிரதேச மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அமர்த்தி தேவி மிக கடினமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார்! குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடியரசு தின உரை நிகழ்த்த வேண்டிய சூழல் அவருக்கு

குவாலியரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார் அப்பொழுது தன்னால் குடியரசு தின உரையை தொடர்ந்து வாசிக்க இயலாத நிலையில் மாவட்ட ஆட்சியர் பரத் யாதவை அழைத்து மீதமுள்ள உரையை வாசிக்க சொன்னார்

கலெக்டர் பதாங்கே… என்று கூறி அவரை அழைத்து, மைக்கிலேயே அவர் வாசிப்பார் என்று சொல்லி அமர்ந்தார். ஆளும் காங்கிரஸ் கட்சியின் மேல்நிலை வகுப்பைக் கடந்த அமைச்சர் ஒருவர் குடியரசு தின உரையை வாசிக்க கூட சிரமப்பட்டு ஆட்சியரை துணைக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கடந்த 2018 டிசம்பர் 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்றுக்கொண்டார் இவர்! குவாலியரில் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்தவர் 1997 முதல் 2000 வரை. பின்னர் அமர்த்தி தேவி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலராக 2002 2005இல் ஆனவர்

தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தவர். கடந்த இரு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்நிலையில் குடியரசு தின விழா உரையை தொடர்ந்து வாசிக்க இயலாமல் மாவட்ட ஆட்சியரிடம் பொறுப்பை சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...