சுப்பிரமணியசாமி மீது எனக்கு எப்போதும் மரியாதை இருந்ததில்லை என்றாலும் அவர் ஒரு நாரதர் என்கிற வகையில் அவரை எனக்குப் பிடிக்கும்.

இப்போது காங்கிரஸின் புதிய ‘அன்னை’ பிரியங்கா வதேரா குறித்து நான்கு குண்டுகளை வீசியிருக்கிறார்.

ஒன்று, பிரியங்கா வதேரா என்கிற பிரியங்கா “காந்தி”க்கு Bipoloar disorder நோய் இருப்பதாகச் சொல்கிறார். இது சாதாரண நோயில்லை. இது இருப்பவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு எந்த நேரமும் உட்பட்டு இருப்பார்கள். திடீர் திடீரென அடுத்தவர்களை வெறிகொண்டு தாக்குவார்கள். காரணமே இல்லாமல் அடிப்பார்கள். பிரியங்கா வீட்டில் வேலை செய்கிற எஸ்.பி.ஜி. ஜவான்களையும் பிரியங்கா ‘சாத்தி’யிருப்பதாகத் தெரிகிறது. அந்த ஜவான்கள் தன்னிடம் வந்து வேலைமாற்றல் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டதாகச் சொல்கிறார் சு. ஸ்வாமி.

இரண்டாவது, பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட்டுகளுடன் உள்ள தொடர்பு. பிரியங்காவின் கல்யாணம் யாரும் அறியாத ஓரிடத்தில் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட்டான ஃபரிதா அத்தவுலா என்கிற பெண்மணியால் நடத்தி வைக்கப்பட்டதாகச் சொல்கிறார் சுப்ரமண்யம் ஸ்வாமி. அந்தக் கல்யாயணத்திற்கு வர விரும்பிய ப.சிதம்பரத்தையும் வரவேண்டாம் என மேற்கண்ட காரணத்தைச் சொல்லி “அன்னை” சோனியா தடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அந்த ஃபரிதா மூலமாகத்தான் பெருமளவு பணம் ஹவாலா மூலமாக வெளிநாடு சென்றதாகத் தகவல். திருடர்கள் திருடர்களுடன்தான் கூட்டணி வைப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மூன்றாவது, பிரியங்காவுடைய மதம் எதுவென்று இன்றுவரை தெரியவில்லை. அவர் பிறந்தபோது பர்த் சர்ட்டிபிகேட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கிறார் ஸ்வாமி.

நான்காவது, பிரியங்காவுக்கு சீனாவில் பிஸினஸ் இருக்கிறது. அது என்னவென்று தெளிவுபடுத்த வேண்டியதும் அவசியம் என்கிறார்.

பிரியங்கா இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அனேகமாக ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகள் பிரியங்காவுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் என நம்ப இடமிருக்கிறது. வந்தவுடன் வாண வேடிக்கைகள் இருக்கலாம். அல்லது புஸ்வாணமாகலாம். எப்படியிருந்தாலும் சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகி யிருக்கிறது..!

  • பிஎஸ் நரேந்திரன்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...