spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஉண்மையிலேயே நம் அரசியல் அமைப்பு குல, மதங்களுக்கு அப்பாற்பட்டதா?

உண்மையிலேயே நம் அரசியல் அமைப்பு குல, மதங்களுக்கு அப்பாற்பட்டதா?

- Advertisement -

தெலுங்கில் – பிரும்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
(Source: ருஷிபீடம் மாதஇதழ் தலையங்கம் – பிப்ரவரி 2019)

நம் நாட்டில் அரசியல் கட்சிகள் குலங்களையும் மதங்களையும் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் குல மதங்களுக்கு அப்பாற்பட்டதாக பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசி வருகின்றன.
அவரவரும் தம் தம் குலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். மத விஷயத்திற்கு வருகையில் ஹிந்து மதத்தைத் தவிர பிற மதங்களைத் தட்டிக் கொடுத்து அவர்களின் ஆதரவுக்கு ஏங்குகிறார்கள். இவர்களின் இத்தகைய குல மதக் கொள்கைகளால் பாதிக்கப்படுவது இந்திய கலாசாரமும் நாட்டின் பொதுவுடைமையும்தான்.

‘ஜாதிகளை நீக்குவோம். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட சமுதாயத்தை உருவாக்குவோம்’ என்று கூறிக் கொண்டு ருத்திராட்சப் பூனை போல் வேஷம் போடும் ஊடகங்கள் கூட தம் ஜாதித் தலைவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுகின்றன.
சமீபத்தில் ஒரு மாநில முதல்வர் எவ்வாறாவது மீண்டும் தானே அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஜாதி மத வெறியைத் தூண்டும் வகையில் கீழ்மையான நடவடிக்கைகளில் ஈடுபடும் விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கும். இப்படிப்பட்ட செயல்கள் பிற மாநிலங்களிலும் பல விதங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நேற்று முன்தினம் வரை அரசாங்கத்திற்கு அவர் ஒத்துழைப்பு அளித்தபோது தாமும் ஜே ஜே என்று கோஷமிட்டவர்கள், தம் குலத் தலைவர் ஆதரவை நீக்கிக் கொண்டவுடன் தாமும் அவரைப் போலவே அரசாங்கத்தை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த கட்சித் தலைவரும் தொண்டர்களும் அவருடைய செய்தி நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து உண்மைகளை மறைத்தும் பொய்யை உண்மைபோல் காட்டியும் தம் ஊடக வியாபாரத்தை அமர்க்களமாக நடத்தி வருகிறார்கள். பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய செய்தி ஊடகங்கள் கூட இவ்வாறு ஜாதி வெறுப்பில் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.

இந்த ஆட்சி வெறி எத்தனை தூரத்திற்குச் சென்றுள்ளதென்றால் ஓட்டுக்காக நம்முடையதல்லாத அந்நிய மதத்தவர்களுக்கு வரங்களும் வாக்குறுதிகளும் அள்ளி வீசுமளவுக்கு சென்றுள்ளது. ‘இது தேச தர்மத்திற்கு எதிரானது, அநியாயம்’ என்று இதுவரை எந்த ஒரு மேதாவியும் வாய் திறந்து கேள்வி கேட்கவில்லை.

அரசாங்கங்களே அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களை முழுச் செலவையும் ஏற்று கட்டித் தரும் என்றும் அந்த மதத்திற்காக வேலை செய்பவர்களுக்கு பக்கா வீடுகளும் பிரத்தியேக ஒதுக்கீடுகளும் அளிக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கின்றன. இதற்கான தொகையை எங்கிருந்து எடுத்து வருவார்கள்?

அறநிலையத்துறையின் பிரிவில் வராத அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களின் செல்வத்தைத் தொடாத அரசாங்கங்கள் அவர்களின் வழிபாட்டு தலங்களை யாருடைய தாத்தா வீட்டு சொத்தினால் கட்டப் போகிறார்கள்? ஹிந்துக்கள் கேள்வி கேட்கவும் மாட்டார்கள். கண்டு கொள்ளவும் மாட்டார்கள். எனவேதான் இந்துக்களின் கோயில்களைக் கொள்ளையடிக்கும் அரசுகள் அந்த ஆதாயத்தையே பிற மத வழிபாட்டுத் தல நிர்மாணத்திற்கும் அவர்களுடைய சுக போகங்களுக்கும் செலவு செய்கின்றன.

மறுபுறம் அவர்கள் ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் கூட ஓட்டுக்காக பிற மதத்தவர்களிடம் சென்று அவர்களை அனுசரித்து நடந்து கொள்வதைப் பார்க்கையில் அருவருப்பாக உள்ளது. இது போன்றவர்களுக்கு நாங்கள் ஓட்டுப் போட மாட்டோம் என்று ஹிந்துக்களனைவரும் உறுதியாக முடிவெடுத்தால் உண்மையான மதசார்பற்ற அமைப்பு நிலை நிறுத்தப்படும்.
இத்தகைய பின்னணியில் ஹிந்து மத தர்மத்திற்கு தீங்கு விளைவிப்தற்கு பின்வாங்காத முதலமைச்சர்கள் ஹிந்து தர்ம விஸ்தரிப்பை தடுத்து நிறுத்துவதற்கும் பின்வாங்குவது இல்லை.

சில நாட்கள் முன்பு சனாதன தர்ம ரட்சணைக்காகவும் மத மாற்றக் கொடுமையிலிருந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் ஏற்பாடு செய்திருந்த ‘சமரசதா பவுண்டேஷ’ னுக்கு அறநிலையத்துறையும் திருமலா திருப்தி தேவாலயத்தாரும் பொருளுதவி செய்து வந்தார்கள். சமீபத்தில் அந்த உதவி நிறுத்தப்பட்டு விட்டது.
இது போன்ற செய்கைகள் மத மாற்றம் செய்யும் மதங்கள் கொடுக்கும் அழுத்தங்களாலேயே நிகழ்கின்றன என்பது நிச்சயம். ஆனால் எந்த இந்து அமைப்பும் கேள்வி கேட்பதில்லை.

தம் குலத்தைச் சேர்ந்தவன் பிற மத ஆதரவுக்காக பிறந்த மதமான இந்து மதத்திற்கு பெருந்தீங்கு செய்தாலும் தம் குலத்தைச் சேர்ந்தவன்தானே என்பதற்காக அவனையே தலையில் தூக்கி வைத்து ஆடுமளவுக்கு குலப் பைத்தியம் முற்றி இருக்கிறது.
‘ஹிந்து மதத்தில் குல அமைப்பு பெரிய குறை’ என்று ஒரு புறம் பிரச்சாரம் செய்து மத மாற்றம் செய்து வரும் மிலேச்ச மதங்கள் தம் மதங்களுக்கு மாறியவர்களை பழைய குலத்தைக் கொண்டே நடத்துகிறார்கள். அங்கே சேர்ந்த பின்னும் கூட இந்த குல பாரபட்சத்தை விடுவதில்லை. பின் அங்கே மாறியவர்கள் எதைச் சாதித்தார்கள்?

ஓட்டு வங்கி அரசியல் கொடுமை முதிர்ந்து போய் சில மாநிலங்களில் எண்ணிக்கை பலத்தை அதிகப்படுத்திக் கொண்டுள்ள பிற மிலேச்ச மதங்களைச் சேர்ந்தவர்கள் அனேக இடங்களில் ஹிந்துக்களை அடித்து விரட்டி அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவது ஹிந்து குடும்பங்களைச் சேர்ந்த தலைவர்களே என்பது வருத்தத்திற்குரியது.

பிறரை தம்மோடு சேர்ந்து வாழ விடாத மதத்தைச் சேர்ந்தவர்களோடு சமரசம் சாத்தியப்படுமா? ஹிந்துக்கள் அதிக மக்கட் தொகையில் இருந்தாலும் பிறரோடு சேர்ந்திருப்பதை நிராகரிப்பதில்லை. அதனால் அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் இருந்தால்தான் சமரசம் சாத்தியப்படும் என்பது சந்தேகமற்ற உண்மை.

அப்படிப்பட்ட இந்து தர்மத்திற்கு தீங்கு நேரிட்டால் சிறிது சிறிதாக நாட்டின் முன்னேற்றமே குன்றி விடும். அந்த ஆபத்து வராமல் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
தம் மதங்களே நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையோடு தினந்தினமும் தவிக்கும் இரண்டு மதங்களும் அரசியல் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசியல் கட்சிகள் எல்லாம் அவர்களை மகிழ்விப்பதையே தம் நோக்கமாகக் கொண்டு மும்முரமாக இயங்கி வருகின்றன.

அசுர சக்திகளின் கூட்டணிகள் இவர்களின் ஆதரவுக்காக ஏங்குகின்றன. ஹிந்துக்கள் சம்பந்தப்பட்டவரை மட்டும் ‘மதம் வேறு அரசியல் வேறு; மதவாதிகள் அரசியல் அமைப்பில் தலையிடக் கூடாது” என்று வியாக்கியானம் அளிப்பார்கள். ஆனால் அரசியலை அடக்கி ஆளுகின்ற அந்த இரு மதங்களின் நிலை என்ன? ஹிந்து மதத்தை அரசியலில் அடக்க முற்படும்போது அரசியலை வழி மாற்றுவதற்கு ஹிந்து மதம் போராடுவதில் தவறெதுவும் இல்லை.

ஓட்டுக்காக பிறரை சொறிந்து கொடுக்கும் தலைவர்கள் ஹிந்துக்களானாலும் சரி அவர்களை சிம்மாசனம் ஏற விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹிந்து தர்மத்தை சிதைக்காத தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் பின்வாங்கக் கூடாது.

குலம், மதம் பற்றிய தொடர்பின்றி இந்தியர்கள் அனைவருக்கும் சமமான நலன்களை அளிக்கும் விசாலமான உள்ளத்தை இயல்பாகக் கொண்ட ஹிந்து பாவனைகள் மூலம் மட்டுமே தேசத்தின் முன்னேற்றம் சாத்தியபடும் என்ற உண்மையை உணர வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe