கமல் அண்ணே.. இதோ போட்டு விட்டுட்டாருல்ல திராவிட ‘புரோஹிதர்’!

தான் பிறந்த இனத்தை, தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த இடத்தை, மண்ணை மக்களை இழிவுபடுத்தியோ கேள்வி கேட்டோ பேசினால் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக உலகம் சொல்லும் என்று தன்னைத் தானே நம்பவைத்துக் கொள்வதுதான் முற்போக்குத்தனம்!

அப்படி இல்லாமல், தான் பிறந்த இனத்தை, மதத்தை, மண்ணை, மக்களை, கலாசாரத்தை நேசித்து, அதற்கு அவப்பெயர் வராமல் காத்து, தானும் மதித்து நடந்தால் அது பிற்போக்குத்தனம்! இப்படித்தான் வாழ்க்கை முறைகளை சொல்லிக் கொடுத்திருக்கிறது இந்தியாவில் கம்யூனிஸம்!

இதில், மிகத் தேர்ந்த முற்போக்குவாதி, மிகத் தேர்ந்த பகுத்தறிவுவாதி அரசியல்வாதி நடிகர் கமல்ஹாசன். என்னதான் தன் தாய் மதத்தை, தாய் வழிப் பிறப்பை, குடும்ப மரபை அவமதித்து மேடைகளில் பேசியும் நடித்தும் வந்தாலும், என்னதான் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு, குருட்டுத்தனமாக ஈ.வே.ராவிய சிந்தனைகளைப் பேசிக் கொண்டிருந்தாலும், பிறப்பொழுக்கம் குன்றிப் போய் பிறந்த குடி மறந்தாலும், அதனை வைத்தே இந்த உலகம் அடையாளமிடும்! அதனை துல்லியமாக, தெளிவாக, தேர்ந்த வகையில் செய்துவிடும் திராவிடம்! காரணம் ஈவே.ராவியம் கற்றுக் கொடுத்திருப்பது அதைத்தானே!

கமல்ஹாசன் என்னதான் தன் குடிப் பிறப்பு ஒழுக்கமான கடமைகளை அறுத்து, அடையாளத்தை அறுத்தெறிந்து, முற்போக்குத்தனம் பேசிக் கொண்டிருந்தாலும், அவரை பார்ப்பன அடையாளத்துடன்தான் திராவிடியம் காண்கிறது என்பதை ஒவ்வொரு முறையும் நாம் வெளிப்படுத்தியே வந்துள்ளோம். இப்போது மீண்டும் ஒருமுறை திராவிடத் திமுக., அதனை வெளிக் கொண்டு வந்துள்ளது.

அண்மையில் கமல்ஹாசன் கூறிய கருத்துகளுக்கு எதிர்க்கருத்து தெரிவிக்க வேண்டிய திமுக., அவரது ஜாதியை இழுத்திருக்கிறது. குடிப் பிறப்பை இழுத்திருக்கிறது,. ஜாதிக்கென்று ஒரு புத்தி இருக்கும் என்று பதிவு செய்திருக்கிறது. அந்தக் குயுக்தியை வைத்துத்தான் தம் மீது சேற்றை வாரி இறைத்துள்ளதாக அது கூறியிருக்கிறது.

//அதில் கலைஞானி கமல்ஹாசனின் தோல் உரியத் தொடங்கியுள்ளது. நரித்தனத்தில் பெயர் போன ரத்த வார்ப்பல்லவா அவர். காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளார்//

இப்படி விமர்சித்துள்ளது முரசொலி கமலஹாசனை. அவரை என்ன சொல்லி திராவிடம் திட்டித் தீர்க்கக் கூடாது என்று பயந்து பயந்து கமல்ஹாசன் திரித்துப் பேசி வந்தாரோ அதே புள்ளியில் ஈவு இரக்கம் இல்லாமல் அடித்தே விட்டது திராவிடம்!

இப்போது அறிவாலய மடாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டிருக்கும் முந்தைய மடாதிபதியின் வாரிசு மு.க.ஸ்டாலின், மிகச் சிறந்த வகையில் திராவிட புரோஹிதராகத் திறம்படப் பணியாற்றி வருகிறார். அவரது வாக்கின் படியே இப்போது மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு பூணூல் மாட்டி விட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஐயோ பாவம் கமல்ஹாசன்… அதனால் தான் அடித்துக் கொண்டோம்.. குணங்கெட்டவங்கூடல்லாம் சேராத சேராத என்று!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.