சட்டையைக் கிழித்து விட்டுக் கொள்வது பற்றியும் கிழிஞ்ச சட்டை போட்டுக் கொள்வது பற்றியும் இப்போது கமல்ஹாசனுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வாய்த் தகராறு வாய்க்காத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

நானாக இருந்தால் இப்படி கிழிஞ்ச சட்டையை போட்டுக் கொண்டு வெளியில் வரமாட்ட்டேன்; போய் வேறு புதிய சட்டை போட்டுக் கொண்டு வெளியில் வருவேன் என்று கூறியிருந்தார் நடிகர் கமல்ஹாசன்

இது திமுக., தலைவர் மு.க.ச்டாலியையே சொல்வதாக நினைத்த திமுக.,வினர் அதற்கு பதில் தர தேடிப் ப்டித்து ஒரு போட்டோவை  இறுதியில் கண்டெடுத்தனர். அதில், கமல்ஹாசன் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு  கேரள முதல்வருடன் பேசிக் கொண்டிருந்த காட்சி இருந்தது. இதை அடுத்து, திம்க., வின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தைப் பகிர்ந்து கொண்டு, இப்படி கருத்து தெரிவித்திருக்கிறார்…

பொதுவாக அரசியலில் உடை அணிவதில் சில மரபுகள்,நெறிமுறைகள் உண்டு. கைத்தறி மற்றும் கதர் வெள்ளுடை வேட்டி சட்டையில் துவங்கி இன்று வண்ணங்களில் பேண்ட் சட்டை போட்டு மேடை ஏறுவதும் உண்டு. அதில் குறைகான முடியாத அளவிற்கு முறையானதாக இருக்கும். கல்லூரிகளில் கூட முறையான( Formal dress) உடைக் கட்டுப்பாடுகள் உண்டு.

ஆனால் உலகறிவு பேசும் மக்கள் நீதிமய்யத்யின் தலைவர் கமல்ஹாசனுக்கு முறையான உடை அணியவேண்டும் என்ற அறிவு மட்டுமல்ல. முட்டிக்கு கீழ் கிழிந்த ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்துள்ள படத்தை காண நேர்ந்தது. சமூக வளைத்தளங்களில் இருந்தது.இது உண்மையான….?

அரசியலில் பின்நவீனத்துவம், விமர்சனம், எதிர்வினைகள் என்பது ஏற்கத்தக்கது. ஆனால் கமல்ஹாசனின் உளறல்கள் அத்தகைகதயது அல்ல. அபூர்வராகங்கள் திரைப்படத்தில் காட்சி அமைப்பு ஒன்று நினைவுக்கு வருகின்றது. அதாவது அப்பா மகளை அடைய விரும்புவதும் , மகன் தாயை அடைய விரும்புவதுமாக இருக்கும். இது அரசியல் தத்துவார்துக்கு முரண் ஆகும்.அவரது சினிமாக் காட்சிகள் எவ்வாறு ஏற்க முடியாயததோ அப்படித்தான் அரசியல் உளறல்களும் உள்ளன.

அவரது தந்தையார் பரமக்குடி வழக்கறிஞர் சீனிவாசன் அவர்களை அறிவேன். மிகவும் மென்மையானவர் மட்டுமின்றி தீர்க்கமாக சிந்தித்து பேசுகின்றவர். 1970 நெடுமாறன் மதுரையில் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு வருவார். அவர் எனக்கு நல்ல பழக்கம்.அவரது மகனா இப்படி குழம்பிப் போய் தன் ரசிகர்களையும் குழப்பி வருகின்றார்? அரசியலில் அதிகம் உழைத்து தியாகம் செய்து நேர்மையான பலர் ரணப்பட்டு காணாமல் போன துயரங்களும் உண்டு. சில ஞானசூனியங்கள் எந்த களப்பணி இல்லாமல் தீடிர் அதிஷ்டத்தில் கோபுரத்தில் உச்சியில் ஒட்டிக் கொண்ட குப்பைகளும் உண்டு என்பதை நினைவூட்டக்கடமைப்பட்டிருக்கின்றேன்.

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...