19/10/2019 8:38 PM
அடடே... அப்படியா? தோல்வியின் நடுக்கத்தில்... திட்டித் தீர்க்கிறார் ராமதாஸை! வெட்கம் சூடு சுரணை பற்றி...

தோல்வியின் நடுக்கத்தில்… திட்டித் தீர்க்கிறார் ராமதாஸை! வெட்கம் சூடு சுரணை பற்றி ஸ்டாலின் பேசுகிறாரே… அடடே!

-

- Advertisment -
- Advertisement -

இன்று காலை அதிமுக., பாமக., கூட்டணி குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தாரோ இல்லையோ… காலை முதலே கடும் எரிச்சலிலும் புகைச்சலிலும் கத்திக் கொண்டிருக்கிறார்கள் திமுக.,வினர். கூடவே ஊடகங்களும்!

கடந்த 2009ல் அதிமுக.,வுடன் கூட்டணி வைத்திருந்தார் பாமக., ராமதாஸ்!! பின்னர் இரு திராவிட கட்சிகளையும் எதிர்த்தே அரசியல் செய்து வருகிறார். இந்நிலையில் திமுக.,வுடன் பாமக., கூட்டணிப் பேச்சில் இருப்பதாக தகவல் வெளியானது. அன்புமணி ராமதாஸும் கூட, இரு கட்சிகளுடனும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார். என்ன ஆனதோ.. திமுக.,வுடன் கூட்டணி இல்லை என்று முடிவு கட்டி, அதிமுக.,வுடன் கைகோத்துக் கொண்டுள்ளது பாமக.,!

ஏற்கெனவே திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் துண்டு போட்டு வைத்திருக்க, பாமக., இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று கறாராகச் சொல்லிக் கொண்டிருக்க, இப்போது பாமக., அந்தக் கூட்டணியில் இல்லை! இதனால் மகிழ்ச்சி அடையப் போவது திருமாவளவன். ஆனால் கடும் எரிச்சலிலும் புகைச்சலிலும் சிக்கிக் கொண்டிருப்பது மு.க.ஸ்டாலின்! கம்பெனி ஓனருக்குத்தானே தெரியும் வியாபாரத்தின் கஷ்ட நஷ்டங்கள் என்று கலாய்க்கிறார்கள் ஸ்டாலினின் நிலையை!

அதற்கு ஏற்றதுபோல், ஸ்டாலின், கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார் ராமதாஸை!

“ராமதாசுக்கு நாட்டை பற்றி கவலையில்லை, பணத்தை பற்றித்தான் கவலை, ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை; அதிமுக – பாமக ஏற்கெனவே கூட்டணி வைத்து தோற்றுப் போனவர்கள்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? திரை மறைவில் இவர்களுக்கு இடையில் தற்போது நடைபெற்றது என்ன? பேசப்பட்ட பேரம் என்ன? ஏன் விரக்தி நிலையில் ஸ்டாலின் தன்னிலை இழந்து கோபத்தில் குதிக்க வேண்டும்?

இப்போது திமுக.,வினர் பாமக.வின் பத்தினித் தன்மை குறித்து பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் கருத்தை உள்வாங்கி அதற்கு ஏற்ப பாமக., பத்தினி தன்மை குறித்து திராவிட இயக்கங்களின் கலாச்சராத்துக்கே ஏற்ற நவ நாகரீகக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்!

அதோடு, திமுக.,வுக்கு துணையாக ஜால்ரா அடித்து வரும் ஒரு ஆங்கில பத்திரிகை ஜாம்பவான், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இனி இல்லை என்று அன்புமணி பேசும் பழைய வீடியோவை மீண்டும் இப்போது பதிவு செய்திருக்கிறார்.

அதே நேரம் இப்படியும் இரு கருத்தைச் சொல்கிறார் பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன். அவர் கூறுவது…

அறிவாலய பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடிஞ்சி பாமக அந்த பக்கம் போயிருந்தா, அன்புமணி புத்தனா போயி. இந்த வீடியோவையே போட்டிருக்க மாட்டாரு..

நாம ஏற்கனவே ரெண்டு தடவை பளிச்சின்னு சொல்லி யிருக்கோம்.. தமிழ்நாட்டுல பரஸ்பரம் கூட்டணி வெச்சிக்க்காத ரெண்டே கட்சி, திமுகவும் அதிமுக வும்தான்.. மற்றபடி எல்லா கட்சிகளும் இதுங்ககூட மாறிமாறி கூட்டணி வெச்சிக்கிட்டவங்கதான்.. வெக்கப்போறவங்கதான்..

ஆனா அதிமுகவும் திமுகவும் மாறிமாறி கூட்டணி வெச்சிக்காத கட்சிகளே கிடையாது..இதுல கொடுமை என்னன்னா? இந்த ரெண்டோட மாறி மாறி கூட்டணி வெக்கிற கட்சிங்க மட்டும் சந்தர்ப்பவாத கட்சியாம்..

ஆனா மாறி மாறி கூட்டணி வெக்கிற அதிமுகவும் திமுகவும் யோக்கியமான கட்சிங்களாயிடுது..

ஒரு சைடு, ஆள் மாறி ஆள் மாறி கொஞ்சுறதுக்கு நாலு எடத்துலு கட்டில்போட்ட கேசுங்க லிஸ்ட்….

இன்னொருசைடு நாலு பேரை கொஞ்சுன பார்ட்டியா பார்த்து தேடித்தேடிப்போய் கட்டில் போடற கேசுங்க…

இந்த ரெண்டு கேசுல எது யோக்கியம்? அப்டியிருக்கறப்போ, என்ன ஈர வெங்கயாத்துக்கு ஒழுக்கத்தை தேடிக்கிட்டு…ஓவராவும் கூவிக்கிட்டு..பன்னீ கய்ஸ்..

தேர்தல் அரசியல்ல, வெற்றி மட்டுந்தான் எல்லா ருக்குமே லட்சியம். அப்படியிருக்கிறப்போ, அரசியல் வாதிங்க பேச்சையெல்லாம் அப்படியே வரிக்கு வரி நம்புறவங்க எப்பேர்பட்ட காமடி பீசா இருப்பாங்க?

அந்த இங்லீஷ் ஜாம்பாவனுக்குத்தான் சொல்றேன்..

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: