இழுத்துப் பிடிக்கும் தேமுதிக.,! கூட்டணி பேசும் பாஜக.,! மூக்கை நுழைக்காத அதிமுக.,!

vijayakanth piyush goyalவிஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்தியதாக மத்திய அமைச்சரும் பாஜக., தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அதிமுக., பாஜக., கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்திருந்தார் பியூஷ் கோயல். பாஜக., அதிமுக., கூட்டணி இறுதி செய்யப் பட்டுவிட்ட நிலையில், தொடர்ந்து தேமுதிக., தலைவர் விஜயகாந்தை சந்திப்பதற்காக அவரது விருகம்பாக்கம் வீட்டுக்குச் சென்றார்.

விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல், விஜயகாந்த் உடல் நலம் பெற்று நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என  வாழ்த்து தெரிவித்தேன்.

vijayakanth piyushgoyalமக்களவை தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாஜக தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் என்று நினைக்கக் கூடாது. தனிப்பட்ட முறையில் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் பெற வாழ்த்துக் கூறவே வந்தேன் என்ரார் பியூஷ் கோயல்!

ஆயினும், பாமக.,வுக்கு 7 தொகுதிகள் கொடுக்கப் பட்டதால், தேமுதிக., அதை விட அதிக தொகுதிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவடையவில்லை என்று கூறப் படுகிறது. இருப்பினும், தேமுதிக.,வின் சுதிஷுடன் பியூஷ் கோயல் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

piyush goyal sudheesh dmdk

தமிழகத்தில் அதிமுக., தலைமையில் மெகா கூட்டணி அமைவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஏற்ப, முதலில் பாஜக., மேலிடத்துடன் அதிமுக., பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பின்னர் பாமக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுக., பாமக., கூட்டாக கூட்டணி குறித்து அறிவித்து, உறுதி செய்தன. அப்போது பாஜக.,வினர் யாரும் இல்லை.

இந்நிலையில் தேமுதிக.,வுடன் கூட்டணிப் பேச்சைத் தொடர பாஜக.,வின் பியூஷ் கோயல்தான் சென்றிருந்தார். அதிமுக., ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.