இலவு காத்த கிள்ளைப் போலே காத்திருந்து, இட ஒதுக்கீடு வைத்திருந்து.. கடைசியில் திடீரென கழன்றுகொண்டு அதிமுக., அணியில் போய் பாமக., ஒட்டிக் கொண்டதில், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவமோ கோவம். வெறுப்பையெல்லாம் வெளிக்காட்டி விட்டார். சூடு இருக்கா சுரணை இருக்கா… வெக்கம் கெட்ட என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி தன் உள்ளத்துச் சூட்டை வெளிப்படுத்த… இன்று டிவிட்டரில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பாமக., திமுக., அரசியல் பின்புலமுள்ளவர்கள்!

அதிமுக., ஏன் பாமக.,வுக்கு 7 தொகுதியும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் கொடுத்தது என்றால்… அடுத்து வரும் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிமுக.,வுக்கு பாமக., தனது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தரும் என்ற உறுதிமொழியால்தான்!

காரணம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாமக., குறிப்பிடத் தக்க ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டிருக்கிறது. சொல்லி வைத்தாற்போல், டிடிவி தினகரனுடன் ஓடிப் போய் பதவி இழந்துவிட்ட எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் வட மாவட்டங்களில் இருந்தவர்களே! இப்போது, அதிமுக., அரசு இன்னமும் இரு வருடங்களைக் கடத்த வேண்டுமென்றால், இந்த 21 இடைத் தேர்தல் தொகுதிகளில் வென்றாக வேண்டும். அதனால் ஆட்சியைத் தக்க வைக்க, பாமக.,விடம் பேசிய பேரத்தில் எடப்பாடி சற்றே தெம்பாகிவிட்டார்.

அதே நேரம், திமுக., போட்ட  கணக்கும் அதுதான்! வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள பாமக., மூலம் இடைத்தேர்தலில் வென்றுவிட்டால், அதிமுக., ஆட்சியை அகற்றி விட்டு, திமுக., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடலாம். தனது முதல்வர் நாற்காலி கனவு நிறைவேறிவிடும்! ஆனால் அதற்கு வழி இல்லாமல் செய்துவிட்ட ராமதாஸை பிய்த்துப் பிறாண்டி வருகிறார் ஸ்டாலின்! அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வெக்கம் மானம் சூடு சுரணை எல்லாம், அரசியலில் இருக்கும் எவருக்குமே சொந்தமில்லாதது எனும் போது, ராமதாஸை மட்டும் ஏன் இவர் குறிபார்த்து சொல்கிறார் என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டார்கள் தமிழகத்தில்!

அதே நேரம், பாமக., இருக்கும் அணியில் இருக்க மாட்டேன் என்று சொன்ன திருமாவளவனை தனது முதல்வர் நாற்காலி ஆசைக்காகத்தான், கூட்டணி இல்லை தோழமைக் கட்சி என்று சொல்ல வைத்து, பாமக.,வை  இழுப்பதற்காக என்னவெல்லாமோ செய்தும் இழந்து விட்டதற்காக இப்போது கோபத்தில் குதிக்கிறார். ஸ்டாலினின் குறி நாடாளுமன்ற தேர்தல் என்பதை விட 21 தொகுதி இடைத்தேர்தல் என்பது இப்போது உறுதியாகியிருக்கிறது. எனவே மாம்பழத்தை சுவைப்பதற்காக கடித்துத் துப்பிப் போட்ட எச்சில் கொட்டையாக திருமாவளவனை வைத்திருந்தும், மாம்பழம் கைநழுவிப் போனதால் ஏற்பட்ட ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்டார் ஸ்டாலின்!

இப்போது ஸ்டாலினின் குயுக்தி அரசியலும் ஏமாற்றமும் தெரிந்து கொண்டதால், இணையதளங்களில் பிரித்து மேய்கிறார்கள். # மானம்கெட்டதிமுக #மண்டியிட்டபாமக என்று இரு ஹேஷ் டேக்குகள் இன்று காலை முதலே ட்ரெண்டிங் ஆயின. அதே நேரம், காங்கிரஸ் கூட்டணிக்காக முயன்று #மண்டியிட்டதிமுக என்ற டிவிட்டர் பதிவும் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

டிவிட்டரில் இந்த ஹேஷ் டேக்குகளைப் பார்க்கும் போது, இரு தரப்பு பழைய வரலாறுகளையும் அழகாக எடுத்து அசை போட்டு  காறித் துப்பி தலைமுறை தலை முறையா தோண்டி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தலைவனும் தப்ப முடியவில்லை..எவ்ளோ ஷார்ப்பா ஞாபகம் வெச்சி அடிக்கிறாங்கடா சாமி என்றுதான் தோன்றுகிறது இவற்றைப் படிக்கும் போது!

இதில் ஒருவரின் முழு நீள கருத்துகள்… சூடு சுரணைதான் இப்போதைய ஹாட் டாபிக் என்பதால்..!

” டாக்டர் ராமதாஸுக்கு வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை..ஆம்பூரில் மு.க. ஸ்டாலின் …

” உன் அப்பன் கருணாநிதி 3 மனைவிகளை கட்டி கொண்ட போது உனக்கு வெட்கமாக இல்லையா …?

” உன் தங்கை கனிமொழி மூன்று கணவர்களை மணந்து கொண்ட போது உனக்கு சூடு இல்லையா.?

” மதுரை விமான நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி வந்த போது “கருப்பு கொடி” காட்டுகிறோம் என சொல்லிவிட்டு செருப்பும், ஆசிட் முட்டையும் வீசி, கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு, அடுத்த தேர்தலில் “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியை தருக” என சொன்ன போது உங்களுக்கு வெட்கமில்லையா.?

” வாழ வழி இல்லாமல் போன உன் அண்ணன் மு.க.முத்து அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவிடம் கையேந்தி பணம் வாங்கிய போது உனக்கு சூடு இல்லையா..?

” வை.கோபாலசாமியால் உயிருக்கு ஆபத்து என கட்சியில் இருந்து நீக்கி விட்டு, அதே வைகோவின் கட்சியான ம.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி வைத்த போது உங்களுக்கு சூடு இல்லையா.?

” அ.தி.மு.க.கூட்டணியில் போட்டியிட்ட திருமாவளவனோடு, அடுத்து வந்த தேர்தலில் கூட்டணி அமைத்த போது உனக்கு வெட்கமில்லையா.?

” உலக மகா ஊழலில் உன் தங்கை ” திகார் ” சிறைக்கு சென்றது உனக்கு வெட்கமில்லையா..?

” சொந்த அண்ணன் அழகிரிக்கே பதவி கொடுக்காத வக்கில்லாதவன், துப்பில்லாதவன் என்பதை நினைத்து பார்க்கும் போது உனக்கு வெட்கமில்லையா..?

” 2009 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ம.க.கூட்டணி தோற்றது என கூறும் உன் கட்சி அடுத்து வந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தோற்ற போது உனக்கு சொரணை இல்லையா..? அதே தேர்தலில் அ.தி.மு.க.37 இடங்களிலும், பா.ம.க.தர்மபுரியிலும், பா.ஜ.க.கன்னியாகுமரியிலும் ஜெயித்ததை நினைத்து பார்க்கும் போது உனக்கு வெட்கமில்லையா..?

” பண்டாரம் பரதேசிகளோடு கூட்டு சேர மாட்டோம் என பா.ஜ.க.வை விமர்சனம் செய்து விட்டு, மத்திய அமைச்சர் பதவிக்காக ” பல் இளித்து ” கொண்டு கூட்டணி வைத்த போது உங்களுக்கு சொரணை இல்லையா…?

” அண்மையில் நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் “குக்கர் தினகரனிடம்” கூனிக்குறுகி டெபாசிட் இழந்தது உங்களுக்கு வெட்கமில்லையா.?

” எங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்கிறது.? எங்களுக்கு தி.மு.க.காரன் ஓட்டு தேவையில்லை.? உனக்கு இது மூன்றும் இருந்தால் ராமதாஸ் சாதிக்காரன் ஓட்டு எனக்கு தேவை இல்லை என்று சொல்வாயா..?

  • இப்படியாகப் போகிறது ஸ்டாலினுக்கான பதில்கள்! டிவிட்டர் பதிவுகளில் இன்னும் சில…

பதவிக்காக பல வருசமா காங்கிரஸ் கால்லையே விழுந்து கிடக்க திமுக கொத்தடிமைகளா, நீங்க பாமகவப் பத்தி பேசலாமா?

 

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...