அ(சைக்கமுடியாத).தி.மு.க… அதானே சொல்றீங்க மிஸ்டர் ஸ்டாலின்!

stalin out assembly2

சென்னையை அடுத்த கொரட்டூரில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது… பாஜக.,வுடன் கூட்டணி சேரக்கூடாது என ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். ஆனால், ஜெயலலிதா பெயரை வைத்து ஆட்சி நடத்தும் தற்போதைய அதிமுகவினர், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றனர், அதற்கு மிரட்டலே காரணம் என்றார் மு.க.ஸ்டாலின்!

அதிமுக – பாஜக என்னதான் கூட்டணி வைத்தாலும் திமுகவை ஆட்டவோ, அசைக்கவோ, தோற்கடிக்கவோ முடியாது எனக் கூறினார்.

அதிமுகவைத் தொடர்ந்து விமர்சித்து, புத்தகமும் வெளியிட்ட பாமக, ஏதோ ஒரு ஆசையின் காரணமாக கூட்டணியில் இணைந்திருக்கிறது, இந்தக் கூட்டணி வெற்றி பெறாது என்று பேசினார்.

உண்மையில் 99இல் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு 2004ல் கூட்டணி வைத்தவர்! அப்போது அவர் சொன்ன செலக்டிவ் அம்னீஷியா என்ற சொல் இப்போது ஸ்டாலினுக்கே பொருந்துகிறது! .

முக்கியமாக, அதிமுக.,வை அ(சைக்கமுடியாத)திமுக., என ஒப்புக் கொண்டிருக்கிறார்!

Advertisements

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.