மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு! ஆனாலும்… ரஜினியின் முடிவையே கமலும் எடுக்கிறாரா?

127

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் திடீர் அரசியல்வாதி அவதாரம் எடுத்தார். அவ்வப்போது டிவிட்டரில் அரசியல் கருத்துகள் தெரிவித்து வந்த அவர், பின்னாளில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் அமைப்பைத் தொடங்கினார்.

இன்று மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. மேலும், மக்களவைத் தேர்தலும் களை கட்டியுள்ளது. இருப்பினும், தமக்கு ஊழலுக்கு எதிரான கொள்கை உண்டு என்பதால், கறை படியாத கரங்களுடன் இணையவே காத்திருப்பதாகவும், கை கொடுத்து தம் கரத்தைக் கறையாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்றும் கமல் கூறிவிட்டதால், அதிமுக., திமுக., என இரு அணிகளுடனுமே கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க இயலாமல் போனது கமல்ஹாசனுக்கு!

இந்நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக கூறிக் கொண்டிருந்த கமல்ஹாசனுக்கு தற்போது மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஆர்வம் இல்லை என்று கூறப் படுகிறது. இந்த விவகாரத்தில் கட்சியே தொடங்காமல், அரசியல் செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அறிவித்து விட்டதைப் போல், தாமும் சட்டப்பேரவைத் தேர்தலில் முழு வீச்சில் களம் இறங்கலாம் என்றும், அதகாக நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று தனது கட்சியின் ஓர் ஆண்டு நிறைவைக் கொண்டாடி வருகிறார் கமல்ஹாசன். இதை அடுத்து இன்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றிப் பேசினார். அப்போது அவர், மக்கள் பலம் இருப்பதாலேயே தேர்தலில் தனித்து நிற்போம் என அறிவித்தேன். தமிழகமெங்கும் மக்கள் நீதி மய்யம் எனும் குடும்பம் பரவி உள்ளது. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது. பெண்கள் ஆற்றும் உதவி, வியத்தகு உதவி என்று பேசினார். இருப்பினும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தெளிவாகச் சொல்லவில்லை!
.
தொடர்ந்து இன்று மாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதி வெள்ளபள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு வலைகளை வழங்கிப் பேசும் கமல், மாலை 6.30க்கு திருவாரூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


உங்கள் தமிழ் தினசரி செய்திகளின் வாக்குப் பெட்டி…
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்!


அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?!

View Results

Loading ... Loading ...

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...